Saturday, September 21

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?


இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? 


இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம்? இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்? முதலீடின்றி எப்படி இன்டர்நெட் மூலம் சம்பாதிக்கலாம்? வீட்டில் இருந்தபடி எப்படி கம்ப்யூட்டர் மூலம் சம்பாதிக்கலாம்? இணையத்தளத்தில் உள்ள சிறந்த பார்ட் டைம் வேலைகள் எவை? இந்த வினாக்களுக்கு ஏற்ற விடைகளை கொண்டதே இந்த வலைப்பக்கம்.
அறிமுகம் - இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?இணையத்தில் ஓய்வு நேரங்களில் பார்ட்-டைம் வேலைகள் செய்து நன்கு பயன் பெறலாம். உங்களது முயற்சிக்கு வாழ்த்துகள். கூகிள் தேடுபொறியில் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது குறித்த தேடல்களை மேற்கொண்டேன். டேட்டா என்ட்ரி வேலைகள், சர்வே வேலைகள், ஏட்(Ad) போஸ்டிங் வேலைகள் என நிறைய ரிசல்ட்டுகள் கிடைத்தன.
சரி அந்த வெப்சைட்களில் இணைந்து வருமானம் பெற்று விடலாம் என்ற நினைப்போடு அதில் நுழைந்தேன். அதிலும் ஏதேதோ கேட்பதற்கு இனிப்பாக சொல்லி விட்டு, இறுதியாக வெறும் 1000 ரூபாய் செலுத்திவிட்டு இப்பொழுதே பணம் ஈட்டுங்கள் என்று தெரிவித்து இருந்தார்கள். இதர ரிசல்ட்டுகளிலும் இது போன்ற ஏமாற்று வேலைகள் தான். ஒரே ஏமாற்றம். இருந்தாலும் ஓய்வு நேரத்தை எப்படியாவது பயன்படுத்தி விட வேண்டும் என்ற நினைப்பு மேலும் தேட தூண்டியது.
இறுதியாக விடைகளை பெற்றேன். இன்று இணையத்தை பயன் படுத்தி ஓய்வு நேரங்களில் சம்பாதித்து வருகிறேன். இதோ அந்த வழிகள் கீழே உள்ளன. நமது எண்ணம் இணையத்தை பயன்படுத்தி சம்பாதிப்பது மட்டுமே. எனவே நாம் பணிபுரிய போகும் வலைத்தளத்தில் நமது உழைப்பை மட்டும் தந்தால் போதும். இனிமேல் எதாவது வெப்சைட், குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டு இணையுமாறு தெரிவித்தால் அந்த வெப்சைட்டை விட்டு வெளியேறிவிடுங்கள். உண்மையான வெப்சைட்கள் உங்களது உழைப்பை மட்டுமே எதிர்பாக்கும்.
நான் இந்த பதிவில் தெரிவித்து உள்ள வெப்சைட்கள் எல்லாம் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பார்ட்-டைம் வேலைகளை வழங்கி நம்மை போன்றோருக்கு உதவி வருகின்றன. நான் இங்கே குறிபிட்டுள்ள வலைத்தளங்கள் எல்லாம் தேடி தேடி, ஏமாற்றுவெப்சைகளில் இருந்து பிரித்து எடுத்து எடுத்து கண்டெடுக்கப்பட்டவை. இந்த வலைத்தளங்கள் மூலம் சம்பாதிக்க,
முதலீடு தேவை இல்லை,
கிரெடிட் கார்டு/ ஏ.டி.எம் கார்டு தேவை இல்லை,
வங்கி கணக்கு தேவை இல்லை,
இன்டர்நெட் பேங்கிங் தேவை இல்லை,
அனுபவம் தேவை இல்லை.
ஒரே ஒரு இணைய வசதியுடன் கூடிய கணினி (கம்ப்யூட்டர்) மட்டும் போதும். இப்பொழுதே சம்பாதிக்க தொடங்கி விடலாம்.
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது
பேஸா இணையவங்கி
பேஸா இணையவங்கி
முதலில் உங்களுக்கென ஒரு இணையவங்கி கணக்கு வேண்டும். இணையவங்கி கணக்கு என்றவுடன் 'ஐயயோ! இனி பேங்க் சென்று ஒரு புதிய அக்கௌன்ட் வேற ஆரம்பிக்க வேண்டுமா?' என்று நினைக்காதீர்கள். இணையவங்கி என்பது நீங்கள் நினைக்கும் ஒரிஜினல் பேங்க் அக்கௌன்ட் என்பதல்ல. நீங்கள் வீட்டில் இருந்தபடியே நொடிபொழுதில் ஒரு இணையவங்கி கணக்கை தொடங்கி விடலாம். "என்னடா! எல்லாம் புரியாத புதிராகவே உள்ளதே!" என்று நினைக்கிறீர்களா? குழப்பம் தேவையில்லை. A to Z எல்லா விவரங்களும் கீழே உள்ளது.





  • முதலில் இங்கே கிளிக் செய்து பேஸா இணையவங்கி முகவரிக்கு செல்லவும்.
  • பின், "Sign up now " என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • பின்பு, ஒரு திரை தோன்றும். உங்கள் நாட்டை தேர்வு செய்து விட்டு, பின்னர், "personal starter" என்பதை கிளிக் செய்துவிட்டு, "select" என்ற பட்டனை அழுத்தவும்.
  • இரண்டாவது படிவம் அதன்பின் தோன்றும். அதில் உங்கள் விவரங்களை நிரப்பி விட்டு, "next" பட்டனை கிளிக் செய்யவும். இறுதியாக, முன்றாம் திரை தோன்றும். அதில் உள்ள கட்டங்களை பூர்த்தி செய்யவும். முன்றாவது படிவத்தில் "Transaction Pin" என்ற கட்டத்தை நீங்கள் நிரப்ப வேண்டியதாக இருக்கும். Transaction Pin என்பது வெறும் இரண்டாவது கடவுச்சொல் (Secondary Password) போன்றதே. அந்த கட்டத்தில் நீங்கள் எதை (Password தவிர) வேண்டுமானாலும் என்ட்டர் செய்யலாம். Transaction Pin -ஐ நினைவில் வைத்து கொள்ள வேண்டும். எல்லாம் முடிந்தபின், Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் sign up செய்யும் போது, உங்கள் ஈமெயில் முகவரியை கொடுத்திருப்பீர்கள் அல்லவா? அந்த ஈமெயில் முகவரிக்கு payza ஒரு மெயில் அனுப்பும். அதில் உள்ள லின்கை கிளிக் செய்தால் உங்கள் அக்கௌன்ட் உடனடியாக ஆக்டிவேட் ஆகி விடும். உங்கள் payza அக்கௌன்ட் ரெடி. இதனையே இணையவங்கி கணக்கு என்றோம்.
1) இணையவங்கி கணக்கு எதற்கு?
முதலில் உங்கள் இணையவருமானத்தை சேமிப்பதற்காக. நீங்கள் கீழே கூறப்பட்டுள்ள வழிகளின் மூலம் சம்பாதிக்கும் பணம் பெரும்பாலும் அமெரிக்க டாலராகவே இருக்கும். உங்களுக்கு அது பயன் படாது என்று நினைக்க வேண்டாம். அலேர்ட்பேவில்(பேஸா இணையவங்கியின் மற்றொரு பெயர் அலேர்ட்பே) நீங்கள் "exchange money" என்ற option - ஐ பயன்படுத்தி அமெரிக்க டாலரில் இருந்து இந்திய ரூபாயாக எளிதாக மாற்றிவிடலாம். அல்லது, ஒரு வேளை, நீங்கள் வேறு நாட்டினராக இருந்தால் உங்கள் நாட்டின் நாணயமாகவும் அலேர்ட்பேவை பயன் படுத்தி பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் (அல்லது உங்கள் நாட்டின் நாணயத்தின்) மதிப்பு உயரும் போது பணபரிமாற்றம் செய்து நல்ல வருமானம் பெறலாம். உங்கள் அலேர்ட்பே கணக்கில் நீங்கள் சேமித்த பணத்தில் ஏதேனும் பொருள் கூட இணையத்தளத்தில் வாங்கலாம். உதாரணத்திற்கு ஒரு வெப்சைட் வாங்கலாம்.
2) எவ்வாறு அலேர்ட்பேவில் பணத்தை சேமிப்பது?
கீழே பத்து வழிகளில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களில் நீங்கள் அதற்கேற்றபடி (விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது) பணிபுரிய வேண்டும். ஒவ்வொரு வெப்சைட்கும் 2$, 3$, 10$ என ஒரு குறிப்பிட்ட தொகை இருக்கும். அந்த தொகை எட்டும் அளவிற்கு நீங்கள் அந்த தளத்தில் பணிபுரிந்த பின்பே உங்களால் அந்த தொகையை உங்கள் அலேர்ட்பே கணக்கிற்கு எடுக்க முடியும். உதாரணத்திற்கு, 2$ ஒரு வெப்சைட்கான குறிப்பிட்ட தொகை என வைத்து கொள்ளுங்கள். நீங்கள் 2.1$ சேமித்துவிட்டீர்கள் என எடுத்து கொள்வோம். உங்களால் இப்போது அந்த தொகையை உங்கள் அலேர்ட்பே கணக்கிற்கு எடுக்க முடியும். எவ்வாறென்றால், அந்த தளத்தில் எங்காவது "Request money" அல்லது "Withdraw money" என்ற லின்க் இருக்கிறதா என்று பாருங்கள். கண்டிப்பாக இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். ஒரு பக்கம் தோன்றும். "Payment mode" என்ற option -இல் 'Alertpay/payza' என்று தேர்வு செய்யுங்கள். பின் உங்கள் Alertpay ஈமெயில் முகவரியை (sign up செய்யும் போது கொடுத்தது) டைப் செய்து விட்டு "enter" பட்டன் அழுத்துங்கள். நீங்கள் சம்பாதித்த பணம் உங்கள் அலேர்ட்பே அகௌண்டிர்க்கு வந்துவிடும். அவ்வளவுதான்.
3) அலேர்ட்பேவில் சேமித்த பணத்தை எவ்வாறு நாம் பெற்றுகொள்வது?
அலேர்ட்பேவில் சேர்த்த வருமானத்தை நீங்கள் பெற்று கொள்ள வேண்டுமா? முதலில் log in செய்யுங்கள். பின்னர் "Withdraw " என்ற பட்டனை கிளிக் செய்யவும். "Check" என்னும் option -ஐ தேர்வு செய்துவிட்டு, உங்கள் வீட்டு முகவரியை டைப் செய்யவும். எல்லாம் முடிந்தபிறகு, என்ட்டர் அழுத்தவும். 2 -3 நாட்களில் செக் உங்கள் வீட்டிற்கு வந்து விடும். அதை பேங்கில் கொடுத்து பணம் பெற்று கொள்ளுங்கள்.
கவனிப்பிற்கு!!!
கவனிப்பிற்கு!!!மேலே கூறியுள்ளவற்றை செய்து முடித்துவிட்டீர்களா? இப்பொழுது இணையத்தளத்தில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது குறித்து பார்க்கலாம், கீழே நிறைய வெப்சைட்கள் (ஓய்வு நேரத்தில் சம்பாதிக்க) பற்றி தகவல்கள் உள்ளன. ஒன்றை மற்றும் நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள். எக்காரணத்தை கொண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கௌன்ட்களை கீழே கூறப்பட்டுள்ள வெப்சைட்களில் தொடங்கி விடாதீர்கள். ஒரு கணினியை பயன்படுத்தி ஒரு அக்கௌன்ட் மட்டுமே தொடங்க வேண்டும். ஒரே கணினியை அல்லது இன்டர்நெட் இணைப்பை கொண்டு இரண்டு அல்லது மேற்பட்ட கணக்குகளை தொடங்கவே கூடாது. மீறி ஒன்றுக்கு மேற்பட்ட அக்கௌன்ட்களை தொடங்கினால் உங்களை அந்த வெப்சைடில் இருந்து வெளியேற்றி விடுவார்கள். அதற்கு பிறகு உங்களால் அந்த வெப்சைடில் நுழையக்கூட முடியாது. உங்கள் தம்பி, தங்கை, அண்ணன் என்று அவர்களுக்கும் ஒரு அக்கௌன்ட் தொடங்கிவிடலாம் என்று நினைத்து நீங்கள் ஏற்கனவே உங்கள் அக்கௌன்ட் தொடங்க பயன்படுத்திய அதே கம்ப்யூட்டர் மூலம் வேறொரு அக்கௌன்ட் தொடங்ககூடாது. எனவே, ஒரே ஒரு அக்கௌன்ட் மட்டுமே நீங்கள் வைத்திருக்க வேண்டும். ஒரே ஒரு அக்கௌன்டே உங்களுக்கு போதும்.
நான் இங்கே குறிப்பிட்டுள்ள வெப்சைட்கள் அனைத்தும் நம்பகமானவை. அவை 3 ஆண்டுகளுக்கு மேலாக இணையத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகின்றன. மேலும், சரியாய் காலதாமதமின்றி ஊதியத்தையும் கொடுத்து வருகின்றன. அனைத்து வெப்சைட்களுக்கும் ஒரே ஈமெயில், பயனர்பெயர் (Username) மற்றும் கடுவுச்சொல் (password) பயன்படுத்துங்கள். நினைவில் வைத்து கொள்ள நல்ல உதவியாக இருக்கும். மேலும், நீங்கள் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள இணையதளங்களில் ஈடுபட்டாலே நல்ல வருமானம் பெற்று விடலாம். இன்னும் நிறைய தளங்கள் இவை போன்று உள்ளன. காண்பவை எல்லாவற்றில்லும் இணைந்து விடாதீர்கள். அவற்றில் பெரும்பாலானவை உழைப்பை சுரண்டிவிட்டு உங்களை ஏமாற்றக்கூடியவையாக இருக்கலாம். எனவே கீழுள்ள நம்பிக்கை மிக்க வெப்சைட்களில் மட்டும் உங்கள் ஓய்வு நேரத்தை செலவிட்டு பயன் பெறுங்கள்.
இணையத்தில் பணம் சம்பாதிக்க வெப்சைட்கள்
முதல் வழி - யூமின்ட் வெப்சைட்
இந்த வெப்சைட், இந்தியாவில் இருந்து இயக்கப்படும் தளம். இன்னும் சொல்ல போனால், முதலீடின்றி சம்பாதிக்க சிறந்த இந்தியதளம் இதுவே. முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று ஒரு அக்கௌன்ட் தொடங்கவும் (Sign up செய்யவும்).
இந்த வெப்சைட்டில் இணைந்தவுடன், நீங்கள் Sign up செய்யும் போது கொடுத்த ஈமெயில் முகவரிக்கு மின்னஞ்சல்கள் (எதாவது விளம்பரம்) அனுப்புவார்கள். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் அந்த மின்னஞ்சல்களை திறந்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள லின்கை(link) கிளிக் செய்வது மட்டுமே. இப்படி கிளிக் செய்ய செய்ய உங்களது அக்கௌன்ட்டில் பணம் சேர்ந்துவிடும்.
சில நேரம், உங்களுக்கு சர்வே ஈமெயில்களும் அனுப்படும். சர்வே என்றால் "கருத்துகணிப்பு". வீட்டில், தேர்தல் போன்ற நேரங்களில் கருத்துகணிப்பு பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். சில கேள்விகளை உங்களிடம் கேட்க நீங்கள் பதில்கூறியிருப்பீர்கள். அதே வேலையை இந்த சர்வே ஈமெயில்கள் மூலம் செய்ய போகிறீர்கள். அந்த ஈமெயில்களை ஓபன் செய்து, அதில் உள்ள லின்கை கிளிக் செய்தால், சில வினாக்களுடன் கூடிய படிவம் தோன்றும், ஒவ்வொரு வினாவுக்கும் நீங்கள் நினைக்கும் ஏதேனும் ஒரு option-ஐ கிளிக் செய்தால் போதும். இப்படி ஒவ்வொரு சர்வேக்கும் செய்ய செய்ய 20 முதல் 50 ரூபாய் கிடைக்கும். உங்களது அக்கௌன்ட்டில் 300 ரூபாய் சேர்ந்தவுடன் உங்கள் வீட்டு முகவரிக்கே செக் அனுப்பிவிடுவார்கள்.
இரண்டாவது வழி - சிறு வேலைகளை செய்தல்

இரண்டாம் சிறந்த வழி சிறு வேலைகளை செய்து முடித்தலாகும். முதலில் இந்த பத்தியின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு செல்லுங்கள். பின்பு, வழக்கம் போல சைன் அப் (Sign up) செய்து விட்டு, உங்கள் ஈமெயிலிற்கு அனுப்பப்படும் லின்கை கிளிக் செய்து உங்கள் அக்கௌன்டை ஆக்டிவேட் செய்து விடுங்கள். இந்த வெப்சைட்-இல் நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், நீங்கள் login செய்த உடன் தோன்றும் பக்கத்தில் ஒரு பட்டியலை காணலாம். அந்த பட்டியலில் நிறைய வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கும். எல்லாம் சிறிய வேலைகளே, அதாவது ஒரு வெப்சைட்-இல் சைன் அப் செய்வது, ஃபேஸ்புக் பேஜ் ஒன்றிற்கு லைக் கொடுப்பது, விளம்பரத்தை கிளிக் செய்வது போன்றவை. அந்த பட்டியலில் நீங்கள் எந்த சிறு வேலையை செய்ய விரும்புகிறீர்களோ அதை கிளிக் செய்யவும். உடனே ஒரு புதிய பக்கம் தோன்றும். அந்த வேலையை எப்படி செய்யவேண்டும், செய்து முடித்தபின் அந்த வேலையை நீங்கள் செய்து முடித்துவிட்டீர்கள் என்பதற்கு ஆதாரமாக எதனை சமர்பிக்க வேண்டும் என்னும் விவரங்கள் அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.
(உதாரணத்திற்கு: "Give like for this facebook page" என்ற வேலை பட்டியலில் இருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள். அதனை நீங்கள் கிளிக் செய்தவுடன் ஒரு பக்கம் தோன்றும். அதில் முதலில் இந்த ஃபேஸ்புக் பேஜ் முகவரிக்கு செல்லுங்கள் பின்பு லைக் கொடுங்கள் என்று ஏதாவது செய்யவேண்டுவனவாக கொடுக்கபடிருக்கும். அதன் கீழ், நீங்கள் அந்த வேலையை சரியாக செய்துவிட்டீர்கள் என்பதற்கு சாட்சியாக உங்கள் ஃபேஸ்புக் ஈமெயிலை ஆதாரமாக சமர்பிக்கவும் என்று இருக்கும்.)
உங்களுக்கு அந்த வேலை செய்ய விருப்பம் இருந்தால், அதே பக்கத்தின் கீழ் இருக்கும் "I accept this job" என்னும் வாக்கியத்தை கிளிக் செய்யவும். அதன் பிறகு அவ்வேலையை செய்து விடுங்கள். பின்பு, நீங்கள் அந்த குறிப்பிட்ட வேலையை சரியாக செய்துவிட்டீர்கள் என்பதற்கு ஆதாரமாக கேட்கபட்டவற்றை "Enter required proof of job finished" என்ற தலைப்பின் கீழ் இருக்கும் கட்டத்தில் டைப் செய்து விட்டு "submit proof" என்ற பட்டனை அழுத்தி விடுங்கள். அந்த வேலைக்கு எவ்வளவு ஊதியம் (0 .1$ அல்லது மேலாகத்தான் இருக்கும்) என்று குறிப்பிட்டு இருக்கிறதோ அது உங்கள் அக்கௌண்டில் சேர்ந்து விடும். அதனை, 2$ மேல் சேர்ந்தவுடன் உங்கள் அலேர்ட்பேவிற்கு தேவைப்படும்போது எடுத்து கொள்ளுங்கள். எத்தனை வேலைகள் வேண்டுமானாலும் ஒரு நாளைக்கு செய்யலாம்.
மூன்றாம் வழி - விளம்பரங்களை கிளிக் செய்தல்

இது மிகவும் எளிமையான வழி. கீழே கொடுக்கப்பட்டுள்ள தளங்களுக்கு சென்று ஒரு அக்கௌன்ட் தொடங்கி விடுங்கள். லாகின் செய்தவுடன் "View ads" அல்லது "View advertisements" என்ற பகுதியின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களை கிளிக் செய்யவும். விளம்பரத்தை கிளிக் செய்தவுடன் ஒரு புதிய விண்டோ தோன்றும். அதில் சில வினாடிகளுக்கு ஏதேனும் விளம்பரம் காண்பிக்கப்படும். 30 செகண்ட்ஸ் முடிந்தவுடன் அந்த விளம்பரத்திற்கான தொகை உங்கள் கணக்கில் சேர்ந்து விடும். நீங்கள் கிளிக் செய்யும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உங்களுக்கு 0.01$ கிடைக்கும். இது போன்ற வெப்சைட்கள் பி.டி.சி எனப்படும். இந்த பத்தியின் கீழ் 6 பி.டி.சி சைட்களின் முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பி.டி.சியிலும் தினசரி 5 விளம்பரங்களை கிளிக் செய்தால் கூட 6X5 =30 கிளிக்குகள். 30X0.1 =0.30$. அப்படியென்றால் ஒரு மாதத்திற்கு 9$ கிடைக்கும். நீங்கள் இன்னும் அதிகமாக தினம் பத்து விளம்பரங்களை கிளிக் செய்தால் 18$ வரை சம்பாதிக்கலாம். இணையத்தில் நிறைய பி.டி.சிகள் உள்ளன. காண்கிற அனைத்திலும் அக்கௌன்ட்களை தொடங்க வேண்டாம். போலியானவை நிறைய இருக்கலாம். கீழுள்ள அனைத்தும் மிகவும் நம்பகமானவை. அனைத்திலும் இணைந்து ஓய்வுநேரங்களில் வருமானம் ஈட்டுங்கள்.
நான்காம் வழி - சாட் (Chat) செய்வது சாட் செய்வது
அனைவருக்கும் பிடித்தமான ஒரு விஷயம். ஃபேஸ்புக், ட்விட்டர், யாஹூ போன்று தளங்களில் நாம் சாட் செய்கிறோம். அதே வேலைக்கு நமக்கு பணம் தந்தால் எப்படி இருக்கும்? ஆமாம். இப்பொழுது நீங்கள் சாட் செய்து கூட சம்பாதிக்கலாம். வழக்கம் போல் கீழுள்ள தளங்களுக்கு சென்று கணக்குகளை ஆரம்பிக்கவும்.
1) முதல் தளம்
இரண்டாம் வழியில் கொடுக்கபட்டுள்ள அதே தளம் தான் இது. இரண்டாவது வழியை படித்திருப்பீர்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள தளத்தில் ஏற்கனவே அக்கௌன்ட் தொடங்கி இருப்பீர்கள் என நினைக்கிறேன். இன்னும் தொடங்கவில்லை என்றால் இந்த பத்தியின்கீழ் உள்ள வலைமுகவரிக்கு சென்று தொடங்கிவிடுங்கள். தொடங்கிய உடன் லாகின் செய்யவும். அங்கே "Forum" என்ற பகுதியின் கீழ் பல தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு பிடித்த தலைப்புகளை கிளிக் செய்து அதில் உங்கள் கருத்தை கூறுங்கள். அதாவது "சுற்றுச்சூழல் மாசுபாடை எவ்வாறு தடுப்பது? (ஆங்கிலத்தில்)" என்ற தலைப்பு இருக்கிறது என்றுவைத்து கொள்ளுங்கள். அதை கிளிக் செய்து உங்கள் எண்ணத்தை கூறுங்கள். அவ்வளுவுதான். நீங்கள் கூறும் ஒவ்வொரு கருத்திற்கும் 0.01 $ கிடைக்கும். ஒரு தலைப்பிற்கு ஒரு கருத்தை பகிர்ந்து கொண்டால் போதும். ஒரு நாளைக்கு 30 கருத்துகள் கூறலாம். (ஒரு நாளைக்கு 0.3$). நீங்களும் புதிய தலைப்புகளை (ஒரு நாளைக்கு ஐந்து) தொடங்கலாம். நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு தலைப்பிற்கும் 0.01$ கிடைக்கும். உங்கள் தலைப்பிற்கு கிடைக்கும் ஒவ்வொரு கருத்திற்கும் 0.01$ கிடைக்கும். எனவே சுவாரசியமான தலைப்புகளை தொடங்குங்கள்.
2) இரண்டாம் தளம்
இந்த தளம் சற்று புதிதானது. நீங்கள் சமூக வலைபக்கங்களில் சாட் செய்வது போல இந்த தளத்தில் சாட் செய்தாலே போதும். ஒரு நாளைக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லை, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஒரு நாளைக்கு சாட் செய்யலாம், இந்த வலைபக்கத்தில் முதலில் இணைந்து விடுங்கள். பின்பு சைனின் செய்யுங்கள். அங்கே பல சாட் ரூம்கள் இருக்கும். அதில் நீங்கள் எந்த சாட் ரூம்மை விரும்புகிறீர்களோ அதில் நுழைந்து அங்குள்ளவர்களுடன் சாட் செய்யுங்கள். நல்ல பொழுது போக்குடன் கூடிய வருமானம் பெறலாம்.
ஐந்தாம் வழி - படம், mp3 பாட்டுகள், வீடியோக்கள் பகிர்ந்து கொள்ளுதல்
இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
இதுவும் ஒரு எளிமையான வழி தான். இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க இதை விட ஒரு அருமையான வழி இல்லை என்று கூட கூறலாம். இணையத்தில் வருமானம் ஈட்ட இது வரை பார்த்த மூன்று வழிகளை விட இது சற்று வித்தியாசமானது. இன்டர்நெட்டில் நாம் நம் நண்பர்களுடன் படம், mp3 பாட்டுகள், வீடியோக்கள் முதலியவற்றை பகிர்ந்து கொள்கிறோம். அதை இனி நீங்கள் சற்று வித்தியாசமாக செய்து பணம் பெறலாம். எப்பொழுதும் போல முதலில் இந்த வலைபக்கத்தில் இணைந்துவிட வேண்டும். பின், லாகின் செய்துவிட்டு, "Upload" என்ற option -ஐ கிளிக் செய்து அந்த பகுதியில் உங்களுக்கு பிடித்தமான படம், mp3, வீடியோ முதலியவற்றை தரவேற்றம் (upload) செய்யுங்கள். உடனே நீங்கள் தரவேற்றம் செய்த ஒவ்வொரு ஃபைளிர்க்கும் தனியே ஒரு முகவரி கிடைத்துவிடும். அந்த முகவரியை உங்கள் நண்பர்களுடன் ஃபேஸ்புக், கூகிள்+, ஆர்குட் முதலிய தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த முகவரிமூலமாக அவர்கள் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்யும் போது ஒவ்வொரு தரவிறக்கத்திற்கும் சராசரி 0.5$ வரை கிடைக்கும். ஒரு நாளைக்கு 10 டவுன்லோட்களை பெற்றால் கூட 5$ பெற்றுவிடலாம்.
ஆறாம் வழி - வெப்சைட்களை பார்வையிடுதல்

இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆறாவது சிறந்த வழி வெப்சைட்களை பார்வையிடுதல் ஆகும். இந்த வழியில் நீங்கள் சில வலைபக்கங்களுக்கு சென்று பார்வையிட்டு கிரடிட்கள் பெற வேண்டும். கிரடிட்கள் என்றால் டோக்கன்கள் போன்றவை. அதாவது, 1000 கிரடிட்கள் சேர்ந்தவுடன் அதனை 0.3 $ ஆக மாற்றி கொள்ளலாம். இந்த வழியில் கூறப்பட்டுள்ள வெப்சைட் கிட்டத்தட்ட பி.டி.சி போலத்தான். நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளை கிளிக் செய்தவுடன் ஒரு புதிய விண்டோ தோன்றும். அதில் விளம்பர வலைபக்கம் சிறிது நேரத்திற்கு காண்பிக்கப்படும். பி.டி.சி தளங்களில் நீங்கள் பார்வையிடும் விளம்பரங்களுக்கு பணம் கிடைக்கும். அனால் இந்த தளத்தில் பணத்திற்கு பதிலாக கிரடிட்கள் கிடைக்கும். இந்த தளத்தில் உள்ள கிரடிட் கணக்கீடை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 1 :1 கிரடிட் என்றால் ஒரு வலைபக்கத்தை பார்க்க 1 கிரடிட் கிடைக்கும் என்பது. 2 :1 கிரடிட் என்றால் இரண்டு வலைபக்கங்களை பார்த்தால் தான் 1 கிரடிட் கிடைக்கும். 1 :2 கிரடிட் என்றால் ஒரு வலைபக்கத்தை பார்க்க 2 கிரடிட்கள் கிடைக்கும் என்பதாகும்.
நீங்கள் கிரடிட்களை பணமாக மாற்றாமல் அப்படியே கூட வைத்து கொள்ளலாம். கிரடிட்களை வைத்து என்ன செய்வது என்று நினைக்க வேண்டாம். நீங்கள் 1000 கிரேடிட்கள் சேமித்து இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். உங்களுக்கென ஒரு வெப்சைட் இருந்தால் அந்த கிரேடிட்களை கொண்டு உங்களது வெப்சைடிற்கு விசிட்களை (ஹிட்ஸ்) அதாவது பார்வையீடுகளை பெறலாம். ஒருமுறை இந்த வெப்சைட்டை பார்வையிட்டு 1 கிரடிட் பெறுங்கள் என்று இந்த பத்தியில் கொடுக்கப்பட்டுள்ள தளத்தில் விளம்பரம் கொடுங்கள். 1000 கிரடிட்களுக்கு 1000 பார்வையீடுகளை பெற்றுவிடுவீர்கள். (சற்று குழப்பமாக தோன்றலாம். நீங்களே இந்த வலைதளத்தில் நேரடியாக செய்து பார்க்கும் பொது நன்றாக புரிந்து கொள்வீர்கள். ஏழாம் வழியில் உள்ள சில வேலைகளை செய்ய இந்த கிரடிட்கள் மிகவும் உதவும். அதை பற்றிய விவரங்கள் ஏழாம் வழியின் கீழ் உள்ளது)
ஏழாம் வழி - மல்டி-டாஸ்க் வெப்சைட்கள்

இந்த வழியில் ஐந்து விதமான வேலைகளை நீங்கள் செய்யவேண்டும். அவை விளம்பரங்களை கிளிக் செய்வது, வெப்சைட்களை பார்வையிடுவது, சிறு வேலைகளை செய்வது, ஈமெயில்கள் படிப்பது, விளம்பரப்படுத்துவது முதலியவை. விளம்பரங்களை கிளிக் செய்வது, வெப்சைட்களை பார்வையிடுவது, சிறு வேலைகளை செய்வது முதலியவற்றை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதை பற்றிதான் இரண்டாம், மூன்றாம் மற்றும் ஆறாம் வழிகளில் படித்துவிட்டீர்கள். இனி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஈமெயில்கள் படிப்பது, விளம்பரப்படுத்துவது முதலியவை குறித்து தான்.

ஈமெயில்கள் படிப்பது என்றால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைப்பக்கங்களில் இணையும் பொது கொடுக்கும் ஈமெயில் முகவரிக்கு சில விளம்பர செய்திகள் அனுப்பப்படும். அதில் கொடுக்கப்பட்டுள்ள லின்கை நீங்கள் கிளிக் செய்யவேண்டும். அதற்கான தொகை உங்கள் அக்கௌன்ட்டில் சேர்ந்து விடும்.
விளம்பரப்படுத்துவது என்றால் நீங்கள் இந்த வலைதளங்களில் இணைந்தவுடன் உங்களுக்கென சில வலைமுகவரிகள் தரப்படும். அந்த வலைமுகவரிகளை நீங்கள் விளம்பரபடுத்தவேண்டும். அந்த வலைமுகவரிகளுக்கு எத்தனை கிளிக்குகள் கிடைக்கிறதோ அதற்கு ஏற்ற படி உங்களுக்கு தொகை கிட்டும். ஆறாம் வழியில் கூறப்பட்டுள்ள கிரடிட் முறையை கொண்டு அதிகமாக கிளிக்குகளை பெறலாம். இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க இது ஒரு சிறந்த வழி.
எட்டாம் வழி - கணக்கீடுகளில் பங்கு பெறுதல்

சர்வே வேலைகள் இன்டர்நெட்டில் மிகவும் பிரபலமானவை. வீடுகளில் கணக்கெடுப்புகள் எடுக்கவருபவர்களிடம் அவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்வீர்கள் அல்லவா? அதே வேலையைத்தான் இந்த வழியில் நீங்கள் இன்டர்நெட் மூலமாக செய்யவேண்டும். இந்த வழியில் கூறப்பட்டுள்ள வெப்சைட்களில் முதலில் ஒரு அக்கௌன்ட்டை ஆரம்பித்து விட வேண்டும். பின், அந்த வெப்சைட்களில் உங்களுக்கென சில பிரத்யேக கணக்கெடுப்புகள் தரப்படும். அதனை கிளிக் செய்து அந்த கணக்கெடுப்புகளில் கேட்கப்படும் சில கேவிகளுக்கு நீங்கள் விரும்பும் பதிலை டிக் செய்தால் போதும். இவ்வாறு ஒவ்வொரு கணக்கெடுப்பையும் நீங்கள் முடிக்க முடிக்க அதற்கான தொகை உங்கள் கணக்கில் சேர்ந்து விடும். இணையத்தளத்தில் விரைவாக சம்பாதிக்க இது மிகவும் ஏற்ற வழி.
ஒன்பதாம் வழி - வலைமுகவரிகளை பகிர்ந்து கொள்ளுதல்

இந்த வழி மிகவும் சுலபமானது. இணையத்தில் நம் நண்பர்களுடன் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் நாம் பகிர்ந்து கொள்கிறோம் அல்லவா? இனி அதனை சற்று வித்தியாசமாக செய்து வருமானம் பெறுங்கள். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் இதுதான். முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்திற்கு சென்று ஒரு அக்கௌன்டை பெற்று விடுங்கள். பிறகு, சைனின் செய்யுங்கள். சைனின் செய்தவுடன் தோன்றும் பக்கத்தின் மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் (text box) நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் வலைமுகவரியை அதில் டைப் செய்து "Intermission ad" அல்லது "Top banner ad " என்ற option-களில் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்து என்ட்டர் அழுத்தி விடுங்கள். இப்பொழுது உங்களுக்கு ஒரு புதிய குறுகிய வலைமுகவரி கிடைக்கும். அதை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை உங்கள் நண்பர் அந்த முகவரியை கிளிக் செய்து அந்த வலைபக்கத்தை காணும் பொது உங்களுக்கு அதற்கான தொகை உங்களது அக்கௌன்டில் சேர்ந்து விடும். Intermission ad என்றால் நீங்கள் உங்கள் நண்பரிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் வலைபக்கதிற்கு முன்பு ஒரு சிறிய விளம்பரம் காண்பிக்கப்படும். Top banner ad என்றால் நீங்கள் பகிர்ந்துகொள்ள நினைக்கும் பக்கத்தின் மேலே ஒரு சிறிய கட்டத்தில் விளம்பரம் காண்பிக்கப்படும். எப்பொழுதும் intermission ad விளம்பரங்களையே தேர்வு செய்யுங்கள். Intermission ad விளம்பரத்துக்கு top banner ad விளம்பரங்களை விட அதிக தொகை கிடைக்கும்.
பத்தாம் வழி - கூகுள் ஆட்சென்ஸ்
இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இணையத்தில் மிக விரைவாக அதிக பணம் சம்பாதிக்க கூகுள் ஆட்சென்ஸ் ஒரு அற்புதமான வழி. உங்களுக்கு என்று ஒரு வலைப்பக்கம் அல்லது வலைமுகவரி வைத்திருக்கிறீர்களா? உள்ளது என்றால் உங்கள் வலைப்பக்கத்தில் கூகுள் நிறுவனம் விளம்பரங்களை வெளியிடுவதற்கு அனுமதியுங்கள்.
இனி எவ்வாறு கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரங்களை உங்களது வலைப்பக்கத்தில் புகுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். முதலில் www.adsense.com என்ற முகவரிக்கு சென்று ஒரு அக்கௌன்ட் ஆரம்பித்து விடுங்கள். ஆட்சென்சில் அக்கௌன்ட் ஆரம்பிக்க கண்டிப்பாக ஒரு சொந்த வலைப்பக்கம் (www.example.com போன்றவை) வைத்திருக்க வேண்டும் (இல்லாவிடில் கவலை வேண்டாம். கீழே சொந்தமாக இலவச வலைப்பக்கம் எப்படி பெறுவது என்ற குறிப்புகள் உள்ளன). ஆட்சென்ஸில் அக்கௌன்ட் பெற்றவுடன் லாகின் செய்யுங்கள். அதில் "create ads" என்ற லின்கை கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் வகையில் வடிவத்தில் வண்ணத்தில் விளம்பரங்களை தயாரியுங்கள். எல்லாம் முடிந்தவுடன், ஒரு HTML code உங்களுக்கு கிடைக்கும். அதை உங்களது வெப்சைட்-இல் நீங்கள் விரும்பும் இடத்தில பேஸ்ட் செய்யுங்கள். உங்களது வலைபக்கத்தில் இப்பொழுது கூகுள் விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.
உங்கள் வலைபக்கத்தில் தோன்றும் கூகுள் விளம்பரங்களுக்கு எத்தனை கிளிக்குகள் கிடைக்கின்றனவோ அதற்கு ஏற்றவாறு உங்கள் ஆட்சென்ஸ் கணக்கில் தொகை சேர்ந்து விடும். மற்ற விளம்பர நிறுவனங்களை காட்டிலும் கூகுள் அதிகமான தொகையை ஒரு கிளிக்கிற்கு தருகிறது. உங்கள் கூகுள் விளம்பரங்களை உங்கள் கணினி மூலம் நீங்களாகவே கிளிக் செய்ய கூடாது. மீறினால் கூகுள் உங்களை ஆட்சென்ஸில் இருந்து வெளியேற்றி விடும்.

No comments:

Post a Comment