முக்கியமான தகவல்களை நாம் பிடிஎப் பைல் பார்மெட்களில் வைத்திருப்போம்,
மேலும் முக்கிய அலுவல்கள் யாவும் பிடிஎப் கோப்பாகவே இருக்கும். அவற்றில்
எதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் அதனை நாம் வேர்ட் கோப்பாக மாற்றிய
பின்புதான் மாற்றங்கள் செய்ய முடியும். இவ்வாறு பிடிஎப் பைல்களை வேர்ட்
பைல்களாக மாற்றம் செய்ய இணையத்தில் மென்பொருள்கள் கிடைக்கிறன. ஆனால்
தற்போது Simpo PDF மென்பொருளை இலவசமாக தருகிறனர்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, முகநூல் பயனர்பெயர் மற்றும்
கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். பின் Like என்னும் பொத்தானை
அழுத்தவும். தற்போது தோன்றும் விண்டோவில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை
உள்ளிட்டு Send me Keycode என்னும் பொத்தானை அழுத்தவும். தற்போது லைசன்ஸ்
கீயானது உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பட்டிருக்கும். மேலும்
மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியும் அனுப்பட்டிருக்கும். அதை
பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
பின் Simpo PDF மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். லைசன்ஸ் கீயை
பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன்
செய்து ADD PDF(s) என்னும் பொத்தானை அழுத்தி பிடிஎப் பைலை
உள்ளினைத்துக்கொள்ளவும். கன்வெர்ட் செய்யப்படவேண்டிய பைல்பார்மெட்டை தேர்வு
செய்யவும். வேர்ட் மற்றும் டெக்ஸ்ட் பைல் பார்மெட்கள் ஆகும். அடுத்து
கன்வெர்ட் செய்து சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும். பின் Convert
என்னும் பொத்தானை அழுத்தி கன்வெர்ட் செய்யவும். சில மணி நேரங்களில்
உங்களுடைய பிடிஎப் பைலானது வேர்ட் பைலாக நீங்கள் குறிப்பிட்ட இடத்தில்
சேமிக்கப்பட்டிருக்கும்.
No comments:
Post a Comment