இணையத்தில்
நம் சொந்த கருத்துக்களை பகிர இந்த பிளாக்ஸ்பாட் தளம் அனைவருக்கும்
பயனுள்ளதாக உள்ளது. வலைப்பதிவு என்பது என்ன என்று கூட
தெரியாமல் பதிவர்களில் பெரும்பாலானோர்(என்னையும் சேர்த்து) விளையாட்டாக
வலைப்பதிவு தொடங்கி பதிவு போடுகிறோம். இப்படி விளையாட்டாக பதிவு போட
ஆரம்பித்து நாளடைவில் நாம் விளையாட்டாகா தொடங்கிய வலைப்பதிவு பிரபலமானவுடன்
நமக்கென்று ஒரு சொந்த டொமைன் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றும்.
- Dassboard - Settings - Publishing -பகுதிக்கு செல்லுங்கள்.
- சென்று அங்கு உள்ள Custom Domain என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.வரும் விண்டோவில் உங்களுக்கு வேண்டிய டொமைன் பெயரை சரியாக கொடுக்கவும்.
- பெயரை கொடுத்து Check Availability என்பதை க்ளிக் செய்யவும். நீங்கள் கொடுத்த URL காலியாக இருந்தால் yourdomain.com is available என்ற செய்தி வரும் இல்லையேல் உங்களுக்கு கொடுத்த பெயருக்கு சார்ந்து உள்ள URL கொடுக்கும் அதில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
- அடுத்து வரும் விண்டோவில் Continue to registration என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் உங்களின் தகவல்களை சரியாக பொருத்தி accept கொடுக்கவும்.
- அடுத்து payment செய்யும் விண்டோ வரும் இதில் உங்களின் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டின் எண்ணை சரியாக கொடுத்து உங்களுடைய domain உருவாக்கி கொள்ளுங்கள்.
- கீழே உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும்.
அவ்வளவு தான் இனி உங்களுடைய பிளாக்ஸ்பாட் URL கொடுத்தால் நேரடியாக உங்கள் புதிய டொமைன் url தளம் ஓபன் ஆகும். ஆகையால் உங்கள் வாசகர்களுக்கும் எந்த கடினமும் இருக்காது.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து. |
டுடே லொள்ளு
அய்யோ என் கொம்பு இந்த நெருப்ப நான் சும்மா விட மாட்டேன்.
No comments:
Post a Comment