ஐகான் என்பது விரைவாக ஒரு செய்தியை உணர்த்த பயன்படும் ஒரு வழி ஆகும்.
கணினிக்கு புதியவர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் ஐகான்களை பின்பற்றியே
கணினியை பயன்படுத்துவார்கள். உதாரணமாக மை கம்ப்யூட்டருக்கு கணினி போன்ற
ஐகான் உள்ளதால் நாம் எளிதாக அதனை கண்டறிய முடிகிறது. இதே போல் நாம்
விரும்பும் எந்த ஒரு படத்தையும் நொடி பொழுதில் ஐகானாக மாற்றி குறிப்பிட்ட
கோப்பறைக்கோ , மென்பொருள் சுருக்குவிசைக்கோ அமைத்து விட முடியும். படத்தினை
ஐகானாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் உதவிசெய்கிறது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து பதிவிறக்கி பின் Quick
Any2Ico அப்ளிகேஷனை திறக்கவும். தோன்றும் விண்டோவில் குறிப்பிட்ட படத்தினை
தேர்வு செய்து பின் ஐகான் எங்கு சேமிக்கப்பட வேண்டுமோ அந்த இடத்தினை தேர்வு
செய்து பின் அளவினை தேர்வு செய்து பின் Convert it! பொத்தானை அழுத்தவும்.
சில நொடிகளில் படமானது கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட
இடத்தில் ஐகான் சேமிக்கப்பட்டு இருக்கும்.
No comments:
Post a Comment