Saturday, September 21

உங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய



வலைப்பதிவை நடத்துவதே போதாத வேலையென இருக்கும் போது நாம் கஷ்டப்பட்டு எழுதும் பதிவுகளை மற்றவர்கள் சுலபமாக அதை காப்பி செய்து தங்களின் வலைப்பூவில் போட்டு பேர் வாங்கிக் கொள்கின்றனர்.மேலும் எரிச்சலூட்டும் விதமாக காப்பியடித்த பதிவுகளையும் திரட்டிகளிலும் இணைத்து விடுவார்கள். சில புண்ணியவான்கள் என்னமோ அவர்களே சொந்தமாக எழுதியதாக நினைத்து அதற்கு பதிவு நன்று பகிர்வுக்கு நன்றி என்று கருத்துரையும் இடுவார்கள். இந்த மாதிரி மட்டமான எண்ணமுடைய சிலருக்கிடையில் சில தளங்களும் காப்பி செய்கின்றன. காப்பி செய்வதைத் தடுக்க எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் இவர்கள் நிறுத்துவதாக இல்லை...........



காப்பி செய்து போடுவதாக இருந்தால் பதிவின் இறுதியில் எழுதியது யாரென்றும் நமது பதிவிற்கான இணைப்பையும் கொடுத்தால் பரவாயில்லை. இதனால் வரும் பிரச்சினை என்னவென்று பாருங்கள். கூகிளில் தேடும் போது ஒவ்வொரு நேரம் நமது பதிவுகள் பின்னாடியும் காப்பியடிக்கப்பட்ட பதிவுகள் முன்னேயும் வந்து விடும். கூகிள் தேடலில் தேடுபவர்களும் அந்த தளத்திற்குத் தான் முதலில் செல்வார்கள். சில நேரம் தேடலில் நமது பதிவுகளே இருக்காது. நமது வலைப்பூவிற்கு என இருக்கும் குறிப்பிட்ட தேடல் குறிச்சொற்களும் (Search Keywords) கூகிளால் நிராகரிக்கப்படும். இதை விட கொடுமை நாம் தான் காப்பியடித்துள்ளோம் என உல்டாவாக நினைத்து கூகிள் நமது வலைப்பூவை நீக்கிவிடும் அபாயமும் உள்ளது.

நமது பதிவுகளை எங்கெங்கே எந்த தளங்களில் காப்பி செய்துள்ளார்கள் என்பதை அறிய கீழ்க்கண்ட நான்கு இணையதளங்கள் உதவுகின்றன.

1.Copyscape

இந்த இணையதளம் உங்கள் பதிவுகள் pdf இல், ஃபாரங்களில், வலைத்தளங்களில் என எங்கிருந்தாலும் கண்டுபிடித்து கொடுக்கிறது.



2. Duplichecker

இதில் Text கோப்பில் இருக்கும் வரிகளை அப்லோடு செய்தும் கூட காப்பியடிக்கப்பட்ட பதிவுகளைத் தேடலாம்.

3. Plagiarisma

இத்தளத்தில் குறிப்பிட்ட பதிவின் முகவரி அல்லது குறிப்பிட்ட சொற்களைக் கொடுத்தும் தேடலாம். இதிலும் txt, rtf, doc போன்ற கோப்புகளில் இருக்கும் கட்டுரைகளை அப்லோடு செய்தும் தேடலாம்.

4. Plagium

இத்தளம் 25000 எழுத்துகள் வரை தேடக்கூடியது.இதில் நமது பதிவுகள் காப்பியடிக்கப்பட்டால் மின்னஞ்சலில் அறிவிப்பு வருமாறு செய்யலாம்.

எனது பதிவுகள் பல இடங்களில் காப்பியடிக்கப்பட்டுள்ளன. ஒருவர் கூட எனது தளத்திற்கான இணைப்பு கொடுக்கவில்லை. பதிவுகளை காப்பி செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டால் அவர்கள் தான் முக்கியத்துவம் பெறுவார்கள். இவர்களை என்ன செய்யலாம்?

No comments:

Post a Comment