இந்த பதிவில் ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் முறைகள் பற்றி பார்ப்போம்.
ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி ?
ஏற்றுமதி துறையில் ஈடுபட நினைக்கும் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது.
காரணம் இங்கு எல்லோருக்கும் ஆங்கிலத்தில் பேசவோ, எழுதவோ தெரிந்திருக்கும்
என்று கூற முடியாது. அதற்காக ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும்தான் ஏற்றுமதி
செய்ய முடியும் என்று நினைத்து விடாதிர்கள்.
ஆங்கிலம் என்பது நம் அறிவு சம்பதப்பட்ட விஷயம் ஒன்றுமல்ல. மற்ற மொழிகளைப் போன்று ஒரு சாதாரண மொழி அவ்வளவுதான்.
எனவே ஆங்கிலம் தெரியவில்லையே என்று யாரும் கவலைப்படாதீர்கள்.
எனவே ஆங்கிலம் தெரியவில்லையே என்று யாரும் கவலைப்படாதீர்கள்.
நண்பர்கள் இருவர் ஆங்கிலத் திரைப்படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அதில் சிறுவன் ஒருவன் அபாரமாய் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தான்.
அதனைப் பார்த்துக் கொண்டிருந்த இரு நண்பர்களும் பேசிக்கொண்டார்கள்,
அதனைப் பார்த்துக் கொண்டிருந்த இரு நண்பர்களும் பேசிக்கொண்டார்கள்,
“இந்த பொடிப்பையன் இங்க்லீஷ்ல என்னமா பேசுறான்...” என்று.
கேட்பதற்கே நகைச்சுவையாக இருக்கிறதல்லவா ? இதைப்போல்தான் இங்கு பலரும் நினைக்கிறார்கள்.
அமெரிக்காவில் பிறந்த சிறுவன் ஆங்கிலத்தில்தான் பேசுவான் காரணம் அதுதான்
அவனின் தாய்மொழி. அதைப்போல்தான் இங்கு தமிழ் நமக்கு தாய்மொழி.
எனவே, இங்கு மொழியும், அறிவும் வெவ்வேறு என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
எனவே, இங்கு மொழியும், அறிவும் வெவ்வேறு என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
இவ்வளவு ஏன், நம் தமிழ் மொழியை எடுத்துக்கொள்ளுங்கள் 247 எழுத்துக்கள்.
இதையே நம்மால் எழுதவும், பேசவும் முடியும் போதும் ஆங்கிலத்தைப் பாருங்கள், மொத்தமே வெறும் 26 எழுத்துக்கள்தான் இதை மட்டும் நம்மால் எழுதவும், பேசவும் முடியாதா என்ன ?
இதையே நம்மால் எழுதவும், பேசவும் முடியும் போதும் ஆங்கிலத்தைப் பாருங்கள், மொத்தமே வெறும் 26 எழுத்துக்கள்தான் இதை மட்டும் நம்மால் எழுதவும், பேசவும் முடியாதா என்ன ?
இங்கு முடியாத காரியம் என்று ஒன்றுமேயில்லை. எனவே முயலுங்கள் நிச்சயம் உங்களாலாலும் முடியும்.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்
இது வள்ளுவரின் வாக்கு.
இங்கு பிறக்கும்போதே நாம் யாரும் எதையும் கற்றுக்கொண்டு பிறக்கவில்லை. பிறந்த பின்தான் கற்றுக்கொள்கிறோம்.
உளறுவதை விட்டுவிட்டு, முதலில் சொல்ல வந்ததை சொல் என்கிறீர்களா ?
ஒன்றுமில்லை, முடிந்தவரை ஆங்கிலம் கற்றுக்கொள்ள முயலுங்கள் அவ்வளவுதான்.
ஒன்றுமில்லை, முடிந்தவரை ஆங்கிலம் கற்றுக்கொள்ள முயலுங்கள் அவ்வளவுதான்.
அதற்காக ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும்தான் ஏற்றுமதி செய்ய முடியும்
என்றில்லை. ஆங்கிலம் தெரிந்திருந்தால் இன்னும் நமது பணியை சற்று சிறப்பாக
செய்யலாம்.
எனவேதான் சொல்கிறேன், முடிந்தவரை ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் என்று. சரி, பதிவுக்கு வருவோம்.
ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி ?
இன்றைய உலகில் ஆங்கிலத்தில் கடிதம் எழுத நீங்கள் ஆங்கிலத்தில் புலமை
பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆங்கிலம் பற்றி ஓரளவு
தெரிந்த்திருந்தாலே போதும்.
நீங்களும் ஆங்கிலத்தில் கடிதம் எழுதலாம்.
எப்படி என்கிறீர்களா ? வழி இருக்கிறது சொல்கிறேன்.
ஏற்றுமதி துறையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சான்றிதழ்களும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ICC - International Chamber of Commerce - ஆல் வரையருக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏற்றுமதி துறையில் எழுதப்படும் கடிதங்கள் இப்படித்தான் இருக்க
வேண்டும் என்று எந்த ஒரு வரைமுறையும் இல்லை. இது ஒவ்வொருவருக்கும்
மாறுபடும்.
இதனை ஆங்கிலத்தில் Writing Style என்று சொல்வார்கள்.
இதனை ஆங்கிலத்தில் Writing Style என்று சொல்வார்கள்.
ஏற்றுமதி துறையில் பொதுவாக கடிதம் எழுதும் முறைகள் பற்றியும், அவைகளின் மாதிரிகளையும் வரும் பகுதிகளில் தருகிறேன்.
அதற்கு முன் சொல்ல வந்ததை முதலில் சொல்லி விடுகிறேன்.
இந்த பதிவில் ஆங்கிலத்தில் எழுதப்படும் பல வகையான கடிதங்களின் மாதிரிகள் அடங்கிய ஒரு அருமையான மென்பொருளைப் உங்களிடம் அறிமுகம் செய்கிறேன்.
4001 Business, Sales & Personal Letters
இந்த மென்பொருளின் பெயருக்கு ஏற்றார்போலவே இதில் ஆங்கிலத்தில் எழுதப்படும் பல வகையான கடிதங்களின் மாதிரிகள் மொத்தம் 4001 உள்ளது.
மேலும் இதனைப் பயன்படுத்துவதும் மிகமிக எளிது.
தரவிறக்கம் செய்ய கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
நன்றி ! நன்றி !! நன்றி !!!
அண்மையில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற இலவச ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நிகழ்ச்சியை அமைத்துக்கொடுத்த தடம் அறக்கட்டளை நிறுவனத்திற்கும் ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் சிரம் தாழ்ந்த நன்றி ! நன்றி !! நன்றி !!!
அன்பு நண்பன் – பி.சி.கருப்பையா
No comments:
Post a Comment