நாம்
நம்முடைய படங்களை பிளாக்கில் Slide show ஆக கொண்டு வரும் வசதி நம்
பிளாக்கில் உள்ளது. என்னதான் நம் பிளாக்கிலேயே இந்த வசதி இருந்தாலும் நாம்
நம்முடைய படங்களை நேரடியாக பிளாக்கரிலேயே படங்களை அப்லோட் செய்ய
முடியாது.Picasa, Flickr போன்ற இணைய தளங்களில் நம் புகைப்படங்களை அப்லோட்
செய்து விட்டு அந்த போட்ட்க்களின் லிங்க் இங்கு கொடுத்தால் மட்டுமே
பிளாக்கில் நம் புகைப்படங்களை Slideshow வாக கொண்டு வர முடியும். அது
எப்படி என்று இங்கு கீழே காண்போம்.
- பெரும்பாலனவர்களுக்கு கூகுள் பிகாஸா பற்றி தெரிந்திருக்கும். ஆக அதிலேயே சொல்கிறேன் முதலில் Picasa Web Album பகுதிக்கு செல்லுங்கள்.
- அங்கு Upload என்று இருக்கும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
- இந்த அப்லோட் பட்டனை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் ஆல்பம் பெயரை டைப் செய்து கொள்ளவும்.
- Public on the web இருக்க வேண்டும் private செட் செய்தால் ஆல்பத்தை நம் பிளாக்கில் கொண்டு வர முடியாது.
- Continue பட்டனை அழுத்தவும் உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் சேர்க்க விரும்பும் படங்களை தேர்வு செய்து கீழே Start Upload என்ற பட்டனை அழுத்தவும்.
- ஒரே தடவையில் 5 படங்களை அப்லோட் செய்யும் வசதி இதில் உள்ளது. மேலும் தேவை பட்டால் மறுபடியும் அப்லோட் செய்து கொள்ளவும்.
- உங்கள் போட்டோக்கள் அப்லோட் ஆகியதும் உங்கள் ஆல்பம் உருவாகி விடும்.
No comments:
Post a Comment