Food

 சமையல்:விறால் மீன் குழம்பு

கூடல் - Wednesday, September 21, 2011
Viral Fish Curry - Cooking Recipes in Tamil
ஆட்டுக்கறியை விட மீன் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. ஓமேகா 3 என்ற சத்து மீனில் இருப்பதால் இது இதய நோயளிகளுக்கு ரொம்ப நல்லது. அதனால் வாரத்துக்கு இரண்டு தடவையாவது மீன் சேர்க்கவேண்டும். நிறைய மீன் வகைகள் இருந்தாலும் விறால் மீனுக்கு தனி மவுசுதான்... அதன் குழம்புக்கும் தனி ருசிதான். அந்த வகையில் சுவையான விறால் மீன் குழம்பை அடிக்கடி செஞ்சு குடுத்து அசத்துங்க.....
தேவையான பொருட்கள்:
விறால் மீன் (3/4 கிலோ எடையுள்ளது) - 1
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
தேங்காய்ப்பால் - 2 கப்
பூண்டு - 1
கடுகு - 1 டீ ஸ்பூன்
காய்ஞ்ச மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எண்ணை - ஒரு குழிக்கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு
செய்முறை:
* மீனை நல்லாக்கழுவி துண்டுகள் போடுங்க.
* குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணைவிட்டு கடுகு, காய்ஞ்ச மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்குங்க.
* வெங்காயம் போட்டு நல்லா வதக்கி, பூண்டு சேர்த்து வதக்குங்கள்.
* அப்புறம் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்குங்கள். அதோடு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து கொத்துமல்லி கறிவேப்பிலை சேர்த்து தேங்காய்ப் பாலை ஊத்துங்க.
* கொதிக்கறப்போ மீன் துண்டுகளைப் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்குங்க.
குறிப்பு: எப்போதுமே விறால் மீன் வாங்குறப்போ முக்கால் கிலோ அல்லது அதுக்கு மேல எடை இருக்கிற மாதிரி பார்த்து வாங்கணும். அதுக்கு கீழே எடை இருந்தா ருசியாகவே இருக்காது.

 

சமையல்:கேரட் சாலட்

கூடல் - Thursday, April 19, 2012
Carrot Salad - Cooking Recipes in Tamil
தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ....
தேவையான பொருட்கள்:
துருவிய கேரட் - 1 கிலோ
முளைக்கட்டிய பச்சைப்பயறு - 1/4 கிலோ
தேங்காய்த் துருவல் - 1 கப்
எலுமிச்சம்பழம் - 1
நறுக்கிய குடை மிளகாய் - 50 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கட்டு
உப்பு, மிளகுப்பொடி - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
* திருகிய கேரட், முளைகட்டிய பச்சைப்பயறு, தேங்காய்த் துருவல், நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
* அதன் மீது எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்த்து, உப்பு, மிளகுப்பொடி கலந்து மீண்டும் கலக்கவும்.
* ஆரோக்கிய குளிர்ச்சியான உணவு ரெடி!


சமையல்:பூசணிக்காய் தயிர்அவல்

கூடல் - Thursday, April 19, 2012
White Pumpkin Curd Poha - Cooking Recipes in Tamil
தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ....
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் - 1
அவல் - 1 கிலோ
தயிர் - 4 லிட்டர்
நறுக்கிய குடைமிளகாய் - 100 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்
உப்பு, மிளகு - தேவையான அளவு
செய்முறை:
* பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.
* அந்த சாறுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.
* பூசணிக்காய் தயிர்அவல் ரெடி!
* விதை இல்லாத பச்சை திராட்சை, மாதுளம்பழம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்பு: உங்கள் தேவைக்கு ஏற்ப தேவையான பொருட்களின் அளவை மாற்றியமைத்துக் கொள்ளவும்.



முதல் பக்கம் » பெண்கள் » சமையல் » இன்ஸ்டண்ட் பால் கோவா

Instant Milk Kova

-

இன்ஸ்டண்ட் பால் கோவா

சமையல்:இன்ஸ்டண்ட் பால் கோவா

கூடல் - Thursday, March 22, 2012
Instant Milk Kova - Cooking Recipes in Tamil
பால்கோவான்னா பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க.. ஸ்வீட்லயே பால்கோவாவுக்கு இருக்கிற மவுசே தனிதான்.. அனைவரும் மிக விரும்பி சாப்பிடுவோம்.. குட்டீஸ்கள் திடீர் திடீர்னு கேட்டு அடம்பிடிப்பார்கள்.. அவர்களுக்காகவே இந்த உடனடி பால்கோவா.......
தேவையான பொருட்கள்:
கன்டன்ஸ்டு மில்க் (அல்லது) மில்க்மெய்ட் - 1 கப்
பால் பவுடர் -  1/4 கப்
கெட்டித் தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
(கன்டன்ஸ்ட் மில்க்கில் சுகர் இருப்பதால் அதுவே போதுமானது.. தனியாக சுகர் சேர்க்க தேவை இல்லை.)
செய்முறை:
ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் கலந்து, மைக்ரோவேவ் ஓவனில் ஒரு 4 - 6 நிமிடங்கள் வைக்கவும்.
இடை இடையே வெளியில் எடுத்து நன்கு கலந்து திரும்ப வைக்கவும்.
6 அல்லது 7 நிமிடங்களில்...சூடான...சுவையான... பால்கோவா தயார்..!!


சமையல்:கார தோசை

அஞ்சலி - Wednesday, March 07, 2012
Spicy Dosa - Cooking Recipes in Tamil
தோசைன்னாலே நமக்கெல்லாம் ஒரே குஷிதான்.. அதிலும் கார தோசைன்னா கேட்கவே வேணாம்.. சரி, இப்போ காரதோசை செய்றது எப்புடினு பார்க்கலாமா....
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
தேங்காய் - 1/2 முடி
மிளகாய் - 4
சீரகம் - 1/2  டீஸ்பூன்
மிளகு - 10
உப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறு துண்டு
மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.
* எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கலக்கவும்.
* தேவையெனில் சிறிது தண்­ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
* தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
* மாவு மீந்து விட்டால், அடுத்த முறை தோசை ஊற்றும்போது மீந்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தோசை வார்க்கவும்.



சமையல்:பாசிப்பருப்பு பக்கோடா

செண்பகா - Thursday, January 26, 2012
Green Gram Dal Pakoda - Cooking Recipes in Tamil
பாசிப்பருப்பில் நிறைய புரோட்டீன் இருப்பதால் அனைவரும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பாசிப்பருப்பில் பாயசம் வச்சு சாப்ட்ருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா... அதீத சுவையுடன் சும்மா மொறுமொறுனு பிரமாதமா இருக்கும்.. எங்க செஞ்சு அசத்துங்க பாப்போம்...
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 1/2
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - அரை இன்ச்
தனியா - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:
* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

* பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

* அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும்.

* இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

* சுவையான வித்தியாசமான பாசிப்பருப்பு பக்கோடா தயார்.



முதல் பக்கம் » பெண்கள் » சமையல் » காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா

Panner Peas Cauliflower Masala

-

காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா

சமையல்:காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா

கூடல் - Thursday, January 26, 2012
Panner Peas Cauliflower Masala - Cooking Recipes in Tamil
வழக்கமா காலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம்... அதில் பனீர் சேர்த்து செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னு சொல்லுவீங்க பாருங்க....!
தேவையான பொருட்கள்:
மசாலா அரைத்துக்கொள்ள:
வெங்காயம் - 2
பேல் பூரி - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 5
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
* வெங்காயம், பேல் பூரி, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், மஞ்சள்பொடி ஆகியவற்றை சுடுநீரில் ஊற வைத்து, கெட்டிவிழுதாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* காலிப்ளவர் பெரிய துண்டுகளாக, சுத்தப்படுத்தி, உரித்த பட்டாணி 2 கப் சேர்த்து, தண்ணீரில் இரண்டையும் கொதிக்க விடவும்.
* வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை வைத்து சூடானதும், ஒரு துண்டு பட்டை புளி, கிராம்பு, 1 ஸ்பூன் சோம்பு பொரித்து, அத்துடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து, தணிந்த தீயில் எண்ணை பிரிந்து வரும் வரை வதக்கவும்.
* பிறகு கொதிக்க வைத்த காலிப்ளவர், பட்டாணி சேர்த்து, உப்பு, 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
* தக்காளி சாஸ் அரை கப், கலந்து, சில நிமிடம் கிளறியதும் கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி, சூடாக பரிமாறவும்.
* பட்டாணி சேர்த்த பின் பனீர் துண்டுகளும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.
* இந்த மசாலா எல்லா வகை சாதம், டிபன் வகைகளுக்கும் மிகவும் நன்றாக இருக்கும்.


சமையல்:பனீர் வெஜ் மின்ட் கறி

கூடல் - Tuesday, January 03, 2012
Panner Veg Mint Curry - Cooking Recipes in Tamil
எல்லா சத்தும் நிறைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் பாருங்கள்!
தேவையான பொருட்கள்:
பட்டாணி - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
பனீர் - 100 கிராம்
வதக்கி அரைக்க
புதினா - ஒரு கட்டு
கொத்து மல்லி - அரை கட்டு
கருவேப்பிலை - கால் கட்டு
பச்ச மிளகாய் - நான்கு
இஞ்சி - ஒரு லெமென் சைஸ்
பூண்டு - 5 பல்
வெங்காயம் - முன்று
தக்காளி - நன்கு
எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க:
எண்ணை - தேவையான அளவு
சீரகம் - சிறிதளவு
செய்முறை:
* முதலில் எண்ணையை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்ச மிளகாயை வதக்கவும்.
* கடைசியாக கொத்துமல்லி, புதினா, கருவேப்பிலையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி அதையும் சேர்த்து வதக்கவும்.
* வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.
* எண்ணையை காய வைத்து சீரகம் தாளித்து அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும், அதோடு பனீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* காய்களை பொடியாக அரிந்து மைக்ரோ வேவில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
* இப்போது வெந்த காயை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
* சுவையான ஆரோக்கியமான மின்ட் கறி ரெடி.


சமையல்:கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: மீன் பிரியாணி

கூடல் - Saturday, December 24, 2011
Christmas Special: Fish Biryani - Cooking Recipes in Tamil
பிரியாணி வகைகள் எல்லோரும் பிரியமுடன் சாப்பிடக்கூடியது. மீன் மனித உடலுக்கு அவசியமான ஒமேகா 3 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்தது. அத்துடன் மீன் பிரியாணி சமைக்க எளிதானது. சுவையிலும் சூப்பர் என்று சொல்ல வைக்கக் கூடியது. அதை செய்து ருசித்துப் பாருங்களேன், புரியும்!
தேவையான பொருட்கள்:
மீன் - 1/4 கிலோ
அரிசி - 2 ஆழாக்கு
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு
மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 குழிக் கரண்டி
செய்முறை:
* மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.
* ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
* வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
* தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
* பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் "தம்" சேர்த்து (ஆவி போகாமல் மூடி வைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.
* குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.
* சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.


சமையல்:மரவள்ளிக் கிழங்கு வடை

சி.மகாலட்சுமி, திருச்சி - Thursday, November 10, 2011
Tapioca Vada - Cooking Recipes in Tamil
வடைன்னா உளுந்த வடை, பருப்பு வடை தான் ஞாபகத்துக்கு வரும்... இனிமே மரவள்ளிக் கிழங்கு வடையும் ஞாபகத்துக்கு வரும் பாருங்க... அட! ஆமாங்க.. செலவில்லாத அதேநேரத்தில் மிக எளிதாக செய்யக்கூடிய வடை இது... சுவையோ பிரமாதமாக இருக்கும்......
தேவையான பொருள்கள்:
மரவள்ளிக் கிழங்கு - 500 கிராம்
மிளகாய்தூள் 1 - ஸ்பூன்
வேர்க்கடலை பவுடர் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு 
பெருங்காயப் பொடி - அரை ஸ்பூன்
எண்ணெய் - 500 கிராம்
செய்முறை:
* மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து கழுவிவிட்டு துருவிக் கொள்ளவும்.
* அதில் மிளகாய்த் தூள், உப்பு, வேர்க்கடலை பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைக் கலந்து காய்ந்த எண்ணெய்யில் வடைகளாகத் தட்டிப்போட்டு வெந்தவுடன் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
* தங்க நிறத்திற்கு வந்ததும் எடுக்கவும்.





முதல் பக்கம் » பெண்கள் » சமையல் » ஆட்டு மூளை பொரியல்

Lamb Brain Masala Fry

-

ஆட்டு மூளை பொரியல்

சமையல்:ஆட்டு மூளை பொரியல்

கூடல் - Tuesday, January 03, 2012
Lamb Brain Masala Fry - Cooking Recipes in Tamil
ஆட்டு மூளையா... எப்டியிருக்குமோ-னு யோசிக்கிறீங்களா...? செய்து சாப்பிட்டு பாருங்களேன்.. ருசி பிரமாதமாயிருக்கும். அதுமட்டுமில்லங்க, ஆட்டு மூளையில் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது. நீங்களே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க..........
தேவையான பொருள்கள்:
ஆட்டு மூளை - 2
மிளகாய்தூள் - 1-1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணைய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.
* அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.
* மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.
* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.
* பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.
* நன்றாக சிவந்தவுடன் இறக்கி பறிமாறலாம்.






சமையல்:கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வான்கோழி பிரியாணி

கூடல் - Saturday, December 24, 2011
Christmas Special: Turkey Biryani - Cooking Recipes in Tamil
உலகெங்கும் கிறிஸ்துமஸின் போது கோழி, மட்டனை விட டர்கி எனப்படும் வான்கோழியை அதிகமாக சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றனர். நீங்களும் இந்த கிறிஸ்துமஸூக்கு இதை ட்ரை பண்ணிப் பாருங்களேன்.. ரொம்ப வித்தியாசமாக அபார சுவையுடன் இருக்கும்!

தேவையான பொருட்கள்:
பாஸ்மதி (அ) ஜீரக சம்பா பச்சரிசி - 3 கப்
வான்கோழியின் பக்கவாட்டு பாகங்கள் - 900 கி
மஞ்சள் பொடி - 1/4 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
நறுக்கிய கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
நறுக்கிய புதினா இலை - 1 கைப்பிடி
இஞ்சி பேஸ்ட் - 2 டீ ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டீ ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீ ஸ்பூன்
தேஜீபட்டா (லவங்க செடியிலை) - 2
லவங்கப்பட்டை - 2 அங்குலம்
ஏலக்காய் - 2
லவங்கம் - 4
தயிர் - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 2 டீ ஸ்பூன்
நறுக்காத பச்சைமிளகாய் - 5
எலுமிச்சை - 1
முந்திரிப்பருப்பு - 10
உலர்ந்த திராட்சை - 10
குங்குமப்பூ கலர் - 2 துளி
ரோஜா எஸன்ஸ் - 2 துளி
பால் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* வான்கோழி பிரியாணியின் சுவை அதிகரிக்க வான்கோழி மாமிசத்தை ஒரு நாள் முன்பு மசாலாக்களில் தோய்த்து வைக்க வேண்டும். சரியாக சமைக்கும் முன்பு 24 மணி நேரம் தான் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த மாமிசத்தை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது. இதை செய்யும் முறை -
* வான்கோழி மாமிச பாகங்களை நன்றாகக் கழுவி பெரிய துண்டுகளாக வெட்டவும்.
* அதன் மேல் 1/4 கரண்டி மஞ்சள் பொடியை தடவவும்.
* பிறகு 1 கப் தயிர் அதில் 2 டீ ஸ்பூன் மிளகாய்ப்பொடி, கரம் மசாலாப் பொடி, 1 டீ ஸ்பூன் இஞ்சி பேஸ்ட், 1/2 டீ ஸ்பூன் பூண்டு பேஸ்ட், 2 டீ ஸ்பூன் உப்பு, 1/2 மூடி எலுமிச்சைபழச்சாறு இவற்றை கலந்து அதில் வான்கோழி மாமிசத்தை தோய்த்து வைக்கவும். ஒரு பாலித்தீன் பையில் மூடி ஒரு மூடிய பாத்திரத்தில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
க்ரேவி செய்முறை:
* அடிகனமான வாணலியில் 3 டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை காய்ச்சவும்.
* பெருஞ்சீரகம், லவங்கப்பட்டை, ஏலக்காய், லவங்கம், தேஜீபட்டா இவற்றை சேர்க்கவும்.
* பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பாதியை எடுத்து தனியாக வைக்கவும்.
* இப்பொழுது நறுக்கிய தக்காளி சேர்த்து எண்ணெய் கசியும் வரை வதக்கவும்.
* மீதியுள்ள இஞ்சி, பூண்டு பேஸ்ட்டுகளை போட்டு நன்றாக கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்பொழுது ஃப்ரிட்ஜில் வைத்த வான்கோழி மாமிசங்களை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
* பிறகு ப்ரஷர் குக்கரில் போட்டு நான்கு விசில் வரும் வரை வேக விடவும். அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
அரிசியை சமைக்கும் முறை:
* அரிசியை கழுவி அரை மணிநேரம் ஊற விடவும்.
* அடுப்பில் பத்து கப் தண்ணீரை கொதிக்க விடவும். அத்துடன் எலுமிச்சை சாறு, 2 டீ ஸ்பூன் உப்பு சேர்த்து கிளறவும்.
* பிறகு ஊற வைத்த அரிசியை சேர்க்கவும். பாதி வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி நீரை வடிகட்டவும். வடிகட்டிய அரிசியை தனியே வைக்கவும்.
அலங்கரிக்க:
* முந்திரிப்பருப்பையும், உலர்ந்த திராட்சையையும் ஒரு வாணலியில் ஒரு டீ ஸ்பூன் நெய் விட்டு வதக்கவும். தனியே எடுத்து வைக்கவும்.
பிரியாணி அடுக்குகளை தயாரித்தல்:
* ஒரு பேக்கிங் தட்டை எடுத்து அதில் பாதி அரிசியை பரவலாக நிரப்பவும்.
* இதன் மேல் வான்கோழி கிரேவியை பரப்பவும்.
* மறுபடியும் இன்னொரு அடுக்கு அரிசியை பரவலாக நிரப்பவும்.
* இதன் மேல் நறுக்கிய புதினா இலை, நறுக்கிய கொத்தமல்லி, நறுக்காத பச்சை மிளகாய், வதக்கிய வெங்காயம், முந்திரிப்பருப்பு, மற்றும் உலர்ந்த திராட்சையை பரப்பவும்.
* 2 டீ ஸ்பூன் பாலுடன் இரு துளிகள் ரோஜா எஸன்ஸையும், குங்குமப்பூ கலரையும் கலக்கவும்.
* இதை அரிசியின் மேல் பாகத்தில் தூவவும்.
* இவற்றின் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை தடவவும்.
* தட்டை ஒரு அலுமினிய ஃபாயிலால் மூடவும். முன்பே சூடுபடுத்திய அவனில் 350 டிகிரி எஃப் சூட்டில் ஒரு மணி நேரம் சமைக்கவும்.
* வான்கோழி பிரியாணியை சூடாக வெங்காய பச்சடியுடனும், கோழி கிரேவியுடனும் பரிமாறலாம்.




சமையல்:தக்காளி அவல்

வசந்தி சுப்ரமணியன் - Thursday, November 10, 2011
Tomato Rice Flakes - Cooking Recipes in Tamil
சிறிது அவலை வெறும் வாயில் மென்றாலே அலாதி சுவைதான். அதையே இந்த மாதிரி வெரைட்டியா செஞ்சு சாப்பிட்டா அவல் பிடிக்காதவர்கள்கூட ஒரு பிடி பிடித்து விடுவார்கள்... குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்... உடனே செஞ்சு கொடுத்து அசத்துங்க.......
தேவையான பொருட்கள்: (2 பேருக்கு)
அவல் - 1 கப்
தக்காளி - 1
பச்சைப் பட்டாணி - 1/2 கப் (வேகவைத்தது)
கேரட் - 1 சிறியது
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகாய் வத்தல் - 3
பெருங்காயம் - 1 சிட்டிகை
மஞ்சள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
உளுத்தப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1 டீ ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 மூடி
செய்முறை:
* அவலுடன் மஞ்சள், எலுமிச்சைச் சாறு, உப்பு, சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
* பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
* பெரிய வெங்காயம், தக்காளி, கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்.
* எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, கடலை, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
* பிறகு பட்டாணி, நறுக்கி வைத்த அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். அதனுடன் பருப்பு, ஊறவைத்த அவலை சேர்த்து நன்கு கிளறவும். பெருங்காயம் சேர்த்து இறக்கவும்.
* சுவையான தக்காளி அவல் தயார்.-

சமையல்:முந்திரிக் கொத்து

கூடல் - Thursday, November 03, 2011
Munthiri Kothu - Cooking Recipes in Tamil
பச்சைப்பயிறு உடலுக்கு வலுவைத் தரும் ஒரு அற்புதமான தானியம். இதை அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடம்புக்கு ரொம்ப நல்லது. அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது... பச்சைப்பயரில் இப்படியொரு பலகாரமானு ஆச்சர்யப்படாமல் செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க.. பிரமாதம்னு அப்பறம் சொல்லுவீங்க........
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1/2 கிலோ
பச்சைப்பயிறு - 1/2 கிலோ
வெல்லம் - 1 கிலோ
ஏலக்காய் - 10
மைதா - 1/4 கிலோ
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு - 1/2 டீ ஸ்பூன்
செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து பச்சரிசி, பச்சைப்பயிறு ஆகிய இரண்டையும் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும்.
5 ஏலக்காயை மட்டும் எடுத்து தனியே வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த பச்சரிசி, பச்சைப்பயிறு, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மாவு மிஷினில் கொடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலி அல்லது வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து, வெல்லத்தை உடைத்துப் போட்டு, வெல்லம் மூழ்கும் வரை தண்ணீ­ர் விட்டு காயவிடவும்.
மீதமுள்ள 5 ஏலக்காயை தனியே வறுத்து பொடியாக்கி அடுப்பில் காய்ந்து கொண்டுள்ள வெல்லத்துடன் சேர்க்கவும்.
வெல்லம் கரைந்து பாகு கொதித்து பிசுபிசுப்பு பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, மிஷினில் அரைத்து வைத்துள்ள மாவை வாயகன்ற பாத்திரம் அல்லது பேசினில் சிறிது சிறிதாகப் போட்டு அதில் தேவையான அளவு பாகு சேர்த்து, கட்டியில்லாமல் சப்பாத்தி மாவு பதத்திற்கு, கையில் மாவு ஒட்டாமல் பிசையவும்.
பின்னர் மாவைச் சிறு சிறு உருண்டைகளாக, கோலி குண்டு அளவிற்குப் பிடித்துக் கொள்ளவும்.
தனியே ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், உப்பு, தண்­ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும், தீயை மட்டுப்படுத்தி மிதமான தீயில் எரிய விடவும்.
பின்பு உருட்டி வைத்துள்ள உருண்டைகளை மூன்று மூன்றாக எடுத்து ஒன்றாகச் சேர்த்து, கரைத்து வைத்துள்ள மைதா மாவில் முக்கி வாணலியில் உள்ள எண்ணெயில் போட்டு வேக விடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் வேக விடவும்.
மைதா மாவு தீய்ந்து விடாமல் எண்ணெயிலிருந்து எடுக்கவும்.
எண்ணெய் வடிந்ததும், சூடாகவும் சாப்பிடலாம், பத்து நாட்கள் வரை, காற்று புகாத டப்பாவில் பாதுகாத்து வைத்தும் சாப்பிடலாம்.
குறிப்பு:
பிசுபிசுப்பு பதம் என்பது பாகு காயும் போது பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் பாகை தொட்டு ஒட்டிப் பார்த்தால் பிசுபிசுவென்று ஒட்டும்.
மிஷினில் அரைத்த மாவு அனைத்தையும் ஒரே நேரத்தில் பிசையாமல் சிறிது சிறிதாக எடுத்துக் கொண்டு அதனுடன் பாகு சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்.
மூன்று உருண்டைகள் ஒன்றாகச் சேர்ந்து முந்திரிக் கொத்து போல் காட்சியளிப்பதால், இது அவ்வாறு பெயர் பெற்றுள்ளது. ஆனால் இதில் முந்திரி சேர்க்கப்படவில்லை என்பதுதான் இதன் விசேஷம்.
பச்சரிசி, பச்சைப்பயிறு, ஏலக்காய் ஆகியவற்றை மிக்சியில் அரைக்காமல் மாவு மிஷினில் அரைத்தால் மாவு மிகவும் வாசனையாக இருக்கும்.






No comments:

Post a Comment