Thursday, September 19

Audacity - இலவசமாக ஒரு Audio Editor


Video Editor எவ்வளவு முக்கியமோ அதே போல முக்கியமான ஒன்று Audio Editor. அதில் மிகவும் பயனுள்ள ஒன்று Audacity. இது Audio Editor என்பதோடு Audio Recording வசதியையும் தருகிறது. ஓபன் சோர்ஸ் மென்பொருளான இது பல விதமான பயன்களை கொண்டுள்ளது. அதை பற்றி இன்று பார்ப்போம். 
இதன் சிறப்பம்சங்கள் கீழே. 
  • Microphone, line input, USB/Firewire devices என மற்றும் பல Device- களின் மூலம் Audio Record செய்யும் வசதி. 
  • ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட Device -களில் இருந்தும் Record செய்ய முடியும். 
  • கிட்டத்தட்ட எல்லா Audio Format - களையும் சப்போர்ட் செய்கிறது. 
  • நிறைய Track - களை Edit, Mix செய்யும் வசதி. 
  • தேவையற்ற சத்தங்களை (Noise) நீக்கும் வசதி. 
  • Tempo Adjustment வசதி.இது ஆடியோ வேகத்தை வீடியோவுக்கு மேட்ச் செய்ய உதவுகிறது. 
  • வேகத்தை மாற்றாமல் Pitch (சுருதி) அட்ஜஸ்ட் செய்யும் வசதி. 
  • Audio Effect - கள் உருவாக்கும் வசதி. 
  • மிகத் தெளிவான Output 
இது Windows, Mac, Linux கணினிகளில் இயங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. 
இதை தரவிறக்க : 
Audacity for Windows  (Windows 2000/XP/Vista/7)
 Audacity for Mac (Universal Binary for Mac OS X 10.4 or later)

No comments:

Post a Comment