Women


 


அழகு குறிப்புகள்:'அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!


Real Beauty does not depend on Colour - Beauty Care and Tips in Tamil
இயற்கையின் படைப்பில் அனைவரும் அழகுதான். அழகு என்பது நிறத்தால் தோற்றத்தால், வருவது அல்ல. உள்ளத்தின் தூய்மையே, அன்பே முகத்தில் அழகை, அமைதியை வெளிப்படுத்தும்.
அதற்காக தோற்றத்தை சீர்கேடாக வைத்துக் கொள்ளலாமா என்று கேட்கவேண்டாம்... ஒவ்வொருவரும் தன் மேனியை பேணிக்காத்து நோயின்றி என்றும் இளமையுடன் முதுமையை எதிர்கொள்வதே அழகு.
அனைவரும் தன் தோற்றத்தை அழகுபடுத்திக் கொள்ளவே விரும்புவர். அதிலும் இளம் பருவத்தினருக்கு தன்னை அழகு படுத்திக்கொள்வதில் நாட்டம் அதிகம் இருக்கும்.
அதற்காக பல ரசாயனம் கலந்த கிரீம்களைத் தடவி தன்னை அழகுபடுத்திக் கொள்வர். இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும். முகத்தில் சொறி, கருப்புத் திட்டு, முகச் சுருக்கம், கண்களில் கருவளையம், முகப்பரு, தேமல் என பலவகையான பாதிப்புகள் ஏற்படும்.
சிலருக்கு பலஹீனத்தாலும், ஈரல், இருதயம், குடல் பாதிப்புகளாலும் இம்மாதிரியான அலர்ஜி உருவாகலாம். முகத்தின் சருமம் மிகவும் மென்மையானது.  அதனாலேயே எந்த ஒரு நோயும் முதலில் முகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மனிதனின் அகத்தை மட்டுமல்ல, நோயையும்கூட முகத்தில் பார்த்து விடலாம்.
இப்படி வெளிப்புறத்தாலும், உட்புறத்தாலும் ஏற்படும் பாதிப்பால் உண்டான தோல் அலர்ஜி நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்கள் இருவகையான மருந்துகளைக் கொடுப்பார்கள்.
ஒன்று மேற்பூச்சு மருந்துகள், மற்றொன்று உட்கொள்ளும் மருந்துகள்.
அப்படி மருந்துகளைச் சாப்பிடும்போதோ அல்லது பூசும்போதோ பாதிக்கப்பட்ட உறுப்புகள் குணமாகும். தோலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.
மங்கு:
சிலருக்கு மூக்கின் மேல் பகுதியில் மச்சம் போல் கருப்பாக படர்ந்து காணப்படும். இதனை மங்கு என்பார்கள். முகத்தில் மங்கு வர முக்கியக் காரணம் நாளமில்லாச் சுரப்பிகளின் முரண்பாடாகும். நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கொழுப்புச் சத்து உள்ளதால் அவை உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளை பாதிக்கின்றன. இதனால் மங்கு முகத்தில் தெரிகிறது.
மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளால்கூட ஹார்மோன்கள் பாதிப்படையும். குறிப்பாக மெனோபாஸ் காலங்களில் மூக்கில் மங்கு உண்டாகும். இந்த மங்கு தோன்றினால் முக அழகு மாறிவிடும். இதனால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல் சோர்ந்து விடுவார்கள். இப்பிரச்சினை தீர இதோ ஒரு எளிமையான மருத்துவ முறை...
கோக்டம் - 10 கிராம் எடுத்து நார்த்தம் பழச் சாறில் ஊறவைத்து அரைத்து சிறிது தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்து உலர்ந்தபின் முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் மங்கு மறையும். (குறிப்பு - முகத்தில் தடவும்போது மங்கு ஏற்பட்ட பகுதியில் அழுத்தமாகத் தடவக் கூடாது)
சருமம் பளபளக்க:
பச்சைப் பயறு -  250 கிராம்
மஞ்சள் -  100 கிராம்
வசம்பு -  10 கிராம்
எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி குறைந்து பளபளப்புடன் காட்சியளிக்கும்.
அழகைத் தக்க வைக்க:
* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்­ணீராவது அருந்த வேண்டும்.
* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.
* மென்மையான உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.
* கோபம், மன அழுத்தம் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், தேஜஸூம் அதிகரிக்கும்.


 

 

 

அழகு குறிப்புகள்:கவலையளிக்கும் கரு வளையங்களா....?!


கூடல் - Friday, April 27, 2012
Beauty gives confidence - Beauty Care and Tips in Tamil
அன்பும், அமைதியும் குடிகொண்ட மனதில் முகம் தானாகவே அழகாகும். தீபத்தின் சுடர் போல பெண்களின் முகம் பிரகாசமடையும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான். அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்:
ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள் பெண்களின் அழகில் ஆடையின் பங்கு முக்கியமானது. ஆடை அணிவது முதலில் வசதிக்காகக்தான். உடலை கவ்விப் பிடிக்கும் ஆடைகளை தவிர்ப்பது நல்லது. அதேசமயத்தில் ரிலாக்ஸ்டாக இருக்கிறது என்று ஓவராக தொளதொளவும் வேண்டாம். கச்சிதமாக இருப்பதே அழகு.
கம்பீர அழகு
வேலைக்கு போகும் பெண்களுக்கு புடவை கம்பீரமாக இருந்தாலும், இன்றைய சூழலில் அதை எப்போதுமே கட்ட முடியாது. சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற ஆடைகளே சவுகர்யமானது. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படுகிற வேலை என்றாலும் ஜீன்ஸ் சவுகர்யம், வெளியூர் அல்லது உல்லாசப் பயணத்துக்கு ஜீன்ஸ் எப்போதும் வசதிதான். பணியிடத்தில் இடுப்பு அல்லது பின்புறம் முழுமையாக தெரியும் வகையிலான குட்டை டாப்ஸை தவிர்ப்பது நல்லது.
பொறுப்புள்ள பணியில் இருப்பவர்கள் ஓரளவு டல் கலரில் பேன்ட்டும் அதே துணியில் முக்கால் கை சட்டையும் அணியும்போது அசத்தலாக தோற்றமளிக்கும். கேஷுவல் உடைகளை பொறுத்தவரை இது பெண்களுக்கானது, இது ஆண்களுக்கானது என்ற வித்தியாசம் மறைந்து வருவதால் எதெல்லாம் உடலுக்கும் வேலைக்கும் சவுகர்யமாக இருக்கிறதோ அதையெல்லாம் அணிய பழகிக்கொள்ள வேண்டும்.
கவலை ரேகை வேண்டாம்
மனதில் தாழ்வு மனப்பான்மை, அலட்சியம், தற்பெருமை ஆகியவை கூடாது. இதனால், முகத்தில் கவலை ரேகைகள் படரும், நம் எண்ணத்திலும், செயல்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அமைதியான மனமும், அதை வெளிக்காட்டும் முகமும் வேண்டும்.!
மன அமைதியுடன் இருந்தால் முகம் பொலிவடையும் இதற்கு தியானம் மிகச் சிறந்தது. சரியான தூக்கம் தேவை. தினமும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் நித்திரைகொள்ளுதல் நல்லது. இல்லாவிட்டால் கண்களின் அடியில் கருவளையம் விழும். இதனால் முகத்தில் ஒருவித முதிர்ச்சி தெரியும். அதேபோல் கண்கள் சோர்ந்து காணப்பட்டாலே பாதி அழகு குறைந்த மாதிரிதான்.!
சத்தான உணவு தேவை
காலையில் சீக்கிரம் எழுந்து லேசான உடற்பயிற்சி. பிறகு அரை டம்ளர் லெமன் ஜூஸ். இதனால் உங்களுக்கு பசி ஏற்படும். பின்னர், நன்றாக குளித்துவிட்டு, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் சேர்ந்த உணவு, அவசரமாக சாப்பிட வேண்டாம். விருப்பமானதை மெதுவாக சாப்பிடவும்.!
ஒரு நாளைக்கு கிட்டதட்ட 2 லிட்டர் தண்ணியாவது குடிக்க வேண்டும். இதனால் தேவையற்ற கழிவுகள் உடலிருந்து வெளியேறும்.! முக்கியமாக உடலில் எடை அதிகமாவதை தவிர்த்தல் நல்லது. நீச்சல். ஸ்கிப்பிங், சைக்கிள் சவாரி, நடை பயிற்சி போன்றவை இயற்கையாக பெண்களின் பின்னழகை கூட்டும்.!
கட்டமைப்பான உடல்
பெண்களின் மார்பளவும், இடுப்பளவும் ஒன்றாக இருக்க வேண்டும். இடையளவு அதைவிட 25 செ.மீ. குறைவாக இருக்க வேண்டும். வயிற்றில் மடிப்பே விழக்கூடாது. இடையை விட தொடைகள் 12செ.மீ குறைவாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு அழகான தோற்றம் தரும் கட்டமைப்பு இது. உடலமைப்பு இப்படி இருந்தால்தான் அழகாக இருக்கும் என்று வரையறை எதுவும் இல்லை.
உயரமோ, குட்டையோ எப்படி இருந்தாலும், அதற்கேற்ப நமது உறுப்புகள் சரியாக இருந்தால் அழகுதான்!.
கூந்தலில் சிக்கல் விழுகிறது என்ற பயத்தில் பலர் வாரம் ஒருமுறை தலை குளிப்பதைக்கூட தவிர்க்கின்றனர். தலையை குனிந்தபடி கூந்தலை முன்னால் போட்டு கைவிரல்களால் கோதி அழுத்தி நன்றாக அலசி சுத்தம் செய்யவேண்டும். அழுக்கு எளிதில் நீங்குவதுடன், சிக்கு விழாது. முகத்திற்கும் பொலிவு கூடும். எனவே வெயில் காலங்களில் வாரத்திற்கு மூன்று தடவையாவது தலைக்கு குளித்தால் நல்லது.
ஆண்களுக்கும் அழகு
பெண்களைப் போலவே ஆண்களும் அழகியல் கொள்ள வேண்டும். ஏனெனில் பெண்களை விட ஆண்களே அதிகம் வெளியில் செல்கின்றனர். ஆடைகளில் காட்டும் அக்கறையை முகத்தை அழகுபடுத்த காட்டுவதில்லை.
வேலை நிமித்தமாக வெளியில் சுற்றும் ஆண்களின் முகம் எளிதில் கருத்துவிடும். அவர்கள் ஐஸ் கட்டியை துணியில் கட்டி முகத்திற்கு ஒத்தடம் தர முகம் பொலிவடையும்.
வெளியில் அலைவதனால் தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது தடுக்கப்படும்.
சிகரெட் குடித்து உதடு கருமையாக இருப்பவர்கள் மாதுளைச் சாறு, புதினா இலையை உதட்டில் தடவி வர உதடு செந்நிறமாகும்.


அழகு குறிப்புகள்:'வெயில் காலம்': எண்ணெய் பசை சருமம் உஷார்!

கூடல் - Thursday, April 19, 2012
Tips for oily skin this summer - Beauty Care and Tips in Tamil
வெயில் காலத்தில் வெளியில் போவதென்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொளுத்தும் வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்துவிடும்..

கவலையை விட்டுத் தள்ளுங்க.. எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்

எண்ணெய் பசை நீங்க:

வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும் இதை தொடர்ந்து ஒரு மாத காலமாவது பின்பற்ற வேண்டும்.

தக்காளி பழத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.
எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக இருக்கும்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும். வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.

சோளத்தை நன்கு பவுடர் செய்து, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும். எண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.

முகத்தில் எண்ணெய் பசை நீங்கி பொலிவு பெற மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அழகுராணிதான்!




அழகு குறிப்புகள்:பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?

கூடல் - Friday, March 30, 2012
Drinking Water Cares Your Skin - Beauty Care and Tips in Tamil
சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. வழவழவெனச் சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்!
தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? "ம்ஹும், அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கணும்பா" - இப்படி ஏக்கப் பெருமூச்சு விடுகிறீர்களா?
அம்மணி.... பொறுங்கள். இதைப் படியுங்கள் முதலில்!
தண்ணீர் மருந்து
"தண்ணி கிடைக்காத காலத்துல மருந்து மாதிரிதான் தண்ணியைக் குடிக்க வேண்டியிருக்கு" - நீங்கள் முனகுவது காதில் விழுகிறது.
ஆனால், ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினை அவ்வளவாக வருவதில்லை!
வயிறு நலமாக இருந்தால், நமது உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.
எலுமிச்சை உடம்புக்கு நல்லது!
குளிப்பதற்கு முன் - ஒரு வாளித் தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக ஒரு 'லெமன் பாத்' எடுங்கள் (எலுமிச்சை சாதமில்லீங்க... குளியல்).
இதன் புத்துணர்வையும் சரும மினு மினுப்பையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
தேமலை விரட்டுங்க!
நாட்டுமருந்துக் கடைகளில் கார்போக அரிசி என்று கேட்டால் தருவார்கள். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்!
மெருகுக்கு பப்பாளி!
நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம்.





அழகு குறிப்புகள்:குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?

கூடல் - Thursday, March 22, 2012
Do You Prefer High Heels? - Beauty Care and Tips in Tamil
குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.
* குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.
* குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.
* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி 'நியுரோமா' எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.
* குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.
இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர்கள் சொல்லும் ஆலோசனை:-
குதிகால் செருப்புகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:
* உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.
* பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலைமுடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது.
* நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
* 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.
* குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் 'சோல்' ரப்பரில் ஆனது தானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும்.
* குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங் செயற்கையான வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல் இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.
* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.
* குதிகால் செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடியிராமல் அங்கங்கே காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும்.
* அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
* குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும் அதுவே ஆரோக்கியமானது.
நடக்கும்போது கவனிக்க வேண்டியவை:
* குதிகால் செருப்பணிந்தவர்கள் நடக்கும்போது குதிரை நடக்கும் குளம்பொலி சத்தம்போல் கேட்கும். பொருத்தமான குதிகால் செருப்பணிந்த பெண்கள் நடனம் கூட ஆடலாம். ஆனால் பழக்கமில்லாத சில பெண்கள் குதிகால் செருப்புடன் நடப்பதற்குச் சிரமப்படுவர். இத்தகைய பெண்கள் நடப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும்.
* கைகளை முன்னும் பின்னும் நீட்டியசைத்து உடல் எடையைச் சமநிலை செய்து விட்டு நடந்து பழக வேண்டும்.
* குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்து வைக்க வேண்டும்.
* மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப்பதித்து ஏறவேண்டும்.
* மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முற்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.
* குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது.
* அதிகாலையில் குதிகால் செருப்பணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும். இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடந்தவர்கள் 45 டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம் ஓய்வு எடுத்தல் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறையும்.
* கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.
* கால்நீட்டி கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின் முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.



அழகு குறிப்புகள்:மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!

கூடல் - Wednesday, March 07, 2012
Papaya for Skin Benefits - Beauty Care and Tips in Tamil
பப்பாளி பழத்தின் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. அழகை அழகூட்டும் பப்பாளியைப் பற்றி இன்னும் சில அழகு டிப்ஸ்....
* தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் 'ப்ரெஸ்' ஆக காணப்படுவீர்கள்.
* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.
* தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.
* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.
* தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.
* 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.
* 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

* பப்பாளி வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.
* பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
* பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.


அழகு குறிப்புகள்:தலைமுடியை மெயின்டெய்ன் செய்ய முடியலையா?

கூடல் - Thursday, January 26, 2012
Secrets to maintaining beautiful Skin and hair - Beauty Care and Tips in Tamil
உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா?
சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை அவாய்டு பண்ணி விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். 'வாட்டர் பேஸ்டு மேக்கப்' போட்டுக் கொள்ளுங்கள். ஆயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக குட்டையாக மெயின்டெய்ன் செய்ய முடியாமல் அடங்காப் பிடாரியாக இருக்கிறதா?
இப்படிப்பட்ட முடியைக் கொண்ட பெண்கள் தலைக்குக் குளித்தவுடனே முடியில் ஆலுவேரா ஜெல்லைத் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசி விடுங்கள் போதும்.
சோப், ஃபேஷ் வாஷ் என்று எதையும் ஏற்றுக்கொள்ளாத சென்சிட்டிவ் ஸ்கின் உங்களுடையதா?
ஹைப்போ அலர்ஜெனிக் சோப் மற்றும் ஃபேஷ் வாஷை பயன்படுத்த ஆரம்பியுங்கள். தவிர வாட்டர் பேஸ்டு மாய்ஸ்ரைஸரை தொடர்ந்து யூஸ் செய்யுங்கள்.
உங்கள் சருமத்தில் முகச் சுருக்கம் விழுந்து விட்டதா?
டோன்ட் வொர்ரி.... முகத்திலும், கழுத்திலும் தேனை அப்ளை செய்து வட்டமாக மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். பிறகு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை வாஷ் செய்து விடுங்கள். தொடர்ந்து இப்படியே செய்து வர உங்களுடைய சரும ஈரப்பதத்தை, தேன் சீர் செய்து சரும சுருக்கத்துக்கு குட்பை சொல்லிவிடும்.
டிரை ஸ்கின் உள்ளவர்கள் ஃபேஷியல் செய்தால், அவர்கள் சருமம் இன்னும் வறண்டு போய்விடும். இந்தப் பிரச்சினை உங்களுக்கு இருக்கிறதா?
கெமிக்கல் ஃபேஷியலை அவாய்டு செய்து விட்டு, அதற்குப் பதில் பாலில் அரிசி மாவைக் குழைத்து முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவி விடுங்கள். டெட் செல்லும் ரிமூவாகும். சருமமும் டிரை ஆகாது.
உங்களுடைய புருவமும், கண் இமையும் அடர்த்தியாக இல்லையா?
கவலையை விடுங்கள். விட்டமின் 'ஈ' ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலில் ஏதோவொன்றைத் தொடர்ந்து புருவத்திலும், கண் இமைகளிலும் தடவி வாருங்கள் போதும். ஆனால் உங்கள் புருவமும், கண் இமைகளும் மெல்லியதாக இருப்பது பரம்பரையாக வருவதென்றால், இந்த ஆயில் ட்ரீட்மெண்ட் அதிகம் சக்ஸஸ் ஆகாது.
செலவே இல்லாத ஈஸி ஸ்க்ரப்பர் வேண்டுமா உங்களுக்கு?
பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை 'நற நற'வென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள். சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.
'ட்ரை ஸ்கின்' உள்ள எனக்கு எந்த சைட் எஃபெக்ட்டும் இல்லாத 'வெஜிடபிள் ஃபேஸ்பேக்' இருக்கிறதா என்று கேட்பவரா நீங்கள்?
பீட்ருட்டை வேக வைத்து மசித்து, இத்துடன் ஓட்ஸ் மீலைக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்து விடுங்கள். ட்ரை ஸ்கின்னும் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.




அழகு குறிப்புகள்:'குளிர்காலம்..' வறண்ட சருமக்காரர்கள் உஷார்!

கூடல் - Saturday, December 24, 2011
Treating Dry Skin in Winter - Beauty Care and Tips in Tamil
இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.
இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும்.
வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.
பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்!
அதேப்போன்று அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.
எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும்.
தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.
மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.
இவையெல்லாவற்றையும் விட வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும்.
மேற்கூறியவற்றில் உங்களுக்கு வசதியானவற்றை பின்பற்ற ஒரு சில நிமிடங்கள்தான் தேவை. அதை செய்தால் பள பளக்கும் மேனியை நிச்சயம் பெறலாம்.




அழகு குறிப்புகள்:தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க....!

கூடல் - Tuesday, January 03, 2012
Drumstick Leaves for Hair Growth - Beauty Care and Tips in Tamil
தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.
முருங்கைகீரை சூப் செய்யும் முறை:

முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு
முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.
அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.



அழகு குறிப்புகள்:பனிக்காலத்தில் சருமத்தை பாதுகாப்பதெப்படி?

டாக்டர். உமா - Saturday, November 26, 2011
Winter Skin Care Tips - Beauty Care and Tips in Tamil
வெறும் பாலாடை அல்லது பாலாடையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறிய பிறகு குளிப்பதும் நல்ல பலனைத் தரும். பாலாடையுடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து முகம் மற்றும் கை, கால்களில் பூசி, சிறிதுநேரம் கழித்து குளிப்பதும், சருமத்தை மென்மையாக்கும். ஆலுவேரா எனப்படும் சோற்றுக் கற்றாழை சேர்த்த மாய்ச்சரைஸரை சோப்புபோல உடல் முழுவதும் தேய்த்து, வெறுமனே தண்ணீ­ர் ஊற்றிக் குளிக்கலாம். சோப்பைத் தவிர்த்து, பால், தயிர் போன்றவற்றையும் உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம். கிளிசரின் அதிகம் சேர்த்த சோப்பை உபயோகித்தாலும் தவறில்லை.
வறண்ட சருமக்காரர்கள், பப்பாளி, ஆப்பிள் போன்றவற்றைத் தவறாமல் சாப்பிட வேண்டும். அதிக தண்­ர் குடிக்க வேண்டும். இது எல்லா சரும வகையினருக்கும் பொருந்தும்.
தோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பனிக் காலத்தில் உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கக்கூடாது. அது சருமத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சிவிடும். மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்துக் குளித்து வரவேண்டும்.
சாதாரண மற்றும் எண்ணெய்ப் பசையுள்ள சருமக்காரர்களுக்குப் பனிக்காலம் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்களும் நிறைய தண்ணீ­ர் குடித்து, பப்பாளி, ஆப்பிள் பழ வகைகளை சாப்பிட்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்கிறார் டாக்டர் உமா.




அழகு குறிப்புகள்:பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி!

சுஜீதா செந்தில்குமார் - Thursday, November 10, 2011
Herbal Powder for Soft Skin - Beauty Care and Tips in Tamil
சருமத்தின் அழனை பாதுகாக்க இயற்கை மூலிகைகளை விட்டு விட்டு செயற்கையாய் விற்பதை வாங்கி பயன்படுத்துகிறோம். சொந்த காசில் சூனியம் வைத்தது போல ஆகிவிடும் நம் சருமம். ஆகையால் சருமத்தை பாதுகாக்க மூலிகை பொடி செய்து பயன்படுதுங்கள். பொலிவான தோற்றம் பெறுங்கள்...
மூலிகைப் பொடி தயாரிக்கும் முறை இதோ:
பச்சைப் பயிறு - 250 கிராம், கடலை பருப்பு 250 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம், ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் 250 கிராம் ஆகியவற்றை வாங்கி, ஆவாரம் பூவை சுத்தம் செய்து, காய வைத்து, மற்ற பொருள்களோடு சீயக்காய் அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி விடலாம். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும்.
பாசிப் பயறு 250 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், கார்போக அரிசி 250 கிராம், இவற்றை மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும். குளிப்பதற்கு முன் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அதில் சில துளி தேனைக் கலந்து முகம், கை, கால், கழுத்து, உடல் முதலிய இடங்களில் தேய்த்து, ஊறவைத்துப் பின்னர் மேலே கூறிய பொடியைத் தேய்த்து கழுவ பளபளப்பு கிடைக்கும். ஆரோக்கியமானதும் ஆகும்.
வெளியில் அடிக்கடி செல்லும் பெண்களின் முகம் கறுத்து விடும். அப்படிப்பட்ட பெண்கள் இரவில் கோல்டு கிரீமையும், பகலில் வானிஷிங் கிரீமையும் தடவி வந்தால் தோலின் நிறம் மங்காது, கறுக்காது. வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்களுக்கு இவையெல்லாம் தேவையில்லை.
தேநீர், பால், சர்பத் ஆகியவற்றில் சர்க்கரைக்கு பதிலாகத் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தாலும் தோல் பளபளப்பாகும். உடலும் கச்சிதமாக இருக்கும்.
தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து, உடலில் தடவி, ஊறிய பின் மிதச் சூட்டு நீரில் குளித்து வந்தால், தோல் பொன்னிறமாகவும், மென்மையாகவும், பட்டுப் போலும் மாறும்.
வசதி உள்ள பெண்கள் பாதாம் எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை உடலில் தடவிக் கொண்டு ஊற வைத்த பின் குளியல் பொடியைத் தேய்த்துக் குளித்தால் தோல் பட்டுப் போல் மென்மையாகவும், சிவப்பாகவும் மாறும்.





அழகு குறிப்புகள்:மழைக்காலத்தில் உடல் பராமரிப்பு

கூடல் - Thursday, November 03, 2011
Beauty Tips for Winter - Beauty Care and Tips in Tamil
மழைக்காலம் தொடங்கி ஆரம்பிக்கும் போது எந்நேரமும் மழை பெய்து கொண்டே இருக்கும். இந்தக் காலத்தில் பலரும் சளி தொல்லையால் அவதிப்படுவர். சாலைகளில் தேங்கியிருக்கும் தண்­ணீரில் நடப்பவர்களுக்கு சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில் உடலை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்.
மழை பெய்யும் காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளித்தால் நல்லது. மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் குளித்தால் தோலின் நிறம் மாறாமல் இருக்கும். குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தேங்காய் எண்ணையை தடவிக் கொள்ளவும். அதேபோல் முழங்காலில் இருந்து கணுக்கால் வரை தேவையற்ற முடிகளை அகற்றும் பசை தடவி மசாஜ் செய்து கொண்டால் மழைநாட்களில் இந்த இடங்களில் (பங்கஸ்) பூஞ்சை தாக்குதல் இருக்காது.
தினமும் இரவு படுக்கப்போகும் முன்பு, ஒரு சிறிது வெந்நீரை ஊற்றி, அதில் உங்கள் பாதங்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து கைவிரல்களால் மசாஜ் செய்யுங்கள்.
இப்படிச் செய்வதால் உடல் முழுவதும் உள்ள இறுக்கம் விடுபட்டது போல் இருக்கும். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது சுத்தமான தண்­ணீரால் கால்களை நன்கு கழுவி, சுத்தமான துணியால் ஈரத்தை துடையுங்கள்.
குளிக்கும் நீரில் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை போட்டு வைத்திருந்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம். பெண்கள் மழை நாட்களில் தவறாமல் மஞ்சள் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஏனெனில், கிருமிநாசினியான மஞ்சள் சருமத்தைப் பாதுகாக்கும்.
ஈரமான துணிகளை அணிந்து கொள்வதால் தோல் எரிச்சல், பூஞ்சை பாதிப்பு போன்றவை ஏற்படலாம். எனவே, ஈரத்துணியைக் கழற்றியவுடன் அந்த இடத்தில் தேங்காய் எண்ணை தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.
மழைக்காலத்தில் மருதாணி போட்டுக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. மருதாணி குளிர்ச்சி என்பதால் சளி பிடித்துவிட வாய்ப்புண்டு.





அழகு குறிப்புகள்:அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்!

கூடல் - Friday, October 21, 2011
Coconut Beauty Secrets - Beauty Care and Tips in Tamil
நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
* வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.
* வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.
- கேரள பெண்கள் ஏன் கொள்ளை அழகுடன் ஜொலிக்கிறார்கள் என்பதற்கான காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே...!




அழகு குறிப்புகள்:அழகு தரும் ஆப்பிள்!

கூடல் - Saturday, October 15, 2011
Beauty Benefits of Apple - Beauty Care and Tips in Tamil
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரையே அணுக அவசியமில்லைங்கிறது ஆங்கில பழமொழி. ஆனால் ஆப்பிள் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் அழகுமொழி...........! 

* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.
* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.
* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.




அழகு குறிப்புகள்:முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ.....!

கூடல் - Wednesday, October 05, 2011
Anti Aging Tips for Wrinkle free beauty - Beauty Care and Tips in Tamil
முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ உண்ணவேண்டிய அழகான உணவுகள்..!
* வைட்டமின் ஈ சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், விதைவகைகளான வேர்க்கடலை மொச்சைப் பயறு வகைகளை அழகிய உணவு வகைகளாக உங்கள் அன்றாட உணவில் அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மேனி முதுமைச் சுருக்கமின்றி இளமையுடன் திகழும்!
* உங்கள் உடம்பின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் ஹை டென்ஸிட்டி லைபோபுரோட்டீன் (ஹெச்.டி.எல்) சத்து நிறைந்த ஆலிவ் எண்ணெய் உங்கள் மேனியை உலர விடாமல் ஈரப்பசையுடன் மின்னிப்பிரகாசிக்கச் செய்யும்!
* ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து, வைட்டமின் பி 12, புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த மீன் மற்றும் மீன் எண்ணெய் அழகிய உணவு வகைகளில் முதன்மை உணவாகத் திகழ்கிறது! ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து உங்கள் தலையின் மேற்பகுதியை என்றென்றும் ஈரப்பசையுடன் வளமாகத்திகழச்செய்து தலைமுடி செழிப்பாக வளர உதவுகிறது.
* நாள் முழுக்க வேலை செய்தால் கண்கள் சோர்ந்து போகும்.அப்போது வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட்டினை உட்கொள்ளுங்கள். சோர்வு நீங்கி கண்கள் புத்தொளி பெறும். சுறுசுறுப்படைவீர்கள்!
* கந்தகம் மற்றும் சிலிகான் சத்து நிறைந்த பிராக்கோலி இலைகள் நக வளர்ச்சிக்கு மட்டுமன்றி மன அமைதிக்கும் உகந்தது. பிராக்கோலி மர இலைகள் கிடைக்காவிடில் அதற்கு இணையான காலிபிளவர் மற்றும் பீட்ரூட் இலைகள் நக வளர்ச்சிக்கு பேருதவி புரிகின்றன.
* வைட்டமின் டி சத்து நிறைந்த பால், கால்சியம் சத்து நிறைந்த பச்சை கீரை வகைகள், பாஸ்பரஸ் சத்து நிறைந்த பூசணி விதை போன்றவைகளும் அழகிய உணவுப் பட்டியலில் இடம் பெறுகிறது. அவை எலும்பு வளர்ச்சிக்குத் துணைபுரிந்து, ஆஸ்ட்டியோபீனியா என்ற எலும்புத்தளர்ச்சி மற்றும் வலுவின்மை என்கிற நோயிலிருந்து காப்பாற்றுகிறது. இந்த உணவு வகைகளை நம் அன்றாட உணவில் அளவோடு உட்கொண்டால் அழகாக வாழலாம்!




அழகு குறிப்புகள்:பெண்களின் வயிற்று சதை குறைய.....!

கூடல் - Thursday, September 15, 2011
Tips to reduce Tummy - Beauty Care and Tips in Tamil
அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.
 
முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.
உலர்ந்த மகிழம் பூ பொடி - 200 கிராம்
கிச்சிலி கிழங்கு பொடி - 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி - 100 கிராம்
கோரை கிழங்கு பொடி - 100 கிராம்
உலர்ந்த சந்தனத் தூள் - 150 கிராம்
இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.
இந்த மருத்துவ முறையை வராமித்ரர் அங்கரசளைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.
குளியல் பொடி
இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.
அருகில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
சோம்பு - 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்
வெட்டி வேர் - 200 கிராம்
அகில் கட்டை - 200 கிராம்
சந்தனத் தூள் - 300 கிராம்
கார்போக அரிசி - 200 கிராம்
தும்மராஷ்டம் - 200 கிராம்
விலாமிச்சை - 200 கிராம்
கோரைக்கிழங்கு - 200 கிராம்
கோஷ்டம் - 200 கிராம்
    
ஏலரிசி - 200 கிராம்
பாசிப்பயறு - 500 கிராம்
இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.
இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.
இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.
பெண்களின் வயிற்று சதை குறைய
நம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.
இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.





அழகு குறிப்புகள்:எண்ணெய் வழியும் சருமமா?

கூடல் - Monday, September 05, 2011
Beauty Tips for Oily Face - Beauty Care and Tips in Tamil
இயற்கையின் படைப்பில் அனைத்துமே அழகுதான். அழகை சீராக பராமரிப்பதன் மூலம்தான் ஆரோக்கியமான அழகை பெறமுடியும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
உடலின் உள்ளே நோயின் தாக்கம் இருந்தால் அதன் வெளிப்பாடு முகம் மற்றும் சருமப் பகுதிகளில் தெரியவரும். இன்றைய நாகரீக உலகில் காற்றும், நீரும் மாசடைந்துள்ளன. மேலும் வாகன புகைகளின் காரணமாக உடல் அலர்ஜி உண்டாகி சருமப் பாதிப்பு உண்டாகிறது.
எண்ணெய் வழியும் சருமத்திற்கு
சிலருக்கு எவ்வளவுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில் எண்ணெய் பசை மாறாது. மேலும் மேக்கப் செய்த சிறிது நேரத்தில் முகத்தில் எண்ணெய் வழியும். கெமிக்கல் கலந்த முகப் பூச்சுகளால் அலர்ஜி உண்டாகுமே தவிர முழுமையான பலன் கிடைக்காது.
இவர்கள் கடைந்த மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் அதாவது 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம்சூடான நீரில் கழுவி வந்தால் எண்ணெய் வழியும் சருமம் மாறும்.
மேலும் தினமும் உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அதுபோல் வாயுவை அதிகரிக்கக் கூடிய உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக கெமிக்கல் அல்லாத மூலிகை சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.
முகம் பளிச்சிட
சிலருடைய முகம் எப்போது பார்த்தாலும் இருண்டே காணப்படும். எவ்வளவுதான் கிரீம்கள் தடவினாலும் முகம் பளிச்சிடாது. இவர்கள் முட்டைகோஸ் மற்றும் கேரட் போன்றவற்றின் வேகவைத்த தண்­ணீரை கீழே கொட்டிவிடாமல் அதை ஆறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.
கறுப்பு திராட்சை 25 கிராம் வாங்கி அதன் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.
முகப்பரு மாற
முகப்பரு இக்கால தலைமுறையினருக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்குகிறது. உணவு முறை மாறுபாட்டாலும், உடலின் வளர்ச்சிதை மாற்றத்தாலும் முகப்பரு உண்டாகிறது. முகப்பரு தொல்லையால் அவதிப்படுபவர்கள்
வெந்தயக் கீரை - 1 கைப்பிடி
துளசி இலை - சிறிதளவு
கொத்துமல்லி இலை - சிறிதளவு
எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவினால் முகப்பரு மாறும். கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள் குறையும்.
வெள்ளரி - 2 துண்டு
தக்காளி - 2 துண்டு
கேரட் - 2 துண்டு
எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடங்கள் ஊறியபின் கழுவினால் பருக்கள் மறையும். ஆண்கள் இதனை உபயோகிக்கக் கூடாது.
புருவங்கள் அடர்த்தியாக
சிலருக்கு புருவங்கள் அடர்த்தியாக வளராமல் விட்டு விட்டு மெலிதாக வளர்ந்திருக்கும். இவர்கள் தேங்காய் பாலை காய்ச்சி எடுத்த எண்ணெயை புருவங்களின் மீது தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். அல்லது சுத்தமான விளக்கெண்ணெய்யை தடவி வந்தாலும் புருவம் அடர்த்தியாக வளரும்.
முகம் பளபளக்க
  
முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், கரும்புள்ளி உள்ள இடத்தில் பச்சைப் பயறு மாவுடன் தயிர் சேர்த்துத் தடவ வேண்டும்.
அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்துப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
வெள்ளரிச் சாறு, சந்தனப் பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை, கால்களுக்குத் தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாகும்.




முதல் பக்கம் » பெண்கள் » அழகு குறிப்புகள் » முடிக்கு முக்கியத்துவம் தர்றீங்களா?

Importance to hair is Important

-

முடிக்கு முக்கியத்துவம் தர்றீங்களா?

அழகு குறிப்புகள்:முடிக்கு முக்கியத்துவம் தர்றீங்களா?

கூடல் - Friday, September 30, 2011
Importance to hair is Important - Beauty Care and Tips in Tamil
'உரோமம்' எனப்படும் முடியை வெகு அலட்சியமானதாகப் பேச்சு வழக்கில் கூறுகிறோம். ஆனால் உண்மையில் முடியின் மதிப்பும், பயன்களும் அளவற்றவை. சிறந்த சுட்டிக்காட்டியான முடி, மனஅழுத்தம், சத்துப் பற்றாக்குறைகள், சமச்சீரற்ற நிலை, வயது, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மாசு, வியாதி, நச்சுப் பாதிப்பு போன்ற பல விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடியது.
உயிரினங்களில் பாலூட்டிகளில் மட்டும் காணப்படும் முடி, கதகதப்பை அளிக்கிறது, தூசி தும்புகளில் இருந்து பாதுகாப்புக் கொடுக்கிறது, ஈரப்பதத்தைக் காக்கிறது. நமது உடலமைப்பில் உள்ள திசுக்கள், எலும்புகள், உறுப்புகளுக்கு இணையாக முக்கியத்துவம் பெற்றது, முடி.
பொடுகு - 'செபோரிக் டெர்மட்டைட்டிஸ்' எனப்படுகிறது. தலை தோலின் மேல் அடுக்கில் காணப்படும். செதில் போல் லேசாக உதிரும்.
முடி உதிர்தல்
முடி இழப்பு அதிகரித்துக்கொண்டே போவது 'அலோபேசியா' எனப்படுகிறது. (கிரேக்க மொழியில் 'அலோபெக்ஸ்' என்றால், நரி.) இதன் இறுதிநிலை, வழுக்கையாகும். ஹார்மோன் சிக்கல்கள், மருந்துகள், மன அழுத்தம், பாரம்பரியம் போன்றவை 'வழுக்கை'க்குக் காரணமாகின்றன.
புரதம், இரும்புச் சத்து, அனைத்து வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகள் முடியை அடர்த்தியாக்கி, வளப்படுத்தும் தன்மை கொண்டவை. முடி உதிர்வு, சத்துப் பற்றாக்குறையையும் குறிக்கும். மனிதர்களுக்கு முடி குட்டையாகவும், மென்மையாகவும், ஒளி ஊடுருவக்கூடியதாகவும் இருக்கிறது. இதேபோல ஆப்பிரிக்கவாழ் பாலூட்டிகளான யானைகளுக்கும், நீர்யானைகளுக்கும் 2 ரோம அமைப்பு உள்ளது.
காக்கும் முடிகள்
புருவ முடிகளும், இமை முடிகளும் கண்களைக் காக்கின்றன. மூக்குத் துவாரங்களிலும், காதுகளுக்குள்ளும் காணப்படும் நுண் முடிகள், அவற்றுக்குள் நுண்ணுயிரிகள், தூசி தும்புகள் நுழையாமல் தடுக்கின்றன. தோலுக்கு மேலாக உள்ள முடியை நீக்குவது 'டெபிலேஷன்' எனப்படுகிறது.
மயிர்க்கூச்செரிதல்
குளிரில் நமக்குப் பற்கள் கிடுகிடுக்கும்போது வேர்க்கால்களை ஒட்டிய 'அரெக்டார் பைலி' தசைகள் நிமிர்கின்றன. அதனால், முடியும் குத்திட்டு நிற்கிறது. இதன் விளைவாக, முடி அடுக்கு, வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்கிறது. நாம் இதை 'மயிர்க்கூச்செரிதல்' என்கிறோம். மருத்துவரீதியாக இது 'பைலோஎரெக்ஷன்' எனப்படுகிறது. வெப்பம் அதிகமாக இருக்கும்போது, முடி அப்படியே தோலோடு ஒட்டிக்கொள்கிறது. எனவே வெப்பம் தக்க வைக்கப்படாமல் தவிர்க்கப்படுகிறது.
முடியை அகற்றும் முறைகள்
முடியை நீக்கும் 'கிரீம்கள்'- இவற்றை முடி மீது பூச வேண்டும். அகற்றப்படும் முடிகள் 2- 5 நாட்களில் மீண்டும் வளர்ந்துவிடும்.
சவரம் - ரேசர் பிளேடை பயன்படுத்திச் செய்வது. சில மணி நேரத்தில் முடி வளரத் தொடங்கிவிடும்.
வாக்சிங் - ஒட்டக்கூடிய சூடான மெழுகையும், ஒரு துண்டுக் காகிதம் அல்லது துணியையும் பயன்படுத்தி மேற்கொள்வது. நான்கு முதல் ஒன்பது வாரங்களில் முடி மறுபடி வளரும்.
த்ரெட்டிங் - முடிச்சிட்ட நூலால் முடியை அகற்றுவது.
எலக்ட்ரோலிசிஸ் - சிறுபரப்புகளுக்குப் பயனுள்ளது. நிரந்தரமாக முடியகற்ற உதவுகிறது.
எபிலேட்டர் - முடியை வேர்ப்பையுடன் முழுமையாக அகற்றுகிறது.
லேசர் - கரிய, கரடுமுரடான முடி, 'என்டி- ஓய்ஏஜி' லேசரை ஈர்த்து உதிர்கிறது. இதன்மூலம் 80- 90 சதவீத முடியை அகற்றலாம்.
நமக்கு 'வேகம்' அதிகம்!
ஆசியக் கண்டத்தினரான நமது முடி வேகமாக வளர்கிறது. அதாவது, மாதம் 1.3 செ.மீ. என்ற அளவுக்கு. ஆனால் நமது முடியின் அடர்த்தி குறைவு, மெல்லியதாக இருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தினரின் முடிதான் மெதுவாக வளர்வது. மாதத்துக்கு 0.9 செ.மீ. ஆனால் அது, ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்களின் முடியை விட அடர்த்தியானது. தலை தோலை ஒட்டியே வளரும் இது, சுருண்டுகொள்கிறது. காகேசிய இனத்தவரின் முடிதான் உலகிலேயே அடர்த்தியானது. அது, மாதத்துக்கு 1.2 செ.மீ. நீளம் வளர்கிறது.
***
1. வேர்ப்பை - முடியில் உயிருள்ள ஒரே பகுதி. முடி வேரின் அடிப்பகுதி, குமிழ் எனப்படுகிறது.
2. செபேசியஸ் சுரப்பிகள்- முடிக்கு எண்ணெய்ப் பளபளப்பை அளிக்கின்றன.
3. டெர்மிஸ்- எபிடெர்மிஸூக்கு கீழ் உள்ள தோல் அடுக்கு. இங்குதான் முடியின் வேர்ப்பை புதைந்துள்ளது.
4. மெடுல்லா- உள்ளார்ந்த பகுதி. அனைத்து முடிகளிலும் காணப்படுவதில்லை.
5. கார்ட்டெக்ஸ்- முடியின் நடு அடுக்கு. முடியின் பலத்துக்கான அடிப்படை ஆதாரம். முடிக்கு நிறத்தைக் கொடுக்கும் 'மெலனினை' கொண்டிருக்கிறது. முடியின் வடிவத்தைத் தீர்மானிப்பது இதுதான்.
6. க்யூட்டிக்கிள் - முடியின் வெளிப்புற அடுக்கு.
****
* தினசரி 100- 150 முடிகள் உதிர்வது இயல்பானது.
* 100 முடி இழைகளால் 10 கிலோ எடையைத் தூக்க முடியும்.
* இங்கிலாந்தில் 55 சதவீதக் குழந்தைகள் பேன் தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் முழுவதும் நுண்ணிய 'வெல்லஸ்' முடிகளால் மூடப்பட்டுள்ளது.
* மாவீரன் நெப்போலியனின் முடியில் 'ஆர்சனிக்' விஷம் காணப்பட்டது. எனவே அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
* தலைமுடியானது அகச்சிவப்புக் கதிர்வீச்சில் இருந்து உடலைக் காக்கிறது. பாதுகாப்பு அமைப்பாகச் செயல்படுகிறது.
* ஒரு முடிக் கற்றையால் அதன் எடையைப் போல் 30 சதவீத தண்­ணீரைக் கிரகித்துக் கொள்ள முடியும்.
***
பாலிக்யூலிட்டீஸ் - வேர்ப்பையில் ஏற்படும் வீக்கம். முடியை அகற்றும்போது மோசமான சுகாதாரத்தால் இது ஏற்படக்கூடும்.
ஹிருசுட்டிசம் - அதிகமாக முடியடர்ந்து காணப்படுவது. குறிப்பாக, முகத்திலும், உடம்பிலும். ஹார்மோன்களின் சமச்சீரற்ற நிலை, மருந்துகளின் பக்கவிளைவுகளால் இந்நிலை ஏற்படலாம்.
பேன் - ரத்தம் குடிக்கும் சிறு பூச்சியினம். முடியின் அடிப்பகுதியை இறுகப் பற்றிக்கொள்ளும் இவை, முட்டைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. மருந்து சேர்த்த ஷாம்புகள், லோஷன்கள், நெருக்கமான பற்கள் கொண்ட சீப்புகள் மூலம் பேன்களை அகற்றலாம். ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பேன் பரவுவது, 'பெடிகுலோசிஸ்' எனப்படுகிறது. சீப்புகள், தொப்பிகள், துண்டுகள், தலையணைகள் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வது, அருகாமை போன்றவற்றால் பேன்கள் பரவலாம்.




அழகு குறிப்புகள்:ஜீன்ஸால் இளமை கூடுமா...?

கூடல் - Wednesday, September 21, 2011
Jeans for Youthness - Beauty Care and Tips in Tamil
பெருநகரங்கள் மட்டுமின்றி... சிறிய நகரங்களிலும், 'காபி டே', 'நைட் கிளப்', அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் மற்றும் கல்லூரிகள் என்று எங்கே பார்த்தாலும் ஜீன்ஸ்தான். மகளோடு போட்டி போட்டுக்கொண்டு அவர்களுடைய அம்மாக்களும் 'ஸ்ட்ரைட் கட்' மற்றும் 'பேட்ஜ் ஒர்க்' ஜீன்ஸ் அணிந்து வலம் வருகின்றனர். ஜீன்ஸ் என்ற உடையால் சென்னை போன்ற பெருநகரங்கள் இளமை கூடி... பூத்துக் குலுங்குகின்றன என்றால் அது மிகையாகாது.
நீலக்கலரில் ஜீன்ஸ் போட்டிருந்த பெண்களை பார்த்து பலர், 'அடங்காப்பிடாரி' என்று நினைத்த காலம் எல்லாம் மலையேறிப் போச்சு. இன்றைக்கு ஜீன்ஸ் போட்ட பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்ற நினைப்பே அதிகமாகி வருகிறது.
அணிந்து கொள்ள சவுகரியம், எப்போதும் பாதுகாப்பு என்ற அடிப்படையில் ஜீன்ஸ் போன்ற சிறந்த உடை வேறு எதுவுமில்லை என்று கூறுகின்றனர் 'ஜீன்ஸ் கன்னியர்!'
ஒரே ஒரு ஜீன்ஸ் இருந்தாலும் போதும், டி-சர்ட், ஷார்ட் டாப்ஸ், சல்வாருக்கு போடும் குர்தா என்று எதையும் மேலாடையாக போட்டுக் கொண்டு கலக்கலாம். அதே மாதிரி, வெளியூர் சென்றாலும் ஓரிரு ஜீன்ஸ் எடுத்து வைத்தால் போதும்... சுமையும் குறைவு... வசதியும் அதிகம்.
ஜீன்ஸ் அணிவதற்கு பதிலாக சல்வார் மற்றும் சுடிதார் அணிந்தால், துப்பட்டாவை பாதுகாப்பாக பிடித்துக் கொள்ளவே நேரம் போதாது. இதற்கிடையில் கையில் வேறு ஏதாவது பொருட்கள் இருந்தாலோ... அல்லது சாலையில் நடந்து சென்றாலோ... இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் இயல்பு நிலை மாறிவிடும். ஆனால் ஜீன்ஸ் போட்டால் இப்படி எந்தக் கவலையும் இல்லை. இதனால் மற்ற உடைகளைவிட... ஜீன்ஸ் அணிந்தால் தன்னம்பிக்கை அதிகமாகும்.
காலையில் கல்லூரிக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்லும்போது ஜீன்ஸ் அணிந்து கொண்டால் போதும்... மேலே ஒரு டி-சர்ட் போட்டு அலுவலகத்தை முடித்துவிட்டு, மாலையில் ஷாப்பிங் செல்ல... டி-சர்ட்டை கழற்றிவிட்டு, வேறு ஏதாவது டாப்ஸ் போட்டுக் கொள்ளலாம். நைட் பார்ட்டி என்றால் டாப்ஸை மாற்றிவிட்டு, 'சில்க் குர்தி' அணிந்து கொள்ளலாம். இப்படி 'த்ரீ இன் ஒன்' வசதி வேறு எந்த உடையிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விலையை பொறுத்தவரை நடுத்தர வர்க்கம் வாங்கும் வகையில்தான் உள்ளது என்பதும் ஜீன்ஸ் பிரபலமானதற்கு ஒரு முக்கிய காரணம். பிராண்டட் ஜீன்ஸ்கள் ஆயிரம் ரூபாய் முதல் தரமானதாக கிடைக்கின்றன. அதற்கு அடுத்து... 300 ரூபாய் முதல் ஜீன்ஸ் கிடைக்கின்றது. கால்களை இறுக்கிப் பிடிக்கின்ற 'ஸ்கின்னி ஜீன்ஸ்' இன்றைய இளம்கன்னியரின் 'பேவரைட் சாய்ஸ்'.
35 வயதைக் கடந்த பெண்கள்கூட 'ஸ்கின்னி ஜீன்ஸ்'-ஐ விரும்பி அணிகின்றனர். குறிப்பாக ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு இந்த 'ஸ்கின்னி ஜீன்ஸ்' மிகப் பொருத்தமாக இருக்கிறது.
* ஜீன்ஸ் வாங்கும்போது...
உங்களுடைய சைஸில் எல்லா பிராண்டட் ஜீன்ஸ்களிலும் இருக்காது. ஒவ்வொரு பிராண்ட்டுக்கும் சைஸ் அளவு மாறுபடும். ஆதலால் ஜீன்ஸ் வாங்கும்போது... அணிந்து பார்த்து வாங்குவது நல்லது.
ஜீன்ஸ் பின்பகுதியில் பாக்கெட் பெரிதாக இருந்தால் வாங்க வேண்டாம். இதனால் அந்த ஜீன்ஸ் அணிந்தவரின் பின்பகுதி பெரியதாக தெரியும். சின்ன பாக்கெட் இருந்தாலும் பரவாயில்லை... பாக்கெட் இல்லாத ஜீன்ஸ் மிகவும் நல்லது. அதேபோல், கீழே தள்ளியும் பாக்கெட் இருக்கக் கூடாது.
ஜீன்ஸ் கடைசி பகுதி பாதங்களைத் தொட்டு இருக்கலாம். ஆனால் மிகவும் நீளமாக இருக்கக் கூடாது.




அழகு குறிப்புகள்:மெலிந்த உடல் குண்டாக...

கூடல் - Thursday, August 25, 2011
Beauty Tips to Maintain Charmness - Beauty Care and Tips in Tamil
அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்தில்... உடலில் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. முதலில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மனசு நன்றாக இருந்தால் புன்னகை முகமாக... எல்லோரையும் வசீகரிக்கும் முகமாக... அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டுமே... மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். எப்போதுமே மனதும், உடலும் குளிர்ச்சியாகும் விதத்தில் நன்றாக குளிப்பது நல்லது.
உடம்பில் எண்ணை தேய்த்து குளித்தாலும் உடலும், மனதும் குளிர்ச்சியடையும். தினமும் எண்ணை தேய்த்து குளிப்பது இளநரையை தடுக்கும். மேலும் வாத நோய்களை போக்கும். உடம்புக்கும் புத்துணர்வு கிடைக்கும். சருமத்துக்கும் மெருகு கூடும். உடலுக்கு ஆரோக்கியமும் ஏற்படும்.
அதுமட்டுமின்றி நமது உடம்பில் சேரும் விஷத் தன்மைகளையும் நீக்கும். ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு தகுந்தாற்போல் எந்த எண்ணையை தேய்த்து குளிக்கலாம் என்பதை ஆயுர்வேதம் கூறுகிறது. அதை அறிந்து உங்களுக்கேற்ற எண்ணையை தேய்த்துக் குளிக்கலாம்.
இன்றைக்கு சோப்பு போட்டு குளிக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். சோப்பு இல்லை என்றாலும் அந்த தன்மை உடைய ஷாம்புவோ அல்லது பவுடரோ தேய்த்தும் குளிக்கின்றனர். அதற்கு பதிலாக தேன், பால், கற்றாழைச்சாறு கலந்த கலவையை உடலில் தேய்த்துக் குளிக்கலாம்.
இது அழகு தருவதோடு... உடம்பில் உள்ள அழுக்கையும் நீக்கிவிடும். இந்த கலவையை பயன்படுத்த முடியாதவர்கள், சிறுபயறு, கடலை மாவு, தேன் பயன்படுத்தியும் குளித்தால் சருமம் மெருகேறும். அழகு என்றால் அதில் தலைமுடிதான் மிக முக்கியமாக கருதப்படுகிறது. அதற்காக இப்போதெல்லாம் டை அடிக்கின்றனர் பலர்.
டை அடிப்பதற்கு பதிலாக 100 கிராம் மருதாணி தூள், 20 கிராம் நெல்லிக்காய் தூள் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்­ர் சேர்த்து ஊற வைக்கவும். காலையில் முடியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவினால் அல்லது குளித்தால் நரையை போக்க இது உதவும்.
கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள பொருள்தான் பொடுகுக்கு காரணம். சீப்பு, டவல் ஆகியவற்றை அடிக்கடி சுடுநீரில் கழுவி பயன்படுத்தவும். அடிக்கடி எண்ணை தேய்த்து தலைமுடியை அலசவும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும்.
இன்றைக்கு நடுத்தர வயதுள்ளவர்களில் பெரும்பாலும் டை அடிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சீக்கிரத்தில் அவர்களுடைய தலைமுடி நரைத்து பஞ்சு மாதிரி ஆகிவிடும். இதற்கு காரணம் அமோனியா சேர்த்த டை தான் காரணம். கறுப்பு நிறம் கொடுக்கும் டைகளில் தீமைகள் அதிகம். புதிய முடிகள் ஆரோக்கியமாக வளர்வதை இது தடுக்கும். டைக்கு பதில் கண் மையை பயன்படுத்தி முடியை கறுப்பாக்கலாம்.
நிறைய காய்கறிகள் சாப்பிடுவோருக்கு சருமம் பளபளப்பாக இருக்கும். இதனால் அவர்கள் எப்போதும் அழகாக இருப்பார்கள். கேரட், கருணைக்கிழங்கு, வெங்காயம், கீரை, புடலங்காய் இதெல்லாம் சாப்பிட்டால் உடல் வனப்பு கூடும்.
உடல் மெலிந்தவர்கள் குண்டாக மாறுவதற்கு பல முயற்சிகளை எடுப்பதற்கு பதில்... 101 நாளில் எளிதாக குண்டாகலாம்.
50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து... அதனுடன் ஒரு மேசைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து.... 101 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகிவிடும். ஈஸ்ட்ரோஜென்னை அதிகரிக்கும் சக்தி வெந்தயத்துக்கு உண்டு.
குண்டான உடம்புடன் கஷ்டப்படுபவர்கள், உடல் மெலிய... 50 கிராம் கொள்ளை வறுத்து... பொடியாக்கி தினமும் சாப்பிடவும். இது உடலில் உள்ள தண்ணீ­ரை நீக்கி உடல் எடையை குறைத்துவிடும். உங்களுடைய உடல் சரியான நிலைக்கு வந்தவுடன் கொள்ளு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அல்லது தொடர்ந்து சாப்பிட்டாலும் உடலுக்கு நல்லதே.
















1 comment: