100 சுயதொழில்கள்

 

தொழிலதிபர் ஆக விருப்பமா?


தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், உணவுப் பொருள் பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தி பற்றிய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
காய்கறி, பழங்கள் பதப்படுத்துதல்
(ஊறுகாய், ஜாம், ஜெல்லி, ஸ்குவாஸ்), இறைச்சி, மீன், பால் பொருட்கள், மசாலா பொருட்கள், கேக்ஸ், சாக்லெட், பிரட், பிஸ்கட், பேக்கரி தயாரிப்புகள், துரித உணவு வகைகள், நூடுல்ஸ், சுருள் பாசி, காளான் வளர்ப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.
பயிற்சி காலம் 6 வாரங்கள். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயதுக்குட்பட்ட சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள இருபாலரும் பயிற்சியில் சேரலாம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், மதுரை, தேனி, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் பயிற்சி நடக்கும்.
விருப்பமுள்ளவர்கள் http://www.editn.in/ என்ற இணையதள முகவரியில் உள்ள படிவத்தை டவுண்லோடு செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை இயக்குநர், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், கிண்டி, சென்னை  600 032 என்ற முகவரிக்கு ஜூலை 26க்குள் அனுப்ப வேண்டும்.
நேர்முகத் தேர்வு, பயிற்சி தொடங்கும் நாள் மற்றும் முகவரி ஆகியன விண்ணப்பிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரிவிக்கப்படும்.
ஒலிம்பிக் கார்ட்ஸ் நிறுவனமாக மாறியதை பற்றி நூர் முகமது விளக்கினார் - See more at: http://www.nithimuthaleedu.com/2013/01/blog-post_865.html#sthash.ryJiJpqA.dpuf

திருமண அழைப்பிதழ் தொழிலில் வெற்றி பெற்றது எப்படி? - ஒலிம்பிக் கார்ட்ஸ் நூர் முகமது..!




சென்னை ஒலிம்பிக் கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. ஹெச். நூர் முகமது , திருமண அழைப்பிதழ் தொழிலில் வெற்றி பெற்றதை விவரிக்கிறார்.  
நூர் முகமதுவின் ( H.Noor Mohamed)  தந்தை  என்.எம். ஹபிபுல்லா (N.M.Habibullah) பர்மாவில் (இன்றைய மியான்மர்) பேப்பர் வியாபாரம் செய்து வந்திருக்கிறார். பர்மா அரசாங்கம் அங்குள்ள தொழில் நிறுவனங்களை அரசு உடைமையாக்கியதால், அங்கிருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு வந்துவிட்டார்.
கையில் இருந்த 2,000 ரூபாய் பணத்தை முதலீடாக கொண்டு சென்னை பாரிமுனையில் ஒலிம்பியா பேப்பர் அண்ட் ஸ்டேஷனரி ஸ்டோர்ஸ் என்ற சிறுகடையை ஆரம்பித்துள்ளார். அப்போது, நூர் முகமதுவுக்கு 6 வயது. பள்ளிக் கூடம் விட்டதும் நேராக கடைக்கு சென்று பழக்கத்தை நூர் முகமது கொண்டிருந்தார்.

 
வளர்ந்த கதையை நூர் முகமது விவரிக்கிறார்.
''அப்போது எங்கள் கடை இருந்த தெருவில் திருமண அழைப்பிதழ் விற்கும்  நிறுவனம் ஒன்று இருந்தது. அங்கு அழைப்பிதழ்களை வாங்கி எங்கள் கடையில் விற்போம். இந்நிலையில் அந்த கம்பெனியை திடீரென மூடிவிட்டார்கள். இதனால், திருமண அழைப்பிதழ் வாங்க வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதைப் பார்த்த என் தந்தை, அழைப்பிதழ்களை அச்சடிக்கும் தொழிலில் களமிறங்கினார்." என்றவர் அடுத்தக் கட்ட வளர்ச்சி பற்றி சொன்னார்.
'' திருமண அழைப்பிதழ் என்றாலே, அந்தக் காலத்தில்  டியூப்ளக்ஸ் பேப்பர் என்கிற மஞ்சள் மற்றும் ரோஸ் கலர் கொண்ட காகிதத்தில்தான் அச்சிடுவார்கள்.  நாங்கள் அதை மாற்றி, புதுமையாக  வேறு வண்ணக் காகிதங்களையும், புதிய வடிமைப்பு (டிசைன்) கொண்டு வந்தோம். வெற்றி பெற்றோம்."
நூர் முகமது 1978 ஆம் ஆண்டு கல்லூரி படித்து முடித்ததும் தொழிலில் முழுமையாக இறங்கி உள்ளார். திருமண அழைப்பிதழ்களை தயாரிக்க சொந்தமாக தயாரிக்க  தனியாக பிரிவை தொடங்கி உள்ளார். அதன் பிறகு அனைத்து விழாகளுக்கும் தேவையான அழைப்பிதழ்களை அச்சடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் தேவை புரிந்து செயல்பட்டதால் அச்சுத் தொழிலில் ஏற்பட்ட நவீன தொழில்நுட்ப மாற்றங்களை உடனுக்குடன் கொண்டு வந்ததால் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஒலிம்பிக் கார்ட்ஸ் நிறுவனமாக மாறியதை பற்றி நூர் முகமது விளக்கினார்
''அடுத்தக் கட்டமாக டைரி, காலண்டர், நோட்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தோம். கடந்த 1992 ஆம் ஆண்டு ஒலிம்பிக் கார்ட்ஸ் லிமிடெட் நிறுவனமாக உயர்ந்தோம். வாடிக்கையாளர்களுக்கு பார்சல் சென்று சேரும்  வரை உடன் இருந்து கவனித்ததே வெற்றிக்கு மூல காரணம். எங்களின் அன்பான உபசரிப்பு, சரியான நேரத்தில் டெலிவரி, நியாயமான விலை  போன்ற காரணத்தால் அப்பா காலத்தில் அழைப்பிதழ்கள் வாங்கியவர்கள், இப்போதும் எங்களைத் தேடி வந்து அழைப்பிதழ் அச்சிட ஆர்டர் தருகிறார்கள்." என்றார். 
ஒலிம்பிக் கார்ட்ஸ் நிறுவனத்துக்கு நான்கு உற்பத்தி பிரிவுகள் உள்ளன. இங்கு தயராகும் கார்ட்கள்  ஷோ ரூம்களின் தேவைக்கு போதுமானதாக இருக்கிறது.  இதை விரிவுபடுத்தும் வேலை நடந்து வருகிறது. பங்குச் சந்தைக்கு வந்து நிதி திரட்டியது வளர்ச்சியின் முக்கிய அம்சமாக இருக்கிறது.
ஒலிம்பிக் கார்ட்ஸ் வரலாறு மணிமேகலைப் பிரசுரத்தில் புத்தகமாக வெளியாகி இருக்கிறது.
- See more at: http://www.nithimuthaleedu.com/2013/01/blog-post_865.html#sthash.ryJiJpqA.dpuf

திருமண அழைப்பிதழ் தொழிலில் வெற்றி பெற்றது எப்படி? - ஒலிம்பிக் கார்ட்ஸ் நூர் முகமது..!




சென்னை ஒலிம்பிக் கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. ஹெச். நூர் முகமது , திருமண அழைப்பிதழ் தொழிலில் வெற்றி பெற்றதை விவரிக்கிறார்.  
நூர் முகமதுவின் ( H.Noor Mohamed)  தந்தை  என்.எம். ஹபிபுல்லா (N.M.Habibullah) பர்மாவில் (இன்றைய மியான்மர்) பேப்பர் வியாபாரம் செய்து வந்திருக்கிறார். பர்மா அரசாங்கம் அங்குள்ள தொழில் நிறுவனங்களை அரசு உடைமையாக்கியதால், அங்கிருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு வந்துவிட்டார்.
கையில் இருந்த 2,000 ரூபாய் பணத்தை முதலீடாக கொண்டு சென்னை பாரிமுனையில் ஒலிம்பியா பேப்பர் அண்ட் ஸ்டேஷனரி ஸ்டோர்ஸ் என்ற சிறுகடையை ஆரம்பித்துள்ளார். அப்போது, நூர் முகமதுவுக்கு 6 வயது. பள்ளிக் கூடம் விட்டதும் நேராக கடைக்கு சென்று பழக்கத்தை நூர் முகமது கொண்டிருந்தார்.

 
வளர்ந்த கதையை நூர் முகமது விவரிக்கிறார்.
''அப்போது எங்கள் கடை இருந்த தெருவில் திருமண அழைப்பிதழ் விற்கும்  நிறுவனம் ஒன்று இருந்தது. அங்கு அழைப்பிதழ்களை வாங்கி எங்கள் கடையில் விற்போம். இந்நிலையில் அந்த கம்பெனியை திடீரென மூடிவிட்டார்கள். இதனால், திருமண அழைப்பிதழ் வாங்க வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதைப் பார்த்த என் தந்தை, அழைப்பிதழ்களை அச்சடிக்கும் தொழிலில் களமிறங்கினார்." என்றவர் அடுத்தக் கட்ட வளர்ச்சி பற்றி சொன்னார்.
'' திருமண அழைப்பிதழ் என்றாலே, அந்தக் காலத்தில்  டியூப்ளக்ஸ் பேப்பர் என்கிற மஞ்சள் மற்றும் ரோஸ் கலர் கொண்ட காகிதத்தில்தான் அச்சிடுவார்கள்.  நாங்கள் அதை மாற்றி, புதுமையாக  வேறு வண்ணக் காகிதங்களையும், புதிய வடிமைப்பு (டிசைன்) கொண்டு வந்தோம். வெற்றி பெற்றோம்."
நூர் முகமது 1978 ஆம் ஆண்டு கல்லூரி படித்து முடித்ததும் தொழிலில் முழுமையாக இறங்கி உள்ளார். திருமண அழைப்பிதழ்களை தயாரிக்க சொந்தமாக தயாரிக்க  தனியாக பிரிவை தொடங்கி உள்ளார். அதன் பிறகு அனைத்து விழாகளுக்கும் தேவையான அழைப்பிதழ்களை அச்சடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் தேவை புரிந்து செயல்பட்டதால் அச்சுத் தொழிலில் ஏற்பட்ட நவீன தொழில்நுட்ப மாற்றங்களை உடனுக்குடன் கொண்டு வந்ததால் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஒலிம்பிக் கார்ட்ஸ் நிறுவனமாக மாறியதை பற்றி நூர் முகமது விளக்கினார்
''அடுத்தக் கட்டமாக டைரி, காலண்டர், நோட்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தோம். கடந்த 1992 ஆம் ஆண்டு ஒலிம்பிக் கார்ட்ஸ் லிமிடெட் நிறுவனமாக உயர்ந்தோம். வாடிக்கையாளர்களுக்கு பார்சல் சென்று சேரும்  வரை உடன் இருந்து கவனித்ததே வெற்றிக்கு மூல காரணம். எங்களின் அன்பான உபசரிப்பு, சரியான நேரத்தில் டெலிவரி, நியாயமான விலை  போன்ற காரணத்தால் அப்பா காலத்தில் அழைப்பிதழ்கள் வாங்கியவர்கள், இப்போதும் எங்களைத் தேடி வந்து அழைப்பிதழ் அச்சிட ஆர்டர் தருகிறார்கள்." என்றார். 
ஒலிம்பிக் கார்ட்ஸ் நிறுவனத்துக்கு நான்கு உற்பத்தி பிரிவுகள் உள்ளன. இங்கு தயராகும் கார்ட்கள்  ஷோ ரூம்களின் தேவைக்கு போதுமானதாக இருக்கிறது.  இதை விரிவுபடுத்தும் வேலை நடந்து வருகிறது. பங்குச் சந்தைக்கு வந்து நிதி திரட்டியது வளர்ச்சியின் முக்கிய அம்சமாக இருக்கிறது.
ஒலிம்பிக் கார்ட்ஸ் வரலாறு மணிமேகலைப் பிரசுரத்தில் புத்தகமாக வெளியாகி இருக்கிறது.
- See more at: http://www.nithimuthaleedu.com/2013/01/blog-post_865.html#sthash.ryJiJpqA.dpuf

ஆர்வம் மட்டும் போதும்



இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கமுள்ள ஒரு நாட்டில் அரசாங்கத்தால் எல்லோருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கமுடியாது. இந்த இடைவெளியைத் தொழில்முனைவோர்தான் நிரப்பவேண்டும். அந்தத் தார்மிகக் கடமை அவர்களுக்கு இருக்கிறது. இந்த உணர்வை அவர்கள் எப்பொழுதும் மறக்கக்கூடாது. அதனால் எத்தனை சவால்கள் வந்தாலும் எப்பாடுபட்டாவது தொழில் முயற்சியைத் தொடரவேண்டும்.


ஆரம்பித்த ஒரு தொழில் முயற்சியை எக்காரணம் கொண்டும் கைவிடவே கூடாதா?

நான்கு காரணங்களுக்காகச் செய்யலாம். முதல் காரணம், தொழில் நடத்துபவரின் மரணம். இரண்டாவது காரணம், பெரிய அளவிலான உடல் ஊனம். மூன்றாவது, அரசாங்கத்தின் அநாவசியக் குறுக்கீடு. நான்காவது, வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் ஒருவர் மீதிருந்த ஆதரவை விலக்கிக் கொள்ள நேரும்போது. இப்படிப்பட்ட சூழல் ஏற்படும்போது (அவ்வாறு ஏற்படக்கூடாது என்பதுதான் நம் விருப்பம்) அத்தொழிலைத் தொடர்ந்து நடத்துவது சாத்தியமாகாமல் போகலாம்.

நெகடிவ் விஷயம் என்றபோதும், இதை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் ஒரு தொழிலுக்கு வளர்ச்சியும் வீழ்ச்சியும் இயல்பானது என்பதால்தான். தொழில்முனைவோருக்குச் சங்கடங்கள் ஏற்படலாம், விபத்து நேரலாம், மரணம் சம்பவிக்கலாம். ஆனால், தொழில் சிந்தனைக்கு எந்த இக்கட்டும் நேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.


சில வருடங்களுக்கு முன்பு வரை வி.சி.ஆர் வீடியோ காசெட்டுகளை வாடகைக்குக் கொடுக்கும் பல கடைகள் நல்ல லாபத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. மக்கள் வீட்டில் உட்கார்ந்து குடும்பத்தோடு காசெட் போட்டு படம் பார்க்கும் வழக்கம் அப்போது அதிகம் இருந்தது. ஆனால் இன்றோ ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் குறைந்தது அறுபது சாட்டிலைட் சானல்கள் வந்துவிட்டன. இன்று வீடியோ டேப்பை யாரும் வாடகைக்கு எடுப்பதில்லை என்பதால் காசட் வியாபாரம் செய்தவர்கள் பாதிக்கப்பட்டனர். அறிவுள்ள சிலர் மாறும் சூழலுக்குத் தக்கவாறு சிடிக்குத் தாவினர்.


சிறு தொழிலில் ஈடுபடுவதற்குத் தோதான வயது எது?

இந்தக் கேள்விக்கான விடை, அப்படியொரு வரையறை எதுவும் இல்லை என்பதுதான். ஆர்வம் இருந்துவிட்டால் வயதோ, கல்வித் தகுதியோ ஒரு தடையல்ல. இருந்தாலும் கூடுதலாக கல்வியறிவு என்பது ஒரு முழுமையான திறமையை வளர்த்துக் கொள்ள உதவும் என்றால் அதில் தவறில்லை. அதே சமயம் நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்து தொழில் தொடங்குவதற்கு முன்பு, சில காலம் கட்டாயமாக ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவது நல்லது. காரணம் எந்தவொரு தொழிலையும் மற்றவர் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே பணியைக் கற்றுகொள்ளுவது, தொழிலைக் கவனிப்பது அனுகூலமானதாகும். Learning business at other’s expenses என்று சொல்வார்கள்.


இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டும். மிகப் பலர், பகுதி நேரத் தொழிலில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படிப்பட்ட ‘சைட் பிசினஸ்’ தவறானது. ஒரு நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றும்போது, சுயதொழில் ஆர்வமும் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட சமயத்தில், பணியாற்றும் நிறுவனத்துக்கு உட்பட்ட எல்லா வேலைகளையும் கவனிப்பதும் அறிந்து கொள்வதும் நல்ல உத்தியாகும்.


நீங்கள் ஈடுபட நினைக்கும் தொழில் வேறாக இருந்தாலும், எல்லாத் தொழில் நிறுவனங்களுக்கும் பொதுவாக சில அம்சங்கள் உண்டு. அந்த அம்சங்கள் நம்மை மெருகூட்டக்கூடியவை. இதை என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

நான் பணிபுரிந்த இடங்களில் எனக்கு மேலாளராக, உதவி மேலாளராக இருந்த பலரிடமிருந்தும் பல நுணுக்கமான விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். அது பிற்காலத்தில் எனக்கு உதவியது. இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் பணம் ஈட்டுவதில் அதிக ஆர்வத்தைக் காட்டுகின்றனர். எளிதில் பணம், விரைவில் பணம் என்பது நடைமுறை சித்தாந்தமாகிவிட்டது. இந்த சித்தாந்தம், அரசியல், சினிமா, இரண்டு துறைகள் அல்லாமல், (அந்தத் துறைகளிலும் ஒரு சிலருக்கு, எல்லோருக்குமல்ல) மற்ற தொழில்களுக்கு அறவே பொருந்தாது. விதை விதைத்தவுடன் அறுவடைக்கு ஆசைப்படும் மனோபாவம், தொழில் முனைவோருக்கு இருக்கக்கூடாது.


ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, கையிருப்பை ஏற்படுத்திக்கொண்டு, நல்ல சந்தர்பத்துக்காக ஆற்றின் கரையோரம் மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கு போல் தவம் இருக்கவேண்டும். ஏனென்றால், சுய தொழில் என்பது ஒரு நிமிடத்தில் ஆசைப்பட்டு, அடுத்த நிமிடத்தில் ஆரம்பித்து, அதற்கடுத்த நிமிடத்தில் செல்வந்தனாக மாறுவது என்பதல்ல. அது திரைப்படங்களில் மட்டுமே சாத்தியமான விஷயம்.

குறைவற்ற வாழ்க்கையே வாழவேண்டும் என்றால், தொழிலில் எதிர்காலத்தை ஊடுருவிப் பார்க்கும் தன்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும். முதலில் சிறிது காலமாவது தொழிலாளியாக இருந்து, பின்னர் முதலாளியாக மாறுவது தொழிலுக்கு நன்மையைத் தரும்.


நம் சமூக அமைப்பில், பெண்களுக்குள்ள பொருளாதாரச் சுதந்திரத்தைப் பற்றியும் சிந்தித்தே ஆக வேண்டும். மணமாகாத பெண் என்றால், தொழில் தொடங்குவதற்கு தந்தையிடமிருந்து முதலீட்டுப் பணத்தை எதிர்பார்ப்பது சிக்கலாகவே இருக்கும். பெரும்பாலான பெற்றோர், அடிப்படைக் கல்வி, மருத்துவம், மற்றும் திருமணச் செலவு இவற்றுக்கு மட்டுமே பணத்தை செலவழிப்பதற்கு விரும்புவர். ‘தனியாகத் தொழில் தொடங்க வேண்டும், முதலீடு வேண்டும்’ என்றால் ‘வேண்டாத வேலை எல்லாம் எதற்கு?’ என்ற விமரிசனம் மட்டுமே பலமாக எழும்.

மணமான பெண்ணாக இருந்தால், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சம்மதத்தைப் பெறவேண்டும். இது மிகவும் சிக்கலான விஷயம். அப்படியானால், பெண்கள் தொழில் தொடங்குவது எப்படி?


நீங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருந்தால் குறைந்த முதலீடு உள்ள தொழில்களைத் தேர்வு செய்வது மிக அவசியம். ஆனால், எந்தச் சிறு தொழிலும், எளிமையாக இருந்தாலும், திறமையாக அதை நடத்திச் செல்லும்போது, அது வளர்ச்சி அடைவதைத் தவிர்க்கவே முடியாது. சிறு அலுவலகமாக இருந்தாலும், அதை ஒரு அழகான இடமாக மாற்றி, தங்கள் தொழிலை, பொருளை, தங்களை, இந்தச் சமூகத்தின் முன்பு அடையாளம் காட்ட வேண்டியது மிக அவசியம். வாடிக்கையாளர்களை தொழிலதிபர் நேரிடையாகச் சந்திப்பதும் தொடர்புகளை விரிவுபடுத்துவதும் இந்தச் சூழலில் மிக அவசியம். எந்தத் தொழிலிலும், தரமான பொருள் அல்லது சேவை இருக்கும் பட்சத்தில், வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகுவது இயல்பானது.


தொழில் முனைபவர் வாடிக்கையாளரின் பிரச்சனைக்கு உடனடித் தீர்வுகளை யோசிக்கும் திறன்படைத்தவர்களாக இருப்பது அவசியம். இந்த இடத்தில் தொழில் முனைவோரின் சில தனிமனித இயல்புகள், தன்னிச்சையாக வெளிப்பட வாய்ப்பு உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உதாரணமாக ஒருவர் வீட்டிலோ அல்லது தான் வாழும் சூழலிலோ, கோபப்படுபவராக இருந்திருக்கலாம். பிறரின் ஏளனமான சொற்களையோ கடுமையான விமரிசனங்களையோ பொறுத்துக் கொள்ள முடியாத இயல்புடையவராக இருந்திருக்கலாம். ஆனால் தொழிலென்று வந்த பிறகு வாடிக்கையாளரின் விமரிசனத்தை மனத்தில் கொள்ளாமல் செயல்படவேண்டும்.


வாடிக்கையாளர் சில நேரம் எரிந்து விழலாம். பாராமுகத்தோடு சொற்களைப் பேசலாம். கடுமையான வார்த்தைகளுடைய கடிதத்தை அனுப்பலாம். இவை யாவும் தனி மனித மரியாதையை அவமதிப்பதாக எடுத்துக்கொண்டு செயல்படுவது வியாபாரத்தில் தவறு. நிதானமும் பொறுமையும், குறிப்பிட்ட நேரத்தில் முடிவெடுக்கும் திறனும், எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியமும், ஒரு பிரச்னைக்கு பல தீர்வுகளை யோசனை செய்வதும் மிக அவசியம்.


http://www.tamilpaper.net/?p=6707

எனக்கு என்ன தொழில் அமையும்? மாந்த்ரீகம் செய்யலாமா?


என் மகன் பத்தாம் வகுப்பு படிக்கின்றான். படிப்பில் மிகவும் மந்தமாகவே உள்ளான். எவ்வளவு சொன்னாலும் யார் பேச்சையும் கேட்பதில்லை. திட்டினாலும், அடித்தாலும் வாங்கிக் கொள்கிறான். அவனைப் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவே அனுப்பக் கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். அப்படியே அவன் எழுதினாலும் எல்லா பாடத்திலும் தோல்விதான் அடைவான். நன்றாக உறங்குகிறான். நீங்கள் சொல்லும் வார்த்தையை வைத்துத்தான் தேர்வு எழுத வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய உள்ளோம். அவனுடைய இந்த நிலை மாற ஒரு நல்ல தீர்வு தாருங்கள். -ஒரு வாசகி.

உங்கள் மகன் ஜாதகம் அருமையாக உள்ளது. அவருக்கு லக்னாதிபதி ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் நல்ல எதிர்காலம் உண்டு. ஆனால், அவர் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானத்தில் ராகு அமர்ந்து அந்த ராகுவை சனியும், செவ்வாயும் பார்ப்பதால் படிப்பு பாகற்காயாகி விட்டது. நினைவாற்றலுக்கு உரிய கிரகமான சனி, லக்னத்திற்கும், ராசிக்கும் மறைவு ஸ்தானத்தில் அமர்ந்து கேதுவுடன் சம்பந்தப்பட்டதாலும் படித்து நினைவில் பதிவானதை தேர்வெழுதும்போது மீட்டெடுக்கும் சக்தியை தரும் கிரகமான சந்திரன் 6ல் மறைந்து செவ்வாயின் பார்வையை பெற்றதாலும் இவரால் எந்த ஒரு பாடத்திலும் தேர்ச்சி பெற இயலாமல் போய்விட்டது. பூர்வ புண்யாதிபதி குருபகவான் சுக்கிரனின் சாரத்தில் அமர்ந்திருப்பதால்தான் கற்றலில் நாட்டம் இல்லை.

இவருக்கு 26.2.2017 வரை செவ்வாய் தசை நடைபெறுகிறது. செவ்வாய் சுக்கிரனுடன் சேர்ந்து கிரக யுத்தம் செய்வதாலும் அடுத்து ராகுதசை வருவதாலும் கட்டாயப்படுத்தி கல்வியைத் திணிக்க வேண்டாம். இவருடைய பெயரை மாற்றுவது நல்லது. J அல்லது R எழுத்தில் பெயர் தொடங்குவது நல்லது. இவரது ஜாதகத்தை கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறைப்படி ஆராய்ந்து பார்க்கும்போது இவர் சுயதொழிலில் பெரிய நிலைக்கு வர வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக எலக்ட்ரிக்கல் தொழிலில் இவர் அதிகம் சம்பாதிப்பார். எனவே அந்த துறையில் இவரை பயிற்சி பெற வைப்பது நல்லது. கல்வி ஸ்தானத்தில் பாப கிரகம் நிற்பதுடன், மேலும் இரண்டு பாப கிரகங்கள் அந்த பாப கிரகத்தை பார்ப்பதால் தொலைதூர கல்வி மூலம் இவர் பட்டம் பெறுவார்.

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் வருங்காலத்தில் சேர்த்து படிக்க வையுங்கள். தற்சமயம் குரு பலன் இருப்பதாலும், தசாபுக்தி, அந்தரங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது இந்த வருடத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத அனுப்பி வைக்கலாம். ஆனால், அனைத்துப் பாடத் தேர்வுகளையும் எழுதாமல் தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் மட்டும் முழு கவனம் செலுத்தி, பின்னர் மீதமுள்ள பாடங்களில் தேர்வு எழுத வைப்பது நல்லது. பரிகாரமாக பழனி முருகனை உச்சிகால பூஜையின்போது சென்று வழிபட்டு வாருங்கள்.

என் பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு வீடு உள்ளது. அதில் என் கணவரின் தம்பி உதவியுடன் ஒரு அரசியல்வாதி குடியேறினார். 14.2.2007லிருந்து சொற்ப வாடகையை என் கணவரின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறார். வீட்டின் உள் அறைகளில் வீட்டு உபயோகச் சாமான்கள் வைத்திருக்கிறோம். பலவழிகளில் முயன்றும் காலி செய்யாமல் தகராறு செய்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு வழக்கறிஞர் ஆலோசனையின் பேரில் வாடகைதாரர் பெயரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதுவும் நடைபெற்று வருகிறது. வழக்கில் எங்களுக்கு சாதகமாக எப்போது தீர்ப்பு கிடைக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? வி. ஆண்டாள் என்ற நாச்சியார், ஓசூர்.

பூமிக்காரகன் செவ்வாய் லக்னாதிபதிக்கு 12ல் மறைந்திருப்பதுடன் லக்னாதிபதியும், கட்டிடக்காரகனுமான சுக்கிரன், அஷ்டமாதிபதியான குருவுடன் சேர்க்கை பெற்றிருப்பதாலும், இவ்விரு கிரகங்களின் மீதும் சனியின் பார்வை விழுவதாலும், உங்களுக்கு என்று வீடு இருந்தும், அது மற்றவரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. உங்கள் கணவருக்கு ஏழரைச்சனி இப்போதுதான் முடிந்துள்ளது. ஆனால், உங்களுக்கோ தற்சமயம் ஜென்மச் சனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுபோல ஏழரைச்சனி நடைபெறும் காலத்தில் நம்பிக்கை மோசடிகளையும், ஏமாற்றுபவர்களையும் சந்திக்க வேண்டியது வரும்.

2006ம் வருடம் அக்டோபர் மாதத்திலிருந்தே உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் தசாபுக்தியும், அந்தரமும், கோச்சார கிரகமும் சரியில்லாததால்தான் வழக்கு தொடுத்து நீதிமன்றம் வரை போக வேண்டியிருந்திருக்கிறது. 24.6.2013க்கு பின்னர் உங்களுக்கு நல்ல தீர்ப்பு வரும்; நீதியும் கிடைக்கும். உங்கள் சொத்து உங்கள் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வரும்.

பரிகாரமாக கொல்லூர் மூகாம்பிகையை திங்கள் அல்லது வெள்ளிக்கிழமையில் சென்று தரிசித்து நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். 
 
எனக்கு 21.5.1997 அன்று திருமணம் நடந்தது. மகன் பிறந்ததற்கு பின்னால் என் கணவர் என்னைவிட்டு பிரிந்து சென்று விட்டார். என்ன காரணம் என்றும் தெரியவில்லை. கணவரோடு சேர்ந்து வாழ பரிகாரம் கூறுங்கள். அப்படியே என் மகன் எதிர்காலத்தைப் பற்றியும் சொல்லுங்கள். கே. கிருஷ்ணவேணி, மேட்டூர் அணை.

உங்கள் மூவர் ஜாதகத்தையும் முழுமையாக ஆராய்ந்தோம். உங்கள் இருவர் ஜாதகத்திலும் குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் தான் குடும்ப வாழ்க்கையில் தனிமையை அனுபவிக்க நேரிடுகிறது. உங்கள் ஜாதகத்தில் சந்திரனுக்கு 7ல் ராகு இருந்து, ராகு தசையும் கடந்த காலத்தில் நடைபெற்றது. அதனாலும் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது. உங்கள் மகன் ஜாதகத்தில் பிதுர்க்காரகனான சூரியன், ராகுவுடன் சம்பந்தப்பட்டிருப்பதுடன் பிதுர் ஸ்தானத்தில் கேது நின்று பிதுர் ஸ்தானாதிபதி சனி நீசமாகி நிற்பதால் தந்தை முகம் பாராத குழந்தையாக உங்கள் மகன் வளர்ந்து வருகிறான். 1.6.2013லிருந்து உங்கள் ராசிக்கு சாதகமாக தசாபுக்தி, அந்தரம் மாறுவதால் உங்கள் கணவர் உங்களை தேடி வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

உங்கள் மகனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. கூர்மையான புத்தியும், குறுக்குக் கேள்வி கேட்கும் ஆற்றலும், எதையும் உடனே புரிந்து கொள்ளும் தன்மையும் உண்டு. முக்கிய கிரகங்கள் வலுவாக உள்ளதால் உங்கள் மகனுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. உங்கள் கணவர் உங்களை வந்தடைய, உங்கள் மகனுடன் ஏதேனும் ஒரு வியாழக்கிழமை அல்லது சஷ்டி திதியில் திருச்செந்தூர் முருகப் பெருமானை சென்று தரிசித்து வருவது நல்லது. அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு பௌர்ணமி திதியன்று மறவாமல் சென்று வாருங்கள். நல்லது நடக்கும்.

எனக்கு என்ன தொழில் அமையும்? ஜோதிடம் வருமா? வைத்தியம் செய்யலாமா? மாந்த்ரீகம் செய்யலாமா? இதில் எந்த தொழில் சிறப்பாக அமையும்? இப்போது பூசாரியாக இருக்கிறேன். என் மகனுக்கு எப்போது அரசு வேலை அமையும்? சித்தர்களின் தரிசனம் கிட்டுமா? ஏ. லோகநாதன், சேலம்.

கடித உறையில் ‘ஓம் வைத்தீஸ்வரன் ஜோதிட நிலைய ஜோதிடர்’ என்று குறிப்பிட்டிருக்கும் நீங்கள், உங்கள் மகனின் ராசிச் சக்கரத்தில் ஆறு கிரகங்களை மட்டுமே நிரப்பி அனுப்பி இருக்கிறீர்கள்! சுக்கிரன், ராகு, கேது என்ன ஆனார்கள்? உங்கள் மகன் ஜாதகத்தில் லக்னாதிபதி மறைந்தாலும், ஆட்சி பெற்றிருப்பதால், சுயதொழில் நன்றாக இருக்கும். எனவே தனியார் நிறுவனத்தில் அவருக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்தோம். 12.9.2012லிருந்து சனி மகாதசை தொடங்கியுள்ளது.

சனி 3ல் நிற்பதாலும், நற்சாரம் பெற்றிருப்பதாலும், சாஸ்தா, முனீஸ்வரர், கருப்பசாமி உள்ளிட்ட வனதேவதைகளின் பூசாரியாக நீங்கள் தொடர்வதுதான் நல்லது. ஜோதிடமும், வைத்தியமும் உங்களுக்கு ஒத்துவராது. மாந்த்ரீகத்தில் ஈடுபட்டால் உங்கள் மகனை அது பாதித்துவிடும். டிபன் ஸ்டால் வைத்து நடத்தலாம். சதுரகிரி மலைக்கு அமாவாசை திதியில் செல்லுங்கள் உங்களுக்கு சித்தர் அருள் கிடைக்கும். உங்கள் ஜாதகப்படி குடும்ப வாழ்க்கை சுமார்தான். குடும்பத்தாரின் உதவியும் தாமதமாகத்தான் கிடைக்கும்.

நான் சைக்கிள் டயர் பஞ்சர் ஒட்டும் கடை வைத்திருக்கிறேன். அது எப்படி இருக்கும்? இப்போதுதான் மூன்று மதத்திற்கு முன், வங்கிக் கடன் மூலம் லாரி ஒன்று வாங்கினேன் அது லோடு ஏற்றிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. என் தொழில் எவ்வாறு இருக்கும்? உடல்நிலை எப்படி இருக்கும்? என் மகள் படிப்பில் மந்தமாக இருக்கிறாள். அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது 9ம் வகுப்பு படிக்கிறாள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்த வருடம் எழுத வேண்டியிருப்பதால் அவளது படிப்பை நினைத்து மிகவும் கவலையாக உள்ளது. அவளது படிப்பு, எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? எம்.ஜி.பி.

ரிஷப லக்னம், கன்னி ராசியில் பிறந்திருக்கும் நீங்கள், சிறு வயதிலிருந்தே கடுமையாகப் போராடி உங்களின் கடின உழைப்பால் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள். இதுவரை உங்களுக்கு நடைபெற்ற தசாபுக்திகள் எதுவும் யோகமானதாக இல்லை. ஆனால், 21.6.2010 லிருந்து உங்களுக்கு நேரடி யோகப் பலனை தரும் கிரகமான சனி பகவானின் தசை நடைபெற்று வருவதால், இனி அனைத்து வகை முன்னேற்றமும் உங்களுக்கு உண்டு. சனியும், ராகுவும் சேர்ந்து லாப வீட்டில் நிற்பதால் தொட்டதெல்லாம் துலங்கும் சமூக அந்தஸ்தும் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும்.

சனி கிரகமானது இரும்பு, வாகனங்கள், உணவு சம்பந்தப்பட்டது என்பதால் சைக்கிள் பஞ்சர் கடையும், லாரி வியாபாரமும் இனி சூடு பிடிக்கும். தற்சமயம் ஏழரைச்சனி நடைபெறுவதால் டிசம்பர் 2014 வரை லாரிக்கு நேர்மையான ஒருவரை ஓட்டுனராக நியமியுங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படவும், ஓட்டுனர் உங்களை ஏமாற்றவும் வாய்ப்பிருக்கிறது. எனவே புதிதாக அறிமுகமானவர்களை நம்பி லாரியை ஒப்படைக்க வேண்டாம். 2015லிருந்து வாகன லாபம் அதிகரிக்கும். வங்கிக் கடனையும் நல்ல முறையில் தீர்ப்பீர்கள். மேலும் ஒரு லாரியை வங்கிக் கடனுதவியுடன் வாங்குவீர்கள். உங்கள் மகளின் ஜாதகம் நன்றாக இருக்கிறது. வருங்காலமும் சிறப்பாக இருக்கிறது. வாக்கு ஸ்தானத்தை பாப கிரகங்கள் ஆக்ரமித்திருப்பதாலும், தற்சமயம் நடைபெறும் தசாபுக்தி சுமாராக இருப்பதாலும்தான் படிப்பில் மந்தமாக உள்ளார்.

அடுத்த கல்வி ஆண்டிற்கான காலகட்டத்திற்குரிய கிரகங்கள் நன்றாக இருப்பதால் உங்கள் மகளின் உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். கவலை வேண்டாம். வணிகவியல் பாடப்பிரிவில் +1 சேர்ப்பது நல்லது. சந்திரன் கேதுவுடன் நிற்பதால் அறிவியில் பாடத்திலும், புதன் நீசமாகி பின்னர் வலுவடைந்ததால் கணிதப் பாடத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஜூன் 2013 முதல் உங்கள் மகளுக்கு கூடுதல் பயிற்சி அளிப்பது நல்லது. உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் மகள் மனம் புண்படும்படியோ, மகளின் தன்னம்பிக்கையை சிதைக்கும்படியோ பேசாதீர்கள். உற்சாகப்படுத்துங்கள். பத்தையும் தாண்டி
பன்னிரண்டிலும் வெற்றி பெறுவார்.
 
நான் 1981 முதல் 1984 வரை மத்திய அரசில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணியாற்றியுள்ளேன். அதன்பிறகு 21.5.1984 முதல் 31.3.2009 வரை தமிழ்நாடு அரசில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று விட்டேன். நான் மத்திய அரசில் பணியாற்றிய காலத்தை மாநில அரசு ஓய்வூதியத்துக்கு கணக்கிட்டுக் கொள்ளும்படி தமிழக முதல்வர் உள்ளிட்ட பல அமைச்சர்களுக்கும் மனு கொடுத்தும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. நான் மத்திய அரசில் பணியாற்றிய காலத்தை மாநில அரசு ஓய்வூதியத்துக்கு கணக்கிட்டுக் கொள்ள ஆசைப்படுகிறேன். நடக்குமா? மேலும் மேலே குறிப்பிட்டுள்ள குரு தசை, சனி புக்தியில் எனது ஆயுட்காலம் முடிவடையும் என நான் நினைக்கிறேன். எனது ராசியிலிருந்து 7ல் சுக்கிரன் இருப்பதால் பெண்மணிகளால் இன்று வரை துன்பம்தான் வந்ததே தவிர நன்மை ஒன்று இல்லை. ஏ.வி. வெங்கட்ராமன், சென்னை.

உங்கள் ஜாதகம் பல சூட்சுமங்களை கொண்டதாக இருக்கிறது. எப்போதும் எதிர்நீச்சல் போட வேண்டியதாக உள்ளது. கிரக அமைப்புகள் வித்தியாசமாக இருப்பதால்தான் தொடர்ந்து நீங்கள் போராடிக் கொண்டே இருக்கிறீர்கள். சர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு, லக்னாதிபதியான செவ்வாய் உபய வீட்டில் நிற்பது அனைத்து சுகங்களையும் அனுபவிக்கக் கூடிய அமைப்பாகும். ஆனால், லக்னாதிபதி செவ்வாயுடன் நிழல் கிரகமான கேது நிற்பதாலும், மங்களன் வக்ரமாகி நிற்பதாலும் எளிதில் எந்த சுகத்தையும் அனுபவிக்க முடியாமல் போகிறது. எதுவும் காலங்கடந்துதான் உங்களுக்கு கிடைக்கும். இதே போல பூர்வ புண்ணியாதிபதியான சூரியனுடன் புதன் சேர்ந்து 12ல் நிற்பது புதாதித்ய யோகத்தையும், அரசியல் செல்வாக்கையும் தரக்கூடியது.

ஆனால், ராகு இவ்விரு கிரகங்களுடன் சேர்ந்து நிற்பதால்தான் அரசாங்கத்துடன் மோத வேண்டியுள்ளது. சுகாதிபதி சந்திரன் பூர்வ புண்ணிய வீடான 5ம் வீட்டில் இருப்பது நல்லதுதான். ஆனால், அந்த சந்திரனுடன் பாதகாதிபதி சனி சேர்ந்திருப்பது கெடுதலான அமைப்பாகும். மேஷ சர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு, சுக்கிரன் யோகாதிபதி அல்ல. பெண் ஆதிக்க கிரகங்களான சந்திரனும், சுக்கிரனும் சேர்க்கை பார்வை பெற்றிருப்பதால்தான் பெண் அதிகாரிகளின் எதிர்ப்பை பெற்றிருக்கிறீர்கள். அரசாங்க கிரகங்களான சூரியன், குரு, செவ்வாய் மூவரும் பலவீனமடைந்ததால்தான் ஆளுபவர்களால் அனுகூலமடைய முடியாமல் போய்விட்டது.

கோச்சாரப்படி 1.6.2013க்குப் பிறகு அரசால் நீங்கள் ஆதாயமடைய வாய்ப்பிருக்கிறது. குருபகவான் லக்னாதிபதி செவ்வாயின் சாரத்தில் அமர்ந்திருப்பதால் உங்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு. குரு தசையும் உங்களுக்கு ஓரளவு யோகப் பலன்களை தரக்கூடும். குரு தசையில் புதன், கேது புக்திகளில் மட்டும் உடல் உபாதைகள் வந்து நீங்கும். ஏழரைச்சனி விலகினாலும் குரு தற்சமயம் பலவீனமாக இருப்பதால்தான் எந்த வேலையையும் முடியாமல் எதிர்பார்ப்புகளும் நிறைவேறாமல் உள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும்

சிறு தொழில் தொடங்குவோருக்கு சில ஆலோசனைகள்!

நம்மில் பலர், படித்துவிட்டு சுயதொழில் தொடங்க ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்தவித தொழிலை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதில் ஒருவித குழப்ப நிலை இருக்கும்.
அப்படிப்பட்டவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் சிறந்த வழிகாட் டியாக இருந்து தொழிலை தொட ங்க உதவுகிறது. தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பவர்க ளுக்காக, U.Y.E.G.P. திட்டத்திலி ருந்து சில ஆலோசனைகளை கேள்வி பதில் வடிவில் பார்ப் போம் .
கேள்வி: லோடு ஆட்டோ வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா?

பதில்: சிறு வாகன கடன் என்பது சேவைப்பிரிவைச் சார்ந்தது. இதில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட முதலீடு ரூ.3 இலட்சம். மீதமுள் ள தொகையை பயனாளிகள் சொந்த முதலீடாக செய்வதாக இருப்பின், இந்த திட்டத்தில் பயன்பெற அடிப்படையான நலிவுற்றோர் என்ற தகுதி இல்லாமல் போய்விடும். மேலும் வாகன கடன் கேட்டு விண்ணப் பிப்பதற்கு செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம், வில்லை ஆகியன அவசியம்.
கேள்வி: U.Y.E.G.P. திட்டத்தில் கடன் பெற்றால் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படுமா?

பதில்: கண்டிப்பாக வேலை வாய்ப்பு பதிவு ரத்துசெய்யப்பட மாட்டாது.
கேள்வி: 36 வயது உள்ள ஒருவர் இந்தத் திட்டத்தில் விண்ணப் பிக்க முடியுமா?
பதில்: பொதுப்பிரிவினராக இருந்தால், விண்ணப்பிக்கும் தினத்தில் 35 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது. சிறப்பு பிரிவினராக இருந் தால் 45 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது.
கேள்வி: பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க லாமா?
பதில்: இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ட கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே. ஆகையால் தயக்கமின்றி விண்ணப்பிக்கலாம்.
கேள்வி: ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வாரிசுகளுக்கு, முன்னாள் ராணுவத்தினருக்கான வயது வரம்பு சலுகை கிடைக்குமா?
பதில்: முன்னாள் ராணுவத்தினருக்கு என வழங்கப்படும் வயது வரம்பு சலுகை முன் னாள் ராணுவத்தினருக்கு மட்டுமே பொருந் தும். அவர்களின் குடும்பத்திற்கோ, பாதுகா வலில் உள்ளவர்களுக்கோ பொருந்தாது.
கேள்வி: பள்ளி மாற்றுச் சான்று பெறாதவர்கள் விண்ணப்பிக்க முடியுமா?

பதில்: பள்ளித்தலைமை ஆசிரியரிட ம் தொடர்புகொண்டு, மாற்றுச் சான்றித ழை பெற்றுவந்தால் விண்ணப்பதாரரி ன் கல்வித்தகுதி ஏற்றுக்கொள்ளப்படு ம்.
கேள்வி: திட்ட அறிக்கை தயாரிக்க எவ்வளவு செலவாகும்?
பதில்: விண்ணப்பதாரர்கள் உத்தேசித்துள் ள திட்டம் குறித்த உத்தேச வரவு-செலவு மற்றும் முதலீட்டு விபரங்களை நீங்களே தயாரிக்கலாம். மாவட்ட தொழில் மையங் களிலும், சிறு குறு நடுத்தர தொழில் நிறு வனங்களின் மேம்பாட்டு நிறுவனங்களிலு ம் கிடைக்கக் கூடிய மாதிரி திட்ட அறிக்கை களை பார்வையிட்டும் திட்ட அறிக்கைக ளை தயாரிக்கலாம்.
கேள்வி: தொலைநிலைக் கல்வி (Distance Education) மூலம் படிப்பவர்களும் விண்ணப்பிக்க முடியுமா?
பதில்: விண்ணப்பிக்க முடியும்.

கேள்வி: பழைய இயந்திரங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் தொழிலுக்கு கடன் கிடைக்குமா?
பதில்: பழைய இயந்திரங்களை விலை நிர்ண யம் செய்து விற்பவர் மற்றும் வாங்குபவர் மட்டு மே தொடர்பானது. எனவே அந்த மதிப்பீடு அரசாங்கத்திலும், வங்கியிலும் ஏற்றுக்கொள் ளப்படுவதில்லை. மேலும் பழைய இயந்திரங் கள் தாம் முதலில் நிறுவப் பட்ட இடத்தில் ஏற் கனவே வேலைவாய்ப்பு உருவாக்குதல் என்ற கடமையை செய்து முடித்துவிட்டதாக கருதப்படுகிறது. எனவே பழைய இயந்திரங்க ள் கொள்முதலுக்கு கடன் கிடையாது.
கேள்வி: பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலு க்கு, கூடுதல் இயந்திரம் வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா?
பதில்: U.Y.G.E.P. திட்டம் புதிய தொழில் களுக்கு மட்டுமே. எனவே இதில் விரிவாக்க த்திற்கு கடனுதவி கிடையாது. நீங்கள் உங் கள் சேவைப்பகுதிக்கான வங்கி மேலாள ரை அணுகி சிறு தொழிலுக் கான கடனுத வியை கேட்டு பெற்றபின், மாவட்ட தொழி ல் மையத்தை அணுகி விரிவாக்கத்துக்கான மானியத்தை பெற்றுக் கொள்ளலாம்.
கேள்வி: U.Y.G.E.P. திட்டத்தில் கடன் பெற்றால் அந்த நிறுவனத் திற்கு தமிழக அரசின் சிறுதொழில் நிறுவனங்களுக்கான மானிய ங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்குமா?

பதில்: U.Y.G.E.P. திட்ட மானியமாக திட்ட முதலீட்டில் 15 சதவீதம் வழங்கப்படுகிறது. இது தவிர குறைந்த அழுத்த மானியம், வாட் மானியம், மின்னாக்கி மானியம் போன்ற சலுகைகள், விண்ணப்ப தாரர் நடத்திவரும் தொழில் மற்றும் நிறுவன அமைவிட அடிப் படையில் மானியம் வழங்கப்படும்.
கேள்வி: ஏற்கனவே வேறு ஒரு மானிய கடனுதவி திட்டத்தில் கடனுதவி பெற்று, கடனை முழுவதுமான திருப்பி செலுத்தியவர் கள், U.Y.G.E.P. திட்டத்தில் புதிதாக கடன் பெற முடியுமா?
பதில்: ஏற்கனவே மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றிருந்தா ல், இந்த திட்டத்தில் கடன் கேட்டு விண்ணப்பிக்க தகுதி இல்லை. நிதி நிறுவனங்களில் சிறுதொழில் கடனுதவியை பெற்று தகுதி அடிப்படையில் மானியம் பெற்று பயன் அடையவும்.
கேள்வி: ஹாலோ பிளாக் தொழிலுக்கு, சிறு கட்டிடடம் கட்டுவ தற்கான உத்தேச மதிப்பீட்டை திட்ட முதலீட்டில் சேர்த்துக் கொள் ளலாமா?
பதில்: தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் உத்தேசித் துள்ள உற்பத்தி தொழில் தொடங் குவற்கு தேவையான கட்டிடம், இயந்திர தளவாடம் மற்றும் நடை முறை மூலதனம் ஆகியவற்றின் மொத்த திட்ட மதிப்பு ரூ.5 லட்சத் துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பி.கு: உங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுங்கள்!
நன்றி: தினத்தந்தி

 

 

 

சுய தொழில் தொடங்க தனி நபர் கடன் வாங்க ஒரு விழிப்புணர்வு


சுய தொழில் தொடங்க தனி நபர் கடன் வாங்க ஒரு விழிப்புணர்வு





 

மெழுகுவர்த்தி செய்வது எப்படி?

 




  • வேக்ஸ்(wax)


  • க்ரையான்ஸ்


  • தேங்காய் எண்ணெய்


  • திரிநூல்


  • ப்ளாஸ்டிக் மோல்டிங்


  • எசன்ஸ் - ஜாஸ்மின், தாழம்பூ


மெழுகுவர்த்தி செய்வதற்கு தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு சில்வர் பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும். அதன் உள்ளே சிறிய பாத்திரத்தில் வேக்ஸை கொட்டி அடுப்பை ஆன் செய்யவும். தண்ணீர் நன்கு கொதிவந்ததும் வேக்ஸ் மெல்ல உருக தொடங்கும். ப்ளாஸ்டிக் மோல்டிங்கில் உள்ள ஒரு டிசைனுக்கு 3 மேசைக்கரண்டி அளவு வேக்ஸ் தேவைப்படும்.
வேக்ஸ் உருகி தண்ணீர் போல் வந்ததும் விரும்பிய க்ரையான்ஸ் நிறத்தை துருவி சேர்க்கவும். கரண்டி அல்லது கத்தியால் அவை கரையும் வரை கிளறி விடவும். க்ரையான்ஸ் எவ்வளவு சேர்க்கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் தான் மெழுகுவர்த்தி நிறம் அமையும்.
அதில் விரும்பிய எசன்ஸை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
மற்றொரு நிறத்தில் செய்யவேண்டுமெனில் பாத்திரத்தை சுத்தமாக்கி எடுத்துக் கொண்டு மேற்சொன்ன முறையில் தயார் செய்யவும்.
வேக்ஸ் உருகி கொண்டிருக்கும் நேரத்தில் ப்ளாஸ்டிக் மோல்டிங் முழுவதும் தேங்காய் எண்ணெயை சற்று அதிகமாக தடவி வைக்கவும். அதிலுள்ள துளையில் திரிநூலை கோர்த்து அடியில் ஒரு இன்ச் இருப்பதுபோல் வைத்துவிட்டு மீதியை மோல்டிங் உள்ளே வைத்துவிடவும்.
ப்ளாஸ்டிக் மோல்டிங்கை பின்பக்கமாக திருப்பி திரிநூல் நுழைத்த பக்கத்தில் மெழுகுவர்த்தியை ஏற்றியப்பின் உருகும் வேக்ஸை அந்த திரியின் ஓரங்களில் துளைகள் எதுவும் தெரியாதவாறு அடைத்து வைக்கவும்.
க்ரையான்ஸூம், வேக்ஸூம் நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு திரிநூல் போட்டு தயாராக வைத்திருக்கும் மோல்டிங் நிரம்ப ஊற்றவும்.
சிறிது நேரத்தில் இறுக ஆரம்பிக்கும். 5 அல்லது 6 மணி நேரம் கழித்து பார்க்கும் பொழுது நன்கு இறுகி மோல்டிங்கில் ஒட்டாமல் சற்று விலகி இருப்பதுபோல் இருக்கும்.
மோல்டிங்கில் ஊற்றிய மெழுகுவர்த்தி ஒரு மணி நேரத்தில் இறுகினது போல் தெரிந்ததும் அதனை அகலமான பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குளிர்ந்த பிறகு தனியாக கழற்றி எடுத்துக் கொள்ளலாம். அதிக நேரம் வைத்து இருப்பதற்கு பதிலாக இதுப்போல் செய்யலாம்.
பின்பக்கத்தில் மெழுகுவர்த்தியால் அடைத்த பக்கத்தை சுரண்டி எடுத்து விட்டு மெழுகுவர்த்தியை தனியாக எடுத்து வைக்கவும்.
மெழுகுவர்த்திகள் தயார். மோல்டிங் இல்லையென்றால் ஏதாவது ஒரு சிறிய பாத்திரத்திரத்தை அச்சாக பயன்படுத்தி செய்யவும்.
ஒரு கண்ணாடி டம்ளரில் பளிங்கு கற்கள், பூ, பழத்துண்டுகள் ஏதாவது ஒன்றை கால்பாகம் வரை நிரப்பி டம்ளர் முழுவதும் தண்ணீர் ஊற்றி அதன் மேல் மெழுகுவர்த்தி மிதக்கவிட்டு ஏற்றி வைக்கலாம்.

Note:

மோல்டிங் பின்பக்கத்தை மெகுவர்த்தியால் அடைக்காமல் செய்தால் வேக்ஸை உருக்கி ஊற்றும் பொழுது அந்த துளையின் வழியாக வழிந்தோடும். பாத்திரத்தில் செய்யும் பொழுது இதுப்போல் அடைத்து செய்ய வேண்டிய வேலை இருக்காது.

பேப்பர் தட்டுகள்


சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள்.  இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம்

மின் தடை இல்லாமல் இருந்தால், ஒரு நாளில் 10 ஆயிரம் பிளேட் தயாரிக்கலாம். ஒரு பிளேட்டுக்கு 20 பைசா லாபம். அலுவலகம், வீடு ஆகியவற்றில் நடைபெறும் விசேஷங்களில் பேப்பர் பிளேட் பயன்பாடு அதிகரித்து வருவதால் தயாரித்தவுடன் விற்று விடுகிறது.

கட்டமைப்பு: இயந்திரங்கள் நிறுவ 10 அடி நீள, அகலத்தில் ஒரு அறை,  தேவையான பேப்பர், உற்பத்தியான பிளேட்களை இருப்பு வைக்க மற்றொரு அறை, 1.5 ஹெச்பி மின் இணைப்பு (ரூ.3 ஆயிரம்). முதலீடு: பேப்பர் பிளேட் இயந்திரம் 1 (ரூ.1.4 லட்சம்),  பேப்பரை 5, 6, 7, 8, 9, 10, 12 ஆகிய இஞ்ச் அளவுகளில் வட்ட வடிவில் வெட்ட பிளேடுகள் மற்றும் அந்த அளவுகளில் பிளேட் செய்வதற்கான டை 7 (ரூ.54 ஆயிரம்) என மொத்தம் முதலீடு ரூ.1.94 லட்சம்.

உற்பத்தி பொருட்கள்: பாலிகோட் ஒயிட் பேப்பர் (திக் ரகம் டன் ரூ.72 ஆயிரம், நைஸ் ரகம் ரூ.40 ஆயிரம்) சில்வர் திக் (டன் ரூ.38 ஆயிரம்), சில்வர் நைஸ் (டன் ரூ.30 ஆயிரம்), புரூட்டி பேப்பர் திக் (டன் ரூ.50 ஆயிரம்), நைஸ் ரகம் (ரூ.38 ஆயிரம்) மற்றும் பேக்கிங் கவர்,  லேபிள், செலோ டேப். கிடைக்கும் இடங்கள்: பேப்பர் பிளேட் மெஷின் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களிலும், பேப்பர்களில் பாலிகோட் ஒயிட், சில்வர் திக் ஆகியவை சிவகாசி, சில்வர் நைஸ் டெல்லி, புரூட்டி பேப்பர் திக், நைஸ் ஆகியவை கேரளாவிலும் மலிவாக கிடைக்கின்றன.

உற்பத்தி செலவு: வாடகை, மின்கட்டணம், உற்பத்தி பொருட்கள், கூலி உள்பட பாலிகோட் ஒயிட் 6 இஞ்ச் பேப்பர் பிளேட் தயாரிக்க 20 பைசா, 7 இஞ்ச் தயாரிக்க 45 பைசா, 8 இஞ்ச் 60 பைசா, 10 இஞ்ச் ரூ.1, சில்வர் திக் 8 இஞ்ச் ரூ.1, 10 இஞ்ச் ரூ.1.30, சில்வர் நைஸ் 6 இஞ்ச் 25 பைசா, 7 இஞ்ச் 45 பைசா, புரூட்டி பேப்பர் 8 இஞ்ச் ரூ.1, 10 இஞ்ச் ரூ.1.30 செலவாகிறது. 10 ஆயிரம் பிளேட் தயாரிக்க ஆகும் செலவு ரூ.7700. மாதத்தில் 25 நாளில் 2.5 லட்சம் பிளேட் உற்பத்திக்கு ரூ.1.92 லட்சம் தேவை.

வருவாய்: ஒரு பேப்பர் பிளேட்டுக்கு 20 பைசா லாபம் கிடைப்பதால் தினசரி லாபம் ரூ.2 ஆயிரம். 25 நாளில் ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும். விற்பனை வாய்ப்பு:  கேட்டரிங் நடத்துபவர்கள், சமையல் ஏஜென்ட்கள், விழாக்கள், அன்னதான நிகழ்ச்சி நடத்துபவர்கள் பேப்பர் பிளேட்களை வாங்குகிறார்கள். அவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். தரம், குறைந்த லாபம், நேரடி அணுகுமுறை இருந்தால் நிறைய ஆர்டர் கிடைக்கும்.

தயாரிப்பது எப்படி?
பேப்பர் பிளேட் இயந்திரம் இரண்டு பாகங்களை கொண்டது. ஒன்று கட்டிங் மெஷின், இரண்டாவது பேப்பர் பிளேட் டை மெஷின். இரண்டும் மின்சாரத்தில் இயங்கக் கூடியவை.  தயாரிக்க வேண்டிய பிளேட்டின் அளவுக்குரிய கட்டிங் வளையத்தை கட்டிங் மெஷினில் பொருத்த வேண்டும். கட்டிங் வளையத்துக்கு கீழ் பிளேட்டுக்குரிய பேப்பரை மொத்தமாக வைத்து இயக்கினால் கட்டிங் செய்யப்படும். வட்ட வடிவில் பேப்பர்கள் தனித்தனியாக கிடைக்கும். நைஸ் ரக பேப்பராக இருந்தால் 100 எண்ணிக்கை வரையும் திக் ரகமென்றால் 30 முதல் 40 வரை கட்டிங் செய்யலாம்.

கட் செய்த பேப்பர்களை பிளேட் டை மெஷினில் உள்ள அச்சின் மேல் வைத்து இயக்கினால் பேப்பரின் ஓரங்கள் வளைந்து பிளேட்களாக மாறும்.
பேப்பரை பிளேட்டாக வளைக்க டை மெஷின் 5 டிகிரி வெப்பம் இருக்க வேண்டும். அதற்கு உற்பத்தியை துவக்கும் முன்பு டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும்.

நிமிடத்திற்கு 30 பிளேட் தயாராகும். 40 பிளேட்களாக பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி செலோ டேப் ஒட்டி பேக்கிங் செய்ய வேண்டும். இப்போது பேப்பர் பிளேட் விற்பனைக்கு தயார்.

 பேப்பர் பிளேட் இயந்திரங்களை விற்பனையகங்களில் பார்வையிடலாம். அரை மணி நேரத்தில் இயக்குவதை கற்றுக் கொள்ளலாம். எளிய தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த தொழிலுக்கு மதிப்பு கூடி வருவதால் வங்கிகள் எளிதாக கடன் உதவி வழங்குகின்றன.

 

கொசு விரட்டி தயாரிக்கும் தொழில்


‘தற்போதைய வாழ்க்கை முறையில் ரசாயனங்களின் பங்கு மகத்தானது என்றாலும், இயற்கை பொருட்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். கொசுக்களை விரட்ட, நாங்கள் தயாரிக்கும் மூலிகை லிக்யுட், நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொசு விரட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொண்டால், நல்ல லாபம் சம்பாதிக்கலாம். விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண் ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதன் வாசனை கொசு, பூச்சிகளை அண்ட விடாது. சாம்பிராணி, காய்ந்த வேப்பிலை புகை மூட்டம் போன்றவையும் கொசுகளை விரட்டும்.

இது பாரம்பரியமும், நவீனமும் கலந்தது. மின்சார விளக்கில் பொருத்தி பயன்படுத்தலாம். ஆஸ்துமா உள்ளிட்ட நோயாளிகளை கொசுவிரட்டி பாதிக்கக் கூடாது. இயற்கை முறையில் தயாரிப்பதால், இவை நோயாளிகளை பாதிப்பதில்லை.  வரும் காலத்தில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் பயன்பாடு அதிகரிக்கும்.


விற்பனை வாய்ப்பு

மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், சர்வோதய சங்கம், காதி கிராப்ட் விற்பனையகங்கள், நாட்டு மருந்து கடைகள், மருந்து கடைகள் ஆகியவற்றில் மூலிகை கொசுவிரட்டி லிக்யுட் விற்கப்படுகிறது. அங்கு நேரடியாக சப்ளை செய்யலாம். தினசரி கடைக்கு 5 பாட்டில் வீதம் 20 கடைகளுக்கு ஒரு நாள் உற்பத்தியான 4 லிட்டர் லிக்யுட்டை (100 பாட்டில்) எளிதில் விற்கலாம். இவ்வாறு சுழற்சி முறையில் வெவ்வேறு கடைகளில் சப்ளை செய்யலாம். தெரிந்தவர்களுக்கும், அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும் நேரடியாகவும் விற்கலாம். தரம் மிகவும் முக்கியம். நல்ல தரத்தோடு விலையும் ஏற்றதாக இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். விற்பனையும் அதிகரிக்கும்.

கட்டமைப்பு : மூலிகை லிக்யுட் காய்ச்ச வீட்டு சமையலறை, மூலிகைகளை காய வைக்க திறந்தவெளி. தளவாட சாமான்கள்: வர்த்தக கேஸ் சிலிண்டர் அடுப்பு, 15 லிட்டர் குக்கர், 30 அடி நீள பைப், அகன்ற பாத்திரம், 10 லிட்டர் பாத்திரம், 40 மி.லி காலி பெட் கன்டெய்னர்கள், லேபிள், பேப்பர் பேக்கிங் பாக்ஸ். இவற்றுக்கு செலவு ரூ.15 ஆயிரம்.

தேவைப்படும் பொருட்கள்: வேப்பிலை, துளசி, நொச்சி இலை, மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை. நாட்டு மருந்து கடைகளில் மற்ற மூலிகை பொருட்கள் கிடைக்கின்றன. சோற்று கற்றாழையை வீட்டில் வளர்க்கலாம். பெட் கன்டெய்னர் பாட்டில்கள் கோவை, மும்பை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கின்றன.

உற்பத்தி செலவு(மாதத்துக்கு): வேப்பிலை 500 கிராம் ரூ.10, துளசி 500 கிராம் ரூ.25, நொச்சி இலை 700 கிராம் ரூ.70, மஞ்சள் 100 கிராம் ரூ.10, சாம்பிராணி 150 கிராம் ரூ.40, குங்குலியம் 150 கிராம் ரூ.30, தும்பை 50 கிராம் ரூ.10, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை 1 கிலோ ரூ.20, 4 லிட்டர் மூலிகை கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் தயாரிக்க தேவையான மூலிகை பொருட்கள் செலவு ரூ.250, பேக்கிங் மெட்டீரியல் செலவு ரூ.50, உழைப்பு கூலி 2 நபருக்கு ரூ.300 வீதம் ரூ.600, இதர செலவுகள் ரூ.100 என தினசரி 1000 ரூபாய் செலவாகும். ஒரு மாதத்தில் 25 நாள் உற்பத்திக்கு ரூ.25 ஆயிரம் தேவை.

வருவாய்: உற்பத்தி செய்யப்படும் லிக்யுட் 40 மி.லி அளவுகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. ஒரு பாட்டில் ரூ.25க்கு கடைகளுக்கு விற்கப்படுகிறது. அவர்கள் ரூ.40 வரை விலை வைத்து விற்கிறார்கள். இவ்வாறு தினசரி உற்பத்தியாகும் 4 லிட்டர் லிக்யுட்டை 100 பாட்டில்களில் அடைத்து விற்பதன் மூலம் ரூ.2,500 கிடைக்கும். செலவு போக தினசரி லாபமாக ரூ.1,500 கிடைக்கும். இதுவே மாதத்தில் 25 நாட்களில் லாபம் ரூ.37,500.

தயாரிப்பது எப்படி?

வேப்பிலை, துளசி தலா 500 கிராம், நொச்சி 700 கிராம், மஞ்சள் 100 கிராம், சாம்பிராணி, குங்குலியம் தலா 150 கிராம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை தலா 50 கிராம் ஆகியவற்றை காயவைத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். சோற்று கற்றாழை ஒரு கிலோ எடுத்து கசப்பு நீங்கும்வரை கழுவ வேண்டும். மூலிகை பொடிகளையும், சோற்று கற்றாழை ஜெல்லையும் 10 லிட்டர் தண்ணீரில் போட்டு, குறைந்தது 6 நாள் முதல் 10 நாள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அவற்றை குக்கரில் போட்டு மூடி மிதமான தீயில் வைக்க வேண்டும் (வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி வரை).  குக்கரில் ஆவியை வெளியேற்ற விசில் போடும் இடத்தில், விசிலுக்கு பதிலாக 30 அடி நீள பைப்பை செருக வேண்டும். குக்கரில் இருந்து வெளியேறும் ஆவி, பைப் வழியாக வரும். அந்த பைப்பை தண்ணீர் நிரப்பப்பட்ட அகன்ற பாத்திரத்தில் மூழ்கியவாறு வைக்க வேண்டும்.

பைப் வழியாக வரும் ஆவி குளிர்ந்து தண்ணீரும், எண்ணெயும் கலந்தவாறு சொட்டு சொட்டாக வெளியேறும். பாத்திரத்தின் கீழ் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரும், மேல் பகுதியில் 3 லிட்டர் எண்ணெயும் மிதக்கும். மேலே மிதக்கும் எண்ணெய் தான் கொசு விரட்டி மூலிகை லிக்யுட். இதற்கு மூன்றரை மணி நேரம் ஆகும். அதற்குள் குக்கரில் உள்ள தண்ணீர் வற்றி விடும். பிறகு தீயை அணைத்து விட வேண்டும். தண்ணீரும், எண்ணெயும் கலந்த பாத்திரத்தில் உள்ள எண்ணெயை மேலோட்டமாக வடித்து எடுத்து கொள்ளலாம் அல்லது ஏர் பில்லர் மூலம் உறிஞ்சி எடுக்கலாம்.
எண்ணெய் வடித்தது போக பாத்திரத்தில் மிஞ்சிய 4 லிட்டர் தண்ணீரை மீண்டும் குக்கரில் ஊற்ற வேண்டும். ஏற்கனவே குக்கரில் மூலிகை பொருட்கள் மசாலா போல் தங்கியிருக்கும். இதில் தண்ணீர் கலந்தவுடன் மீண்டும் மிதமான தீயில் வேக வைத்து, ஆவி வெளியேறி, அதன் மூலம் மேலும் ஒரு லிட்டர் லிக்யுட் கிடைக்கும். இவ்வாறு ஒரு நாளில் ஒரு முறை 4 லிட்டர் கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் கிடைக்கும். சேகரித்த தைலத்தை பெட் கன்டெய்னர் பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்தால் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் விற்பனைக்கு தயாராகி விடும். தினசரி 4 லிட்டர் தயாரிக்க, 10 நாளுக்கு முன்பே மூலிகை பொருட்களை தண்ணீரில் ஊறப் போட வேண்டும்.

 

 

மெழுகுவர்த்தி தொழில்


இதில், வேலைப்பளு குறைவு. குறைந்த முதலீடு, இட வசதி போதுமானது. ஒருவர் மட்டும் உழைத்தாலே போதும். வீட்டிலேயே இதை நல்ல முறையில் நடத்த முடியும். தினமும் குறைந்தது 5 கிலோ, அதிகபட்சம் 25 கிலோ மெழுகுவர்த்தி தயாரிக்க முடியும். இதற்கு ஹேண்ட் மெஷின், செமிஆட்டோமெடிக் என்ற இரு வகை மெஷின்கள் உள்ளது.  ஹேண்ட் மெஷின் ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகிறது. செமி ஆட்டோமெடிக் மெஷின் வாங்க ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. செமி ஆட்டோமெடிக் மூலம் நாள் ஒன்றுக்கு 75 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். தொழில் தொடங்க, வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும்.

பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டம், கதர் கிராம தொழில் வாரியம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவற்றில் 35 சதவீத மானியத்தில் வங்கி கடன் எளிதாக பெற முடியும். கிராமமாக இருப்பின் கடன் தொகையில் 35 சதவீதமும், நகர்ப்புறமாக இருப்பின் 25 சதவீதமும், பெண்களுக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் கிடைக்கிறது. ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் எந்தவித கேரண்டியும் கேட்பதில்லை. இவ்வாறு மகேஸ்வரி கூறினார்.

என்னென்ன தேவை?

பெட்ரோல் கழிவில் இருந்து கிடைக்கும் மெழுகு, காட்டன்நூல், அச்சு, அலுமினிய டிரே, மெழுகு ஊற்றுவதற்கான கோப்பை, கட் செய்ய சிறிய கத்தி, மெழுகு உருக்க அடுப்பு, அச்சில் மெழுகு ஒட்டாமல் இருக்க தேங்காய் எண்ணெய், கலர் வருவதற்கு புளோரிசன் கெமிக்கல், தண்ணீர் ஊற்றுவதற்கான பக்கெட், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள்.

தயாரிக்கும் முறை

கடைகளில் கிடைக்கும் மெழுகை வாங்கி வந்து ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு சூடேற்ற வேண்டும். அச்சில் மெழுகு ஒட்டாமல் வருவதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக தடவவேண்டும். சூடேற்றிய மெழுகை அச்சில் ஊற்ற வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து மெழுகு ஊற்றப்பட்ட அச்சை வாளி தண்ணீரில் போட வேண்டும். சூடாக இருந்த மெழுகு மற்றும் அச்சு குளிர் நிலைக்கு வந்ததும், அச்சில் இருந்து மெழுகுவர்த்திகளை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். மெழுகுவர்த்தியை நீளமாக தான் உருவாக்க வேண்டும் என்று இல்லை. எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.

வெள்ளை கலரில் மட்டுமல்ல; எந்த வண்ணத்தில் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். என்ன வண்ணம் தேவைப்படுகின்றதோ அதற்கு ஏற்ற கலர் கெமிக்கல்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். இவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மெழுகில் சேர்த்தால் வண்ண மெழுகுவர்த்தி கிடைக்கும்.

ரகங்கள்

லோக்கல், வெள்ளை, கலர், கப், சிலை, ஜெல் என ஏராளமான வகைகளில் மெழுகுவர்த்திகள் உள்ளன. லோக்கல் என்பது நீளமாக இருக்கும் மெழுகுவர்த்தியை குறிக்கிறது. ஒவ்வொரு வகைக்கும் அச்சுகள் உள்ளது. அவற்றின் மூலம் பல்வேறு வகைகளில் தயாரிக்கலாம்.

முதலீடு

1 கிலோ மெழுகு தற்போது கடைகளில் ரூ.95க்கு விற்கப்படுகிறது. அச்சு வாங்க ரூ.500, டிரே ரூ.100, தேவையான எரிபொருள், பக்கெட் ரூ.50, காட்டன் நூல் (திரி) ஒரு கிலோ ரூ.120, கை மெஷின் ரூ.300. எடை போடுவதற்கான எலக்ட்ரானிக்ஸ் தராசு ரூ.400 என மொத்தம் ரூ.1,600 இருந்தால் போதுமானது.

வர்த்தக வாய்ப்பு

உற்பத்தி செய்த மெழுகுவர்த்திகளை மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை அணுகி ஆர்டர்கள் பெற்று விற்கலாம். மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்வதற்காக தனியே கடைகளும் உள்ளன. சர்ச்களிலும் ஆர்டர்கள் பெற முடியும்.

வருமானம்

ஒரு கிலோ மெழுகு ரூ.95க்கு கடைகளில் கிடைக்கிறது. இதை மெழுகுவர்த்தியாக தயாரித்து ஒரு கிலோ ரூ.120க்கு விற்கலாம். பெரும்பாலும் கடைகளுக்கு கிலோ கணக்கில் மட்டுமே விற்கப்படுவதால் ஒரு கிலோ விற்றால் ரூ.25 லாபம் கிடைக்கிறது. திரி தயாரிக்க பயன்படும் காட்டன்நூல், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவும் குறைவு. ஒரு நாளைக்கு சாதாரணமாக 20 கிலோ வரை மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம். ஒரு கிலோவுக்கு ரூ.25 லாபம் கிடைக்கிற நிலையில் 20 கிலோவுக்கு ரூ.500 வரை வருமானம் கிடைக்கிறது. பேக்கிங் செலவு, பாலிதீன் கவர்கள், காட்டன் நூல் செலவு உள்ளிட்டவற்றை கழித்தால் ரூ.450 வரை உறுதியாக லாபம் ஈட்ட முடியும். ஆர்டர்கள் தொடர்ந்து கிடைத்தால் மாதம் ரூ.13,500 வரை லாபம் ஈட்ட முடியும்.

டிப்ஸ்: திரி மூழ்காதவாறு தண்ணீரில் வைத்தால், 2 மணி நேரம் எரியும் மெழுகுவர்த்தி 3 மணி நேரம் எரியும்

ஆயிரம் ரூபாய் போதும் ; பைண்டிங்கில் அசத்தலாம்


ஆண்டு முழுவதும் படிக்கக்கூடிய பாடப்புத்தகங்கள் சிதையாமல் இருக்க பைண்டிங் செய்வது வழக்கமாக உள்ளது. பல்வேறு நிறுவனங்களில் கம்ப்யூட்டர் இருந்தாலும் ஆவணங்களை பாதுகாக்க இன்றும் பைண்டிங் செய்யப்பட்ட லெட்ஜர்கள் பயன்படுத்தப்படுகின்றன. பைண்டிங் தொழிலுக்கு என்றும் குறையாத வருவாய் உள்ளது. இதில், ஈடுபடுபவர்கள் வீட்டில் இருந்தவாறே ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சுய வேலைவாய்ப்பு பெறுவதோடு, லாபமும் அடையலாம் என்று கூறுகிறார் கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்த உமா.

அவர் கூறியதாவது: பிஎஸ்சி விலங்கியல், எம்ஏ, பிஎட் மற்றும் இந்தி படித்துள்ளேன். தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக உள்ளேன். படித்து முடித்த பிறகு, வேலை கிடைக்கும் வரை ஏதாவது தொழில் செய்யலாம் என்று இருந்தபோது, கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலையில் பல்வேறு சுய வேலைவாய்ப்பு தொழில் குறித்த பயிற்சிகளை அளித்தார்கள். அதில் சேர்ந்து புக் பைண்டிங் பயிற்சி பெற்று, வீட்டிலேயே பைண்டிங் வேலை செய்ய துவங்கினேன்.

புத்தகம் பைண்டிங் செய்வது எளிய வேலைதான். பசை காய்வதற்கு மட்டும் காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்தையும் தனித்தனியாக பைண்டிங் செய்யக்கூடாது. தேவையான பொருட்களை தயாராக வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தமாக புத்தகங்களுக்கு பைண்டிங் செய்வதே சிறந்தது.  8 மணி நேரத்தில் 50 புத்தகங்களை ஒருவரே பைண்டிங் செய்து விட முடியும். புத்தக விளிம்புகளை பிரின்டிங் பிரஸ்களில் கொடுத்து கட்டிங் செய்து கொள்ளலாம்.
பெரிய முதலீட்டில், பைண்டிங் செய்ய விரும்புபவர்கள் கட்டிங் மெஷின் வாங்கி வைத்துக்கொள்ளலாம். புத்தகம் நன்றாக அமுங்க பிரஸ்சிங்மெஷின், துளை போட டிரில்லிங் மெஷின் வாங்கி கொள்ளலாம்.

இந்த மெஷின்கள் இல்லாமல் ஆயிரம் ரூபாய் முதலீடு இருந்தால்கூட தொழிலை துவக்கிவிட முடியும்.  பைண்டிங் செய்து, அதன் மூலம் வரும் வருவாய் மூலம் தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம். வீட்டில் இருந்தவாறு சுய தொழில் செய்ய ஏற்ற தொழில் இது. பைண்டிங் செய்வதை ஒரு முறை பார்த்தால் போதும்; எளிதில் கற்றுக்கொள்ளலாம். ஆசிரியர் வேலை கிடைத்த பின், ஓய்வு நேரங்களில் பைண்டிங் செய்து வருகிறேன். அதன் மூலமும் வருவாய் கிடைக்கிறது.

பைண்டிங் செய்வது எப்படி?

முதலில் பைண்டிங் செய்யப்படும் புத்தகங்களின் அளவுகளை தனித்தனியாக எடுத்து, அதற்கேற்ப அட்டைகள், பிரவுன் ஷீட், மார்பிள் ஷீட், காலிகோ துணியை வெட்டி வைக்க வேண்டும். பைண்டிங் செய்ய வேண்டிய புத்தக முன் அட்டையின் இடது புற மார்ஜின் பகுதியில் தையல் போடுவதற்கு இடம் விட்டு, அதற்கடுத்து ஒரு இஞ்ச் அகலத்தில் மேலிருந்து கீழாக பைண்டிங் பேஸ்ட் தடவ வேண்டும். அதன் மீது 4 பக்கம் கொண்ட டபுள்ஷீட் பிரவுன் பேப்பரை ஒட்ட வேண்டும். இதேபோல் புத்தகத்தின் பின்புறமும் ஒட்ட வேண்டும். பின்னர் பேஸ்ட் காயும் வரை காத்திருக்க வேண்டும்.

பின்னர் தையல் போட ஒதுக்கப்பட்ட பகுதியில் சம இடைவெளியில் 3 துளைகள் போட அளவெடுக்க வேண்டும். 3 துளைகள் போட உத்தேசித்த இடத்தில், மேல் துளையிலிருந்து கீழ் துளை வரையிலான பகுதியில் பேஸ்ட் தடவி காலிகோ துணியை ஒட்ட வேண்டும். ஒட்டிய துணி காயும் வரை காத்திருக்க வேண்டும். அடுத்து, காலிகோ துணியில் உத்தேசித்த இடத்தில் ஆணியால், சுத்தியல் மூலம் 3 துளை போட வேண்டும். பின்னர் முப்பட்டை ஊசியில், ட்வைன் நூலை கோர்த்து, துளை வழியாக தையல் போட வேண்டும்.

தையல் போடும் போது 3 துளைகளில் புத்தகத்தின் முன்புறமுள்ள கீழ் துளை வழியாக ஊசி நூலை விட்டு பின்புறம் இழுத்து, அதை பின்புற மத்திய துளை வழியாக விட்டு முன்புறம் இழுக்க வேண்டும். அங்கு 2 முனைகளையும் முடிச்சு போட வேண்டும். இதேபோல் புத்தகத்தின் பின்புற மத்திய துளையின் மேல் பகுதியில் மற்றொரு முடிச்சு போடும் வகையில் தைக்க வேண்டும். இவ்வாறு தையல் போட்டால் இறுக்கமாக இருக்கும். பின்னர் ஏற்கனவே ஒட்டிய பிரவுன் ஷீட்டின் வெளிப்புறம் முழுவதும் பேஸ்ட் தடவி, அதில் பைண்டிங் அட்டையை ஒட்ட வேண்டும். இதேபோல் புத்தகத்தின் பின்புறத்திலும் செய்ய வேண்டும். ஒட்டிய அட்டை காயும் வரை காத்திருக்க வேண்டும்.

புத்தகத்தில் தைக்கப்பட்ட பகுதியிலும், அதன் மேல், கீழ் பகுதிகளிலும், ஏற்கனவே ஒட்டப்பட்ட அட்டை மீது அரை இஞ்ச் அளவு வரையும் பேஸ்ட் தடவ வேண்டும். அங்கு பேஸ்ட் தடவிய அளவுக்கு வெட்டிய காலிகோ துணியை, ஒட்ட வேண்டும். பின்னர் காய வைக்க வேண்டும். காய வைக்கும்போது முன்புறம் காய்ந்தவுடன், பின்புறம் காயும் வகையில் புத்தகத்தை திருப்பி விட வேண்டும். காய்ந்த பின்னர், அட்டை மீது மார்பிள் ஷீட்டை ஒட்டி அதையும் காய வைக்க வேண்டும். பின்னர் அவற்றை மெஷினில் 3 புறமும் கட்டிங் செய்தால் சீராக இருக்கும். கட்டிங் செய்த புத்தகங்களை அடுக்கி அவற்றின் மீது வெயிட் வைத்தால் பைண்டிங் செய்த புத்தகங்களின் அட்டைகள் வளையாமல் இருக்கும். பைண்டிங் செய்யப்பட்ட புத்தகங்கள் தயார்.

தேவைப்படும் பொருட்கள்!

4 வகை ஆணி(50 காசு), சுத்தியல் (ரூ.50), 3 வகை முப்பட்டை ஊசி (ரூ.10) ஆகியன மூலப்பொருட்கள். பிரவுன் ஷீட்(குயர் ரூ.40), பைண்டிங் பேஸ்ட் (பாக்கெட் ரூ.8), காலிகோ துணி (மீட்டர் ரூ.20), ட்வைன் நூல் (ஒரு கண்டு ரூ.17), பைண்டிங் அட்டை (ஒரு ஷீட் ரூ.7), மார்பிள் ஷீட் (ரூ.2). இவை ஸ்டேஷனரி, பேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும். ஆணி, சுத்தியல் ஹார்டுவேர் ஸ்டோர்களில் கிடைக்கும். பெரிய அளவில் பைண்டிங் தொழில் செய்வதாக இருந்தால் தனியாக ஒரு அறை வேண்டும்.  கட்டிங் மெஷின் (ரூ.1.5 லட்சம்), பிரஸ்சிங் மெஷின் (ரூ.5 ஆயிரம்), டிரில்லிங் மெஷின் (ரூ.2 ஆயிரம்) என ரூ.1.57 லட்சம் முதலீட்டுக்கு தேவை.

மாதம் ரூ.25 ஆயிரம் வருவாய்!

பள்ளி பாட புத்தகம் ஒன்று பைண்டிங் செய்ய ரூ.5 செலவாகும். ஒரு நாளைக்கு ஒரு நபர் 50 புத்தகங்கள் வரை பைண்டிங் செய்யலாம். இதற்கு ரூ.250 மதிப்பிலான பொருட்கள் தேவைப்படுகின்றன. 25 நாளில் 1250 புத்தகம் பைண்ட் செய்யலாம். அதற்கு ரூ.6,250 செலவாகும். பள்ளி பாட புத்தகம் ஒவ்வொன்றுக்கும் பைண்டிங் கூலி ரூ.20 வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளில் 50 புத்தகங்கள் மூலம் வருவாய் ரூ.1,000. செலவு ரூ.250 போக லாபம் ரூ.750. மாதம் ரூ.25 ஆயிரம் வருவாய் கிடைக்கும். இதில் லாபம் ரூ.18,750. இதை சுய தொழில் உழைப்பு கூலியாகவும் கருதலாம்.

ஆர்டர் எளிதில் கிடைக்கும்!

வீடுகளில், ‘இங்கு பைண்டிங் செய்யப்படும்’ என்று சின்ன போர்டு போட்டால் போதும். கல்வியாண்டு துவக்கத்தில் 2-3 மாதங்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தங்கள் வீட்டு பள்ளி, கல்லூரி பாட புத்தகங்களை பைண்டிங் செய்ய ஆர்டர் தருவார்கள். மற்ற மாதங்களில் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சென்று ஆவணங்களை பெற்று வந்து பைண்டிங் செய்து கொடுக்கலாம். அச்சகங்களில் அச்சிடப்படும் பில் புக் மற்றும் நோட்டுகள் உள்ளிட்டவற்றையும் பைண்டிங் செய்ய ஆர்டர் எடுக்கலாம். எளிதில் கிடைக்கும். சிறிய அளவு முதல் பெரிய லெட்ஜர் வரை நோட்டு புத்தகங்கள் உள்ளதால், அதற்கேற்ப கூடுதல் கூலி கிடைக்கும்.



1.நூடுல்ஸ் தயாரித்தால் வருவாய் சுவைக்கலாம்!



நூடுல்ஸ் என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். பெரியவர்களும் வெளுத்துக்கட்டுகின்றனர். இதனால், நூடுல்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. குடிசைத்தொழிலாக நூடுல்ஸ் தயாரித்து நிறைந்த லாபம் பார்க்கலாம்’ என்று கூறுகிறார் கோவை அஜ்ஜனூரை சேர்ந்த பூமாலை. அவர் கூறியதாவது: சொந்த ஊர் ஊட்டி. மதுரை காமராஜர் பல்கலையில் எம்ஏ பொது நிர்வாகவியல் படித்துள் ளேன். திருமணமான பின், கண வர் மற்றும் குழந்தைகளுடன் வசிக்கிறேன். சிறுவயது முதலே  சுய தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்று ஆசை.

பெரும்பாலானோர் விரும்பும் நூடுல்ஸ் தயாரிக்க முடிவெடுத்தேன். கோவை வேளாண் பல்கலையில் நூடுல்ஸ் தயாரிப்பு பயிற்சி அளிப்பதை அறிந்து அங்கு ஒரு மாதம் பயற்சி பெற்றேன். பின்னர் இத்தொழிலில் ஈடுபட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக நூடுல்ஸ் தயாரித்து விற்கிறேன். தினமும் 200 கிராம் கொண்ட 600 பாக்கெட்களை பல்வேறு பிராண்ட் நிறுவனங்களுக்கு விற்கி றேன். அதை வாங் கும் நிறுவனங்கள் தங் கள் நிறுவன பெயரில் விற்கின்றனர்.

சோயா, கம்பு, தக்காளி, கீரை, ராகி என பல்வேறு வகை நூடுல்ஸ்கள் தயாரிக்கிறேன். புதிய சுவைகளிலும் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். புதுப்புது வகைகளை அறிமுகப்படுத்துவதால் ஆர்டர்கள் குவிகின்றன. குறைந்த முதலீட்டில் குடிசைத் தொழிலாக யார் வேண்டுமானாலும் நூடுல்ஸ் தயாரித்து, தங்கள் பகுதியில் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம்.

தயாரிப்பது எப்படி?

பெரிய பாத்திரத்தில் 40 கிலோ மைதா, 30 கிலோ கோதுமை மாவு, 7 லிட்டர் தண்ணீர் ஊற்றி புரோட்டா மாவு பதத்தில் பிசைய வேண்டும். மாவை பதப்படுத்தும் இயந்திரத்தில் போட்டால், சன்னமாக தேய்த்து, ரோல் செய்யும். அதை அதே இயந்திரத்தில் பொருத்தினால், தேய்க்கப்பட்ட மாவு வெட்டப்பட்டு நூல், நூலாக வெளியேறும்.  அதைக் கம்பியில் தொங்க விட்டு, வேக வைக்கும் பாய்லருக்குள் வைத்தால், 40 முதல் 50 நிமிடம் வேகும். அவற்றை தேவையான அளவுகளில் எடை போட்டு, டிரேயில் வைத்து வெயிலில் ஒருநாள் உலர்த்த வேண்டும்.

பின்னர், அவற்றை பேக்கிங் செய்தால் நூடுல்ஸ் தயார். பேக்கிங் பாக்கெட்டுக்குள், நூடுல்ஸ் சமைக்கும் போது சுவையூட்டும் மசாலா பொடி பாக்கெட்டும் இணைக்க வேண்டும். கம்பு, ராகி, தக்காளி நூடுல்ஸ் போன்றவை தயாரிக்கவும் இதே முறை தான். சோயா நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமை அளவுகளுடன் கூடுதலாக 30 கிலோ சோயா மாவு, 3 லிட்டர் தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.

கம்பு, ராகி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் 30 கிலோ கம்பு அல்லது ராகி சேர்க்க வேண்டும். தக்காளி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் தக்காளி சாறு குறிப்பிட்ட அளவில் சேர்த்து பிசைய வேண்டும். தக்காளிகளை அவ்வப்போது வாங்கி தோல் நீக்கி, சாறு பிழிந்து பயன்படுத்த வேண்டும்.

கிடைக்கும் இடம்

மாவை பதப்படுத்தி, வெட்டும் இயந்திரம், வேக வைக்கும் பாய்லர் இயந்திரம், உலர்த்தும் டிரையர் ஆகியன வேளாண் பல்கலையின் வணிக மேம்பாட்டு மையம் மூலம் கிடைக்கும். கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வடிவமைத்து நேரிலும் வாங்கலாம்.

தளவாட சாமான்களான எடை போடும் கருவி, பேக்கிங் கவர், பேக்கிங் சீல் மெஷின், கத்தரிக்கோல் ஆகியவை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. கோதுமை, மைதா, சோயா, கம்பு, ராகி ஆகியவற்றை மொத்த கடைகளில் மாவாக அல்லது விவசாயிகளிடம் நேரடி யாக கொள்முதல் செய்து அரவை மில்லில் அரைத்து கொள்ளலாம்.

முதலீடு

பதப்படுத்தும் இயந்திரம் ரூ. 1.9 லட்சம், வேகவைக்கும் பாய்லர் இயந்திரம் ரூ.1 லட்சம், 50 கிலோ நூடுல்ஸ் வைக்கும் உலர்த்தும் டிரே 25 எண்ணிக்கை ரூ. 25 ஆயிரம். மற்ற தளவாட சாமான்கள் ரூ. 15 ஆயிரம்.

கட்டமைப்பு

இயந்திரங்களை நிறுவ, பொருட்களை  இருப்பு வைக்க, ட்ரேயில் அடுக்க, பேக்கிங் செய்ய, மற்றும் அலுவலகத்திற்கு 25க்கு 25அடி நீள, அகலமுள்ள இடம். வாடகை இடமாக இருந்தால் அட்வான்ஸ் ரூ. 20 ஆயிரம்.

உற்பத்தி செலவு

ஒரு நாளில் 200 கிராம் கொண்ட 600 பாக்கெட்கள் வீதம் (120 கி) 25 நாளில் 15 ஆயிரம் பாக்கெட்கள் (3 ஆயிரம் கிலோ) தயாரிக்கலாம். கோதுமை, மைதா உள்ளிட்ட மாவுப்பொருள்கள், 4 ஊழியர்கள் சம்பளம் (ரூ. 20 ஆயிரம்), மின்கட்டணம் (ரூ. 7 ஆயிரம்), இட வாடகை (ரூ. 2 ஆயிரம்), போக்குவரத்து செலவு (ரூ. 3 ஆயிரம்) என ரூ. 1.50 லட்சம் ஆகும். தொழில் துவங்க துவக்கத்தில் முதலீடு, கட்டமைப்பு மற்றும் உற்பத்திக்கு ரூ. 5 லட்சம் போதும்.

வருவாய்

15 சதவீதம் லாபத்திற்கேற்ப விலை நிர்ணயித்து தனியார் நிறுவனங்களுக்கு விற்பதால் மாதம் ரூ. 22,500 லாபம் கிடைக்கும். சில்லரை விற்பனை நிலையங்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால்  லாபம் அதிகரிக்கும்.

சந்தை வாய்ப்பு

அவசர, அத்தியாவசிய உணவு தயாரிப்புக்கு நூடுல்ஸ் தேவை அதிகமாகி வருகிறது.  மணம், சுவை, தரம் ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடித்தால்  தொடர்ந்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம். சில்லரை, மொத்த வியாபார பலசரக்கு கடைகள், டிபார்ட் மென்ட் ஸ்டோர்கள், பிராண்டட் நிறுவனங்கள் நூடுல்ஸ் வாங்கள் தயாராக இருக்கின்றன
.




2.காளான் வளர்ப்பு

சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக்
காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். இனி சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக..

மருத்துவ பலன்களும், உணவு முறையும்:

இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது.  இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.

சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள்

இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை.  எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.

இத்தொழிலை எப்படிச் செய்வது?

மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.

காளானின் ரகங்கள்:

நம் நாட்டின் காலநிலைக்கு உகந்தது இந்த ரகங்கள் : வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்)ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை

காளான் குடில் எப்படி அமைப்பது?

ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரைவேய்ந்த சாதாரண வீடே போதும். 16 அல்லது 18  சதுர மீட்டர் பரப்பு இருந்தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளான் வளர்க்கவும் தேவைப்படும்.

வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.

வித்து பரப்பும் அறையின் வெப்பநிலை: 25-300 செல்சியசும் வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு இந்த இரு அறைகளிலும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
குடிலினுள் அத்தோடு 75-80% ஈரப்பதமும் இருக்க வேண்டும். இந்த அளவீடுகளை கணக்கிட தெர்மாமீட்டர் போன்ற ஈரப்பதத்தை கணக்கிட என கருவிகள் Electric shopகளில் கிடைக்கும்.

காளான் வித்து உருவாக்குவது எப்படி?

காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோதுமை, சோளம் ஆகியவை முக்கிய பொருள்களாக பயன்படுகிறது.

சரி. வித்துக்களை எப்படி தயார் செய்வது?

மேற்குறிப்பிட்ட தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து காற்றில் உலர்த்த வேண்டும். அதனுடன் 2% சுண்ணாம்பும் கலந்து-  காலியான குளுக்கோஸ்(Empty clucose bottle) பாட்டில்களில் நிரப்ப வேண்டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.

அடுத்து அதிலுள்ள நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.

வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும்.

பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு: இத்தனை சிரமத்திற்கு இப்போது காளான் வித்துக்களையும் விற்கிறார்கள். நல்லதரமான வித்துக்களை வாங்கி உபயோகிக்கலாம்.

காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?

காளான் படுக்கை அமைக்க ஏற்ற பொருட்கள்:  கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது, வைக்கோல்

மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும்.  அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைகளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

காளான் பைகள் - படுக்கைகள் எப்படி தயார் செய்வது?

காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள , இருப்பக்கமும் திறந்த பாலீத்தின் பைகளை பயன்படுத்த வேண்டும். இருபக்கமும் திறந்த பைகள் என்றால் பாலீதீன் பையின் மூடிய பகுதியை கிழித்துவிடலாம்.

அந்த பாலித்தீன் பையை ஒருபுறம் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும்.

வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்யவேண்டும்.  ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பையை நன்றாக இறுக்கி கட்டிவிட வேண்டும். இதற்கு ரப்பர்பேண்டை பயன்படுத்தலாம். பிறகு பாலீதீன் பையை குடிலினுள்   உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விடவேண்டும்.


விதைத்த பதினைந்து , இருபது நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காணலாம்.  பிறகு சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.

தினமும் கைத்தெளிப்பான் கொண்டு காளான்படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம்.

இப்படி வளர்த்த காளானை எவ்வாறு அடைவடை செய்வது?

பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும்.

இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண்ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறுவடை செய்துவிட வேண்டும். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் உங்கள் விருப்பம் எதுவோ அப்படி அறுவடை செய்துகொள்ளலலாம்.

முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போன்ற பொருள் கொண்டு காளான் படுகையை இலேசாக சுரண்டுவிடுவதால்,  அல்லது பாலிதீன் பைகளின் நான்கைந்து துளைகளை கூடுதலாக இட வேண்டும். ஒவ்வொரு பெட்டிலிரந்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன்பெறலாம்.  ஒவ்வொரு பையிலிருந்தும் 600 கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.

எப்படி விற்பனை செய்வது?
(Marketing)

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 200 கிராம் இருபது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 100 ரூபாய்க்கும் விற்கலாம். அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு கொடுக்கலாம். காளானைக் கொண்டு பலவித உணவுப்பொருட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக்கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.

முக்கிய குறிப்பு: அறுவடை செய்த காளான்களை ஒரு நாள் வரைக்கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் இரண்டு நாட்கள் வரைக்கும் வைக்கலாம். இரண்டிற்கு மேற்பட்ட நாட்கள் வைத்திருந்தால் அவை அழுகி கெட்டுவிடும்.

செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகிறது.

காளன் வளர்ப்பு முறைகளை காணொளியில் கண்டு தெளியுங்கள்..!!


தயவு செய்து முழுமையாக இந்தக் காணொளியைக் காணவும். அப்பொழுதுதான் காளான் வளர்ப்பு முறையில் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள முடியும்.




 

3.சுய தொழில் துவங்கி முன்னேற கொடுவா மீன் வளர்ப்பு பயிற்சி

காரைக்கால் : காரைக்காலில் சுய தொழில் துவங்கி முன்னேற, ராஜிவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம், "கொடுவா மீன் வளர்ப்பு பயிற்சி' அளித்து வழிகாட்டுகிறது.
காரைக்கால் கருக்கலாச்சேரியில் மத்திய அரசின் ராஜிவ்
காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் உள்ளது. இங்கு, ஆராய்ச்சி அடிப்படையில் நோய் தாக்காத டைகர் இறால், வெளிநாட்டினர் விரும்பி சாப்பிடும் மெத்தை நண்டு, விற்பனைக்காக கல் நண்டுகள், கொடுவா மீன்கள் வளர்க்கப்படுகின்றன. வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் துவங்க வேண்டும் என்ற நோக்கில், கொடுவா மீன் மற்றும் நண்டு வளர்ப்பு குறித்து இம்மையம் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது. நாகை மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, கூண்டுகளில் கொடுவா வளர்ப்பு குறித்த பயிற்சி நேற்று முன்தினம் துவங்கியது. 5 செ.மீ., அளவு, 2 கிராம் எடையுள்ள கொடுவா மீன் குஞ்சுகள் கூண்டுகளில் வளர்க்கப்படுகின்றன. ஆறு மாதங்களுக்கு பின், 500 கிராம் முதல் ஒரு கிலோ வரை வளர்ந்து விற்பனைக்கு தயாராகிறது. வெளி மார்கெட்டில் 250 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கடந்த இரண்டு தினங்களாக நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையத்தில் தொழில்நுட்ப முயற்சிகள், கொடுவா மீனின் வாழ்க்கை முறைகள், தாய் மற்றும் சினை மீன்களை சேகரித்தல், முட்டையிடுதல், குஞ்சுகளை வளர்த்தல், கூண்டில் வளர்க்கப்படும் கொடுவா மீன் வளர்ப்பு முறைகள், நாற்றாங்கால் முறையில் கொடுவா வளர்த்தல், தண்ணீரின் தர அளவீடுகள், மீன் வளர்ப்பதற்கான கூண்டுகள் அமைத்தல், மீன்களை பேக்கிங் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடந்தன. தொடர்ச்சியாக நேற்று கொடுவா மீனின் இனப்பெருக்க முறைகள் குறித்தும், கரு முட்டைகளை ஆய்வு செய்வது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. திட்ட மேலாளர் பாண்டியராஜன், பண்ணை மேலாளர் கணேஷ், கணபதி, ராஜேந்திரன், அருள்ராஜ், சுந்தரேசன், குணசேகரன், ஜான் சாமுவேல் உட்பட பலர் பயிற்சி அளித்தனர். இறுதியில், தமிழ் வழியில் உள்ள கொடுவா வளர்ப்பு பயிற்சி புத்தகம் மற்றும் பயிற்சி குறித்து "சிடி'யும் மகளிர் குழுவினருக்கு வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெற விரும்புவோர், சீர்காழி ராஜிவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையத்தை, 04364-291502 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



4.புகை‌ப்பட‌‌த் தொ‌ழி‌ல் - பல ல‌ட்ச‌ம் வருமான‌ம்


பெ‌ற்ற தா‌ய் சொ‌ல்லை கே‌ட்காதவ‌ர்க‌ளு‌ம் கூட புகை‌ப்பட‌க்கார‌ர்க‌ள் சொ‌ன்னா‌ல் த‌ட்டாம‌ல் கே‌ட்பா‌ர்க‌ள். வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ல்லதோ, கொ‌ட்டதோ அதை ப‌திவு செ‌ய்து தருபவ‌ர்க‌ள் புகை‌ப்பட‌க்கார‌ர்க‌ள்தா‌ன். ந‌ம்மை யா‌ர் எ‌ன்று உண‌ர்‌‌த்துவத‌ற்கு புகை‌ப்பட‌ம் தா‌ன்
ஆதரமாக ‌திக‌ழ்‌கி‌ன்றன. வ‌ா‌ழ்‌க்கையோடு ‌பி‌‌‌ண்‌ணி‌ப் பிணை‌ந்து‌வி‌ட்ட புகை‌ப்பட‌‌த் தொ‌ழி‌ல் க‌ற்பனை ச‌க்‌தி ‌மிகு‌ந்தவ‌ர்களு‌க்கு கதவை ‌திற‌ந்து கா‌த்‌‌திரு‌க்‌கிறது.

மு‌க்‌கிய நகர‌ங்க‌ளி‌ல் ம‌‌ட்டு‌மி‌ல்லாம‌ல் ‌ஸ்டூடியோ தொ‌‌ழி‌லை ‌கிராம‌ங்க‌ளிலு‌ம் செ‌ய்ய முடியு‌ம். 30 ஆ‌ண்டுகளு‌க்கு மேலாக இ‌த்துறை‌யி‌ல் இரு‌ப்போ‌ர் த‌ங்களை வள‌ர்‌த்து‌வி‌ட்ட தொ‌ழிலையே வா‌ழ்‌க்கையாக எடு‌த்து‌ச் செ‌‌ய்‌கி‌ன்றன‌ர். 50 வயது வரை வ‌ற்றாம‌ல் வருமான‌ம் தரு‌வதாக உ‌ள்ளது புகை‌ப்பட‌‌த் தொ‌ழி‌ல்.

‌‌ஸ்டூடியோ ஆர‌ம்‌பி‌க்க ‌சி‌றிய இடமு‌ம், குறு‌கிய கால ப‌யி‌ற்‌சியு‌‌ம் இரு‌ந்தாலே போது‌ம். ஆ‌ர்வ‌த்துட‌ன் க‌ற்கு‌ம் 6 மாத ப‌யி‌ற்‌‌‌சிய‌ி‌ன் முடி‌வி‌ல் ‌விரு‌ம்‌பியபடி இ‌த்துறை‌யி‌ல் எ‌ந்தவொரு தொ‌ழிலையு‌ம் தே‌ர்‌ந்தெடு‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம். வாடி‌க்கையாள‌ர்க‌ளி‌ன் தேவை‌க்கு ஈடுகொடு‌த்து ‌அவரை திரு‌ப்‌திபடு‌த்து‌ம் படியான வேக‌ம் இ‌த்தொ‌ழிலு‌க்கு தேவை. ஒ‌ளி‌ப்பட தொ‌ழி‌லி‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் முத‌லீ‌ட்டைபோ‌ல் குறை‌ந்தப‌ட்ச‌ம் 20 சத‌‌‌வீத இலாப‌த்தை பெற முடியு‌ம்.

‌ஸ்டுடியோ வை‌ப்பத‌ற்கு அமை‌ப்பு, பகு‌தியை பொறு‌த்து ஒரு ல‌ட்ச ரூபா‌ய் முத‌லீடு இரு‌ந்தாலே போது‌ம். தொ‌ழி‌லி‌ன் வேக‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ப அடு‌த்தடு‌த்து முத‌லீடுகளை மே‌ற்கொ‌ள்ள முடியு‌ம். முத‌லீடு பெருக பெருக வருமானமு‌ம் உயரு‌ம். இத‌ற்கு வ‌ங்‌கி‌க் கட‌ன்களு‌ம் ‌கிடை‌க்‌கி‌ன்றன.

எ‌னினு‌ம் ‌பிற‌ரிட‌ம் தொ‌ழி‌ல் க‌‌ற்றா‌ல் அவருடைய சாயலு‌ம், அணுகுமுறையு‌ம் ஒ‌ட்டி‌க்கொ‌ள்வது இய‌ல்பாகு‌ம். தொ‌ழி‌ல்நு‌ட்ப ‌‌ரீ‌தியாக இ‌த்துறை அடை‌ந்‌திரு‌க்கு‌ம் மு‌ன்னே‌ற்ற‌த்தை குறு‌கிய கால‌த்‌தி‌ற்கு‌ள் அ‌றி‌ந்து கொ‌ள்ள உதவு‌கி‌ன்றன ப‌யி‌ற்‌சி ‌நிலைய‌ங்க‌ள். இவை உயர‌ங்களை எ‌ட்ட ‌கிடை‌த்து‌ள்ள எ‌ளிய வா‌ய்‌ப்புகளாக தெ‌ரி‌கி‌ன்றன. கா‌ன்‌ஸ்‌ட‌பி‌ள் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து தொட‌ங்குவதை ‌விட ஐ.‌பி.எ‌‌ஸ் படி‌‌த்து ஏ.‌சி.யாக ப‌ணியை தொட‌‌ங்குவது ந‌ல்ல அடி‌த்தள‌ம் எ‌ன்பது போ‌ன்றது இதுவாகு‌ம்.

ஒ‌ளி‌ப்பட‌த் தொ‌ழி‌ல் பல ‌கிளைகளுட‌ன் ‌வி‌ரி‌ந்து ‌கிட‌க்‌‌‌கிறது. இ‌தி‌‌ல் இற‌‌ங்கு‌ம் மு‌ன்பு த‌ங்க‌ளி‌ன் ஆ‌ர்வ‌ம் ‌விள‌ம்பர‌த்துறையா, ‌‌‌சி‌னிமா‌வா, சொ‌ந்த ‌ஸ்டூடியோவா எ‌ன்பதை உண‌ர்வது அ‌வ‌சிய‌ம். துறையை தே‌ர்‌ந்தெடு‌த்து அ‌தி‌ல் ம‌ட்டு‌ம் ‌சிற‌ப்பு ப‌யி‌ற்‌சி பெறுவது இல‌க்கை எ‌ளிதா‌க்கு‌ம் எ‌ன்பது இளைய தலைமுறை‌யி‌ன் ந‌ம்ப‌ி‌க்கை.

பா‌ஸ்போ‌ட் அளவு பட‌ம் எடு‌ப்பது, ‌திருமண கவரே‌‌ஜ் எ‌ன்று ம‌ட்டுமே இரு‌ந்தது புகை‌ப்பட‌த் தொ‌ழி‌ல். ஆனா‌ல் குள‌த்த‌ி‌ல் எ‌றிய‌ப்ப‌ட்ட தொ‌ழி‌ல் நு‌ட்ப‌ க‌‌‌ல்போ‌ல் பல வ‌ட்ட‌ங்க‌ள் ‌வி‌ரி‌ந்து வள‌ர்‌ச்‌சி அடை‌ந்து‌வி‌ட்டது. இதன‌ா‌ல் ஆ‌ர்வமு‌ள்ள இளைஞ‌ர்களு‌க்கான தேவை அ‌திக‌ம் கொ‌ண்ட தொ‌ழிலாக இது மா‌றியு‌ள்ளது.

புகை‌ப்பட‌‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ன் அ‌ங்கமாகவே மா‌றி‌வி‌ட்ட ‌நிலை‌யி‌ல் அத‌ன் வருமான வா‌ய்‌ப்புகளு‌ம் பல ‌கிளைகளாக ‌‌பி‌ரி‌ந்து நி‌‌ற்‌கி‌ன்றன. புகை‌‌ப்பட‌த்துட‌ன் தொட‌ர்புடைய ல‌ே‌மிசே‌ன், ‌பிரே‌ம்க‌ள், ‌ஆ‌ல்ப‌ம், வி‌‌சி‌ட்டி‌ங் கா‌ர்டு எ‌ன்று தொட‌ர்பு தொ‌ழி‌ல்க‌ள் ஏராள‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் அ‌ரி‌சி‌யி‌‌ல் பெய‌ர் எழு‌தி இரு‌ப்பதாக ‌சில‌ர் கூறுவது ‌உ‌ண்டு. இ‌ங்கே த‌‌ட்டி‌ல் பட‌த்தையே பொ‌றி‌த்து‌ நமதா‌க்‌கி கொ‌ள்ள முடி‌கிறது. பே‌ப்ப‌ரி‌ல் ம‌ட்டும‌ல்லாம‌‌ல் ‌கா‌க், பிளே‌ட் எ‌ன்று பொரு‌ட்க‌ள் எ‌ன்று ‌விரு‌ம்பு‌ம் பொரு‌ட்க‌ள் மே‌ல் ‌பி‌ரி‌ண்‌ட் போடு‌ம் தொ‌ழி‌ல் நு‌ட்பமு‌ம் உ‌ள்ளது. இறக்கும‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்ட எ‌ந்‌திர‌ங்க‌ள் வ‌ந்து‌வி‌ட்ட ‌நிலை‌யி‌ல்‌ ‌சி‌றிய பட‌ம் முத‌ல் ‌பிரமா‌ண்ட பட‌‌ங்க‌ள் வரை ‌பி‌ரி‌ண்‌ட் போட‌ப்படு‌கி‌ன்றன.

புகை‌ப்பட தொ‌ழிலு‌க்கு அடி‌ப்படை கே‌மிரா எ‌ன்றாலு‌ம் பு‌திய டி‌ஜி‌ட்ட‌ல் தொ‌‌ழி‌‌ல்நு‌ட்ப‌ம் அதை ப‌ல்வேறு தள‌ங்களு‌க்கு எடு‌த்து‌ச் செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கிறது. குறை‌ந்தப‌ட்ச வருமான‌ம் ‌நி‌ச்ச‌ம் எ‌ன்பத‌ா‌ல் ஆ‌ர்வ‌த்தையு‌ம், ‌திறமையையு‌ம் கல‌ந்து உழை‌த்தா‌ல் பல ல‌ட்ச‌ம் வருமான‌ம் தருவதாக உ‌ள்ளது புகை‌ப்பட‌‌த் தொ‌ழி‌ல்.

5.சிறிய முதலீட்டில் தொடங்கலாம் “ஹோம் மேட் சாக்லேட்” தொழில்

  அதிக அளவில் முதலீடு தேவைப்படாத, மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாத, அதே நேரத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்கி, நல்ல வருமானத்தை தரக்கூடிய , இந்தத் தொழிலில் இருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் நேரடி அனுபவ பயிற்சி
பெற்றபிறகு, இத்தொழிலை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் நிச்சயம் ஜெயிக்கலாம்.

ஹோம் மேட் சாக்லேட்
தேவையான முதலீடு :
குறைந்த பட்சம் 10,000
லாபம்: 
15 முதல் 20 சதவீதம் வரை
சாதகமான அம்சம்கள் :
  • பெரிய அளவில் இடவசதியோ, முதலீடுகளோ தேவையில்லை.
  • ஒரு சில நாள் பயிற்சியே போதும்.
  • மூலப் பொருள் தருபவர்களே பயிற்சியும் தருகிறார்கள்.
  • மூலப் பொருட்கள் எளிதாகவும் தட்டுப்பாடின்றியும் கிடைக்கும்.
  • தரமாக செய்தால் ஒரு வருடம் வரை வைத்து விற்பனை செய்யலாம்.
பாதகம் :
  • 24 மணிநேரமும் குளிர்சாதன வசதி வேண்டும் அதற்கு தடையில்லா மின்சாரம் தேவை.
  • சரியாக பேக்கிங் செய்யாவிட்டால் காற்று புகுந்து சாக்லேட் வீணாகிவிடும்.
  • முன்னணி சாக்லேட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு மார்க்கெட்டிங் செய்வது.
எந்த வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடியது  என்பது இத்தொழிலில் உள்ள மிகப்பெரிய பாசிடிவ்  அம்சம். வழக்கமான சாக்லேட்களை மட்டுமே தராமல் , புதுப்புது சுவைகளை எல்லோரையும்  கவரும் வகையில் பேக்கிங் செய்து , வித்தியாசமான டிசைனில் சாக்லேட்களை செய்து விற்றால் வெற்றி நிச்சயம்.
கொஞ்சம் வித்தியாசமான வடிவமைப்புகளில் சாக்லேட்களை நாம் தயாரிக்க வேண்டும். சாக்லேட் தயாரிக்க தேவையான வித விதமான அச்சுகள்  சந்தியிலேயே கிடைக்கின்றன. சக்கரை நோயாளிகளுக்கேற்ப சாக்லேட்கள் , ஹெல்த்கேர் சாக்லேட்கள் என வெளிநாடுகளில் சாக்லேட் சந்தைகள் வேகமாக மாறிவருகிறது. சந்தையில் பிராண்டட் சாக்லேட்கள் பல இருந்தாலும் வீட்டில் தயாராகும் சாக்லேட்களுக்கு தனி மவுசு இருக்கிறது. எனவே தைரியமாக இத்தொழிலில் இறங்கலாம்.

ஒரு கிலோ 300 முதல் 400 வரை விற்ப்பனையாகிறது.

5 comments:

  1. கவரிங் தொழில் செய்ய இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்படும்.வீட்டிலிருந்தபடியே
    காலை 2மணி நேரம், மாலை 1மணி நேரம் பார்த்தாலே 15ஆயிரம் வருமானம்.
    லட்சாதிபதியாய் மாற்றும் அருமையான தொழில்.
    மேலும் இலவச ஆலோசனைகளுக்கு.....
    ராசி கோல்டு கவரிங் சிதம்பரம்.
    செல்.9751881542

    ReplyDelete
  2. கவரிங் தொழில் செய்ய இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்படும்.வீட்டிலிருந்தபடியே
    காலை 2மணி நேரம், மாலை 1மணி நேரம் பார்த்தாலே 15ஆயிரம் வருமானம்.
    லட்சாதிபதியாய் மாற்றும் அருமையான தொழில்.
    மேலும் இலவச ஆலோசனைகளுக்கு.....
    ராசி கோல்டு கவரிங் சிதம்பரம்.
    செல்.9751881542

    ReplyDelete
  3. வணக்கம், நான் ஷாலோம் நைட், பணம் தனியார் கடன், நீங்கள் கடன்? உங்களுக்கு நிதி ஆதாயம் தேவை? நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த உலகளவில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. கடனைத் தேவைப்படும் அனைவருக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச கடன்களை நான் கடனளிப்பேன், மேலும் 2% வீதத்தில் கடனை திரும்ப செலுத்த முடியும். வங்கிக் காசோலை அல்லது வங்கிக் காசோலை வழியாக கடனளிக்கிறேன். நிறைய கடிதங்கள் தேவையில்லை. நீங்கள் எங்கள் புகழை ஒரு கடன் பெற வேண்டும் என்றால்.
    மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளலாம்: shalomloancompany@gmail.com
    நன்றி
    ஷாலோம் கடன் நிறுவனம்
    திருமதி ஷாலோம் நைட்

    ReplyDelete
  4. நான் பிரபு ஈரோடு... செய்யும் தொழில் போட்டி அதிகமாக இருக்கிறது ipo மிகவும் நஸ்டமாக இருக்கு ...ஏதாவது மாந்திரீகம் செய்யலாமா?

    ReplyDelete