Saturday, September 21

மொபைல் வெப்சைட்... ஈசியாய் டிசைன் செய்யலாம்!




    அநேகமாக எல்லா வணிக நிறுவனங்களும் தங்களது இணையதளத்தின் மொபைல்போனுக்கான வடிவத்தை தருவதற்கு ஆரம்பித்து விட்டார்கள்.கணினியில் உட்கார்ந்து இணையத்தை உலா வருவது குறைந்து வருகிற நேரத்தில் பலரும் செல்போனிலிருந்தே இணையத்தை பார்க்கவே விரும்புகிறார்கள்.அதனால் உங்களுக்கான இணையதளம் இருந்தால் அல்லது புதிதாக இணையதளத்தை உருவாக்க எண்ணியிருந்தால் அதை மொபைல்போனுக்கான வடிவத்தில் அமைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

மொபைல் இணையதளத்தை அமைப்பதிலுள்ள முதல் விதி ஒரு காலம்(column) வரும்படி பக்கத்தை அமைத்துக் கொள்வதுதான்.அந்த பக்கத்தில் மொத்தம் மூன்றே பகுதிகள்தான் இருக்க வேண்டும்.மேலே தலைப்பு(header), நடுவில் உள்ளடக்கம்(content), கீழே அடிக்குறிப்பு(footer).அவ்வளவூதான் இடம்.இதற்குள்தான் இணையதளத்தை வடிமைத்துக் கொள்ள வேண்டும்.பழங்காலத்தில் பெரிய வீட்டில் வசித்திருந்தவர்கள் இப்போது சூழ்நிலை காரணமாக நகர்ப்புறத்தில் சிங்கிள் பெட்ரூம் ப்ளாட்டில் வசிப்பதைப் போன்றதுதான் இது.
                                              

1.          ஹெடர்(header): இதை இணையதளத்தின் தலைப்பாகவூம் இங்கிருந்தே மற்ற இணையதளத்தின் பக்கங்களுக்கு இணைப்பு கொடுப்பதற்கான ஹைப்பர்லிங்க்காகவூம் பயன்படுத்தலாம்.தலைப்பு தவிர வேறு எதையூம் இங்கே கொடுக்க வேண்டாம்.அப்படி செய்தால் அது பார்வையாளர்களை களைப்படையச் செய்யூம்.ஒரே வார்த்தையில் இணையதளத்தின் பெயர் இருக்கட்டும்.நீளமான பெயராக இருந்தால் அந்த பெயரின் முக்கிய அம்சத்தை மட்டும் பெரிய எழுத்திலும் மற்றவற்றை சிறிய எழுத்திலும் இருக்குமாறு செய்யூங்கள். இங்கே அதிக அடர்த்தியான கிராஃபிக்ஸ் இல்லாத பேனர்களையூம் பயன்படுத்தலாம்.
2.          2.பாடி(body):இதுதான் இணையதளத்தில் பிரதான அம்சம்.ஆனால் இங்கே வதவதவென்று பொருட்கள் மற்றும் சேவைகளை பட்டியலிடாதீர்கள்.உங்களது நிறுவனத்தைப் பற்றி நான்கு வரிகளுக்குள் சிறப்பாக சொல்கிற மாதிரி அமைத்திடுங்கள்.மிக முக்கியமான ஒரு வார்த்தை.இம்மாதிரி மொபைல் இணையதளத்தில் பளபளவென்று பேனர்களோ அல்லது கண்சிமிட்டும் வண்ண வண்ண கிராபிக்ஸோ இருந்தால் அது மொபைல் பயனாளர்களை சலிப்படையச் செய்து விடும்.அதனால் அவர்கள் நமது இணையதளத்தை விட்டு விலகி விடலாம்.கண்ணைக் கவருவதை விட கருத்தைக் கவரும் விதத்தில் இருப்பதே நலம்.
3.          அடிக்குறிப்பு(footer):இங்கே இணையதளத்தின் காப்புரிமை தளத்தை வடிவமைத்தவர்கள் யார் போன்ற விஷயங்களை பொதுவாகக் குறிப்பிடுவார்கள்.அது போன்ற ஓரிரு விபரங்களை மட்டும் குறிப்பிட்டால் போதும்.மேலதிக விபரங்கள் மொபைல் பார்வையாளர்களுக்கு அலுப்பூட்டி விடலாம்.முடிந்தால் உங்களது நிறுவனத்தில் உள்ள ஒரே ஒரு சிறப்பான பொருள் அல்லது சேவையை மட்டும் இங்கே குறிப்பிட்டு அதைத் திறந்து பார்க்க ஒரு ஹைப்பர்லிங்க் கொடுப்பது புத்திசாலித்தனம்.
4.          வடிவமைத்தல்(design):மொபைல் பார்வையாளர்களுக்கென்றே இணையதளத்தை வடிவமைப்பதற்கு இலவச மென்பொருட்கள் இருக்கின்றன.கீழ்க்காணும் மென்பொருட்களை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.ஐஃபோன் டெஸ்டர்(iphone tester) மொபைல் எமுலேட்டர்(mobile emulator)போன்றவை குறிப்பிடத் தகுந்தவை. அது மட்டுமல்லாது என்னவிதமான மொபைல் ஹேன்ட்செட்டுகளில் பார்வையாளர்கள் நமது இணையதளத்தைப் பார்வையிடுவார்கள் என்றும் நாம் தீர்மாணிக்க வேண்டும்.ஏனென்றால் ஒவ்வொரு ஹேன்ட்செட்டும் ஒவ்வொரு மாதிரி செயல்படும்.பொதுவாக நோக்கியாவூம் சாம்சங்கும் ஒரே மாதிரி செயல்படும்.வசதியான வாடிக்கையாளர்கள் என்றால் அவர்கள் ஐஃபோன் அல்லது ப்ளாக்பெர்ரி போன்றவற்றை உபயோகிப்பவர்களாக இருப்பார்கள்.ஆன்ட்ராய்டு வகை போன்கள் இன்னும் அதிகமாக புழக்கத்தில் வரவில்லை என்பதால் நீங்கள் வடிவமைக்கும் இணையதளத்தின் டிசைன் ஐஃபோன் மற்றும் ப்ளாக்பெர்ரி ஹேன்ட்செட்டுக்கு ஏதுவாக இருக்குமாக பார்த்துக் கொள்ளுங்கள். வடிவமைப்பில் மிக முக்கியமான விதிகள் இவைதான்.பக்கத்தின் அளவை 400pxக்கு மிகாமல் வடிவமைக்கவூம்.கிராஸ் பிரவூசிங்கை அனுமதிக்காதீர்கள்.கிராஃபிக்ஸ் 20kbsக்கு மிகாமல் இருக்கட்டும்.பக்கத்தின் லேஅவூட் சாதாரணமாகவே இருக்கட்டும்.பளபளா ஜிகினா வேலைகள் வேண்டாம்.
5.          கோடிங்(coding):பொதுவாக இணையதளத்தை வடிவமைப்பதற்கு ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்துவோம்.மொபைல்ஹேன்ட் செட்களில் பார்வையிடுவதற்கு ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தினாலும் அது போரடிப்பதாக இருப்பதாக பயனாளிகள் சொல்வதால் ஜாவாஸ்கிரிப்ட்டை பயன்படுத்த வேண்டாம். சிறிய அளவிலான மார்க்அப் கோடுகளையே(markup codes) பயன்படுத்துங்கள்.அதிக எண்ணிக்கையிலான டிவ்(div) பயன்படுத்த வேண்டாம்.அவற்றை சுருக்குங்கள்.சிஎஸ்எஸ்ஸை(css) திறமையான பயன்படுத்த பின்வருமாறு கோடு எழுதிப்பாருங்கள்.
        <!DOCTYPE html PUBLIC "-//WAPFORUM//DTD XHTML Mobile 1.2//EN""http://www.openmobilealliance>
    இப்படி குறிப்பிட்டு விட்டால் இது மொபைல் போனுக்கான இணையதளம் என்று கணினி புரிந்து கொள்ளும்.பின்வரும் சில குறிப்புகளையூம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
1. பிஎக்ஸ்/இஎம்(pm/em) அளவூகளை எண்ணில் குறிப்பிடாமல் அவற்றை சதவீதத்தில்(%) குறிப்பிடுங்கள்.
2. எல்லா ஃபைல்களையூம் அளவில் சிறியதாக வைத்துக் கொள்ளுங்கள்.
3. .png பதிலாக .jpegஅல்லது .gif-ஆக சிறிய அளவிலானதாக மாற்றியமையூங்கள்.
4. எல்லா கிராஃபிக்ஸ் பைல்களையூம் 400pxக்குள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.
5. சிலர் தங்களது இணையதளத்தில் உள்ள படங்களை வேறொரு தளத்திலிருந்து எடுத்து இயங்குமாறு செய்திருப்பார்கள்.அப்படி செய்ய வேண்டாம்.படங்களை இங்கேயே இருக்குமாறு செய்யூங்கள்.
6. படங்களின் அளவூகளை உயரம் எவ்வளவூ அகலம் எவ்வளவூ என்று ப்ரோக்ராமிங்கில்(html tag) குறிப்பிடுங்கள்.
7. மறந்தும் ஜாவாஸ்கிரிப்ட் பக்கம் போக வேண்டாம்.
8. பாப்அப்களை(popup) அனுமதிக்காதீர்கள்.அது பார்வையாளர்களை சிரமப்படுத்துவதோடு லோடாகவூம் நேரம் பிடிக்கும்.

    எல்லாவற்றையூம் முடித்தபிறகு உங்களது இணையதளம் நன்றாக வேலை செய்கிறதா என்று டெஸ்டிங்() செய்து பார்க்க வேண்டும்.இதை இலவசமாக  செய்து தருவதற்கென்றே ஒரு இணையதளம் இருக்கிறது.அந்த தளத்தின் பெயர் ready.mobi அங்கே போய் நீங்கள் உங்களுடைய இணையதளத்தை
சமர்ப்பித்து பரிசோதித்துக் கொள்ளலாம்.அதன்பின் சரியாக இருந்தால் இணையதளத்தை இணையத்தில் பதிவேற்ற வேண்டியதுதான்.
                    ------------------------

 குறிப்பு: ஆன்லைன் வழியாக கணிப்பொறி கற்றுக் கொள்ள http://www.microtips.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவூம்.

No comments:

Post a Comment