Thursday, September 19

Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts




நெருப்பு நரி எனப்படும் Firefox தான் நம்மில் நிறைய பேர் பயன்படுத்தும் இணைய உலவி. சாதாரணமாக கணினிகளில் பயன்படும் Keyboard Shortcuts போல Firefox-க்கும் நிறைய Keyboard Shortcut நிறைய உள்ளன.

1. Ctrl + T and Middle-click

Ctrl + T ஆனது ஒரு புதிய Tab ஓபன் செய்ய பயன்படும். Middle-click என்பது  குறிப்பிட்ட லிங்க் ஒன்றை புதிய Tab-இல் ஓபன் செய்ய உங்கள் Mouse-இல் உள்ள Scroll Wheel-அழுத்தலாம். 

2. Ctrl + Shift + T

தவறுதலாக Close செய்த Tab-ஐ திறக்க Ctrl + Shift + T பயன்படுகிறது. இதை நிறைய முறை செய்தால் பல பழைய Tab-கள் ஓபன் ஆகும்.

3. F6

URL பாரில் உள்ள முகவரிக்கு ஒரே நொடியில் செல்ல இது பயன்படுகிறது. இது முழு Address-ஐயும் தெரிவு செய்துவிடும். இதன் மூலம் Copy செய்யும் வேலையும் எளிதாகிறது. 

4. Ctrl + F 

ஒரு குறிப்பட்ட வார்த்தை அல்லது வரியை தேட இது பயன்படுகிறது. Ctrl + F கொடுத்து வரும் இடத்தில் நீங்கள் தேட வேண்டிய வார்த்தையை தரலாம். 

5. Ctrl + W

இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த Tab-ஐ Close செய்ய. 

6. Ctrl + Tab or Ctrl + Shift + Tab

பல Tab-கள் ஓபன் செய்யப்பட்டு இருந்தால், அடுத்தடுத்த Tab க்கு மாற இது பயன்படுகிறது. 

7. Ctrl + D

இப்போது நீங்கள் படித்து கொண்டிருக்கும் பக்கத்தை புக்மார்க் செய்ய இது பயன்படுகிறது. 

8. Ctrl + (Plus) , Ctrl -(Minus) , and Ctrl + 0

உலவியின் பக்க எழுத்துரு அளவை பெரிதாக்க (To Increase The Font Size) Ctrl + பயன்படுகிறது.  , Ctrl – சிறிதாக்கும். Ctrl + 0 ஆனது Default Size க்கு மாற்றித் தரும். 

9. F11

Toolbar மற்றும் Status bar -களை நீக்கி முழு ஸ்க்ரீனில் உலவியை தெரிய வைக்க இது பயன்படுகிறது. 

10. Ctrl + J

Download Window -வை ஓபன் செய்ய பயன்படுகிறது

No comments:

Post a Comment