Thursday, September 19

ஜிமெயிலின் புதிய இன்பாக்ஸ்


புதிய புதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து தனது பல பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும், சில பயனர்களுக்கு துன்ப அதிர்ச்சியையும் தருவது ஜிமெயில் மட்டுமே. அவ்வகையில் தற்போது வந்துள்ள புதிய வசதி உங்கள் ஜிமெயில் இன்பாக்சை Category ஆக பிரித்துக் கொள்ளும் வசதி. இது பலனுள்ளதா இல்லையா என்பதை பதிவில் காண்போம்.

நாம் நம் மின்னஞ்சல் முகவரியை பல தளங்களில் தருகிறோம். அவற்றில் இருந்து நமக்கு அடிக்கடி மின்னஞ்சலும் வரும். முன்பு இவை எல்லாமே ஒரே பகுதியில் வந்து மிக அதிகமான மின்னஞ்சல்கள் படிக்கப்படாமல் இருக்கும். தற்போது வந்துள்ள புதிய இன்பாக்ஸ் மூலம் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை ஐந்து Category ஆக பிரித்து வைத்துக் கொள்ளலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.


Primary: ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து வரும் மின்னஞ்சல்கள் இந்த Category – க்குள் வரும்.

Social: Facebook, Google+ போன்ற Social Network தளங்களில் இருந்து வரும் மின்னஞ்சல்கள் இதில் இருக்கும். பெரும்பாலும் நீங்கள் அந்த தளங்களில் Register செய்து இருப்பீர்கள்.

Promotions: ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் தளங்களில் இருந்து வரும் Offer-கள் இதில் இருக்கும். இவற்றை மார்கெட்டிங் மின்னஞ்சல்கள் என்று சொல்லலாம்.

Updates: நீங்கள் ஏதேனும் தளத்தை தொடர்பவர் என்றால் அதிலிருந்து வரும் மின்னஞ்சல்கள் இதில் வரும்.

Forums: ஆன்லைன் குரூப், Forums போன்றவற்றில் இருந்து வரும் மின்னஞ்சல்கள் இதில் இருக்கும்.

இது பற்றிய வீடியோ: 

ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலை ஒரு Category-இல் இருந்து மற்றொன்றிற்கு மாற்ற அதை Drag செய்து தேவையான Category-இல் சென்று Drop செய்துவிட்டால் போதும். Drop செய்த பின்னர் எதிர்காலத்தில் அதே Category வரவேண்டுமா என்பதற்கு Yes என்று கொடுத்து விடுங்கள்.


இந்த வசதி வராதவர்களுக்கு:

உங்கள் ஜிமெயில் கணக்கில் Settings Gear ஐகான் மீது கிளிக் செய்து Configure Inbox என்பதை தெரிவு செய்தால் இந்த வசதி வரும். ஏற்கனவே வந்து மூன்று Category மட்டும் இருக்கும் நபர்களும் இதில் மற்ற இரண்டையும் Enable செய்து கொள்ளலாம்.

இதை Disable செய்வது எப்படி?

Settings Gear Icon மீது கிளிக் செய்து Configure Inbox என்பதில் Primary தவிர மற்ற அனைத்து Category – களையும் Uncheck செய்து Save செய்து விடுங்கள். இந்த வசதி மறைந்து விடும்.

இது பலருக்கு ஆரம்பத்தில் குழப்பத்தை தரலாம். அதனால் தான் மேலே துன்ப அதிர்ச்சி என்று சொன்னேன் . கொஞ்சம் நாட்கள் ஆனால் சரி ஆகிவிடும்.

இந்த வசதி மொபைல் மூலம் ஜிமெயில் பயன்படுத்தினாலும் கிடைக்கும்.

No comments:

Post a Comment