மென்பொருள் கொண்டு தான் உருவாக்க வேண்டும் என்று
இல்லாமல் எளிதாக இணையதளம் மூலம் எளிதாக யார்
வேண்டுமானாலும் டெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
அனிமேசன் பற்றி படிக்கவில்லையே நம்மால் அனிமேசன் உருவாக்க
முடியுமா என்று நினைப்பவர்களுக்கு அனிமேசன் எளிதாக உருவாக்க
பல புதிய மென்பொருள்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக
ஒரு இணையதளம் மூலம் எந்த மென்பொருள் துணையும் இல்லாமல்
டெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு
தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://textanim.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Text என்று
கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் எந்த வார்த்தையை அனிமேசன்
செய்ய வேண்டுமோ அதை தட்டச்சு செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து Font type , Font size , Background color , Direction (new),
Shadow Text Side ,both right bottom no ,Delay movement போன்ற
அத்தனையையும் நம் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக்கொண்டு Generate
என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்த சில நொடியில்
அதே பக்கத்தின் முகப்பில் நாம் உருவாக்கிய டெக்ஸ்ட் அனிமேசன்
தெரியும். டெக்ஸ்ட் அனிமேசன் பக்கத்தில் இருக்கும் Download என்ற
பொத்தானை சொடுக்கி Gif கோப்பாக நம் கணினியில் சேமிக்கலாம்.
இந்த Gif கோப்பை நம் பிளாக்-ல் , Facebook-ல் பதிவேற்றலாம்.
இனி நம் விருப்பபடி டெக்ஸ்ட் அனிமேசனில் ஒவ்வொன்றாக
மாற்றி அமைத்து நமக்கு பிடித்த வகையில் அனிமேசன் வந்ததும்
அதை தரவிரக்கலாம். கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட விழாக்
காலங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் நாம் இது போன்ற
வித்தியாசமான அனிமேசனில் வாழ்த்துச்செய்திகளை அனுப்பினால்
அழகாகவும் கண்ணைக்கவரும் வண்ணமும் இருக்கும்.
No comments:
Post a Comment