Thursday, September 5

சந்தை நிலவரம் (Market Status)



நண்பர்களுக்கு வணக்கம் !

எந்த ஒரு தொழிலிலும் அதன் தற்போதைய சந்தை நிலவரம் (Market Status) பற்றி தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம். அது நமது ஏற்றுமதி தொழிலுக்கும் அடங்கும்.

ஏற்றுமதி தொழிலில் ஈடுபட புதிதாக நினைக்கும் எல்லோருக்கும் ஏற்படும் பொதுவான ஒரு கேள்வி. எந்த பொருளை ஏற்றுமதி செய்வது?

என்னை தொடர்பு கொள்ளும் ஒரு சில நண்பர்கள் கேட்கும் முதல் கேள்வியே இதுவாகத்தான் இருக்கிறது. காரணம், அவர்களுக்கு ஏற்றுமதி துறையின் தற்போதைய சந்தை வாய்ப்புகள் பற்றி தெரிந்திருக்க வில்லை.
முதலில் ஏற்றுமதி என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஏற்றுமதி என்பது இறக்குமதியாலர்களின் சந்தை. அவர்களுக்கு என்ன தேவைப்படுகிறதோ அதைத்தான் அவர்கள் கேட்பார்கள்.

அதை விட்டுவிட்டு 'என்னிடம் இந்தெந்த பொருளெல்லாம்  இருக்கிறது, இதை வேண்டுமானால் நீ வாங்கிக் கொள்' என்று சொல்வது வேடிக்கையான ஒன்று.

ஒரு கடைக்கு நீங்கள் செல்கிறீர்கள். கடைக்காரரிடம் அரிசி கேட்கிறீர்கள், கடைக்காரரோ 'அரிசி இல்லை, வேண்டுமானால் நெல் இருக்கிறது வாங்கிக் கொள்ளுங்கள்' என்று சொன்னால் நீங்கள் வாங்குவீர்களா? மாட்டீர்கள்தானே.

அதைப்போலத்தான் இறக்குமதியாளர்களும் அவர்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் அவர்கள் கேட்பார்கள்.

எனவேதான் சொல்கிறேன், அவர்களுக்கு என்ன தேவை என்பதை முதலில்  தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதுதானே எனக்குத் தெரியவில்லை என்கிறீர்களா? கவலை வேண்டாம்.

அதற்கு உங்களுக்கு ஏற்றுமதி துறையின் தற்போதைய சந்தை நிலவரம் (Market Status) பற்றி தெரிந்திருந்தாலே போதும். தாராளமாக நீங்கள் ஏற்றுமதி செய்யலாம்.

அதனைப் பற்றிய விபரங்களை இனி வரும் பகுதிகளில் சந்தை நிலவரம் (Market Status) என்ற தலைப்பினில் தருகிறேன். 

அதில் இந்தியாவிலிருந்து என்னென்ன பொருள் ஏற்றுமதி ஆகிறது? அவை எந்தெந்த நாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது? என்ன விலைக்கு ஏற்றுமதி ஆகிறது? போன்ற அறிய பல விபரங்களை தருகிறேன். 

தொடர்ந்து படியுங்கள், சந்தை நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நிச்சயம் உங்களுக்கு உதவும்

அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா

No comments:

Post a Comment