Monday, September 9

பிபிஎப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்

பிபிஎப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்பிபிஎப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள் சென்னை: வளமான வருங்காலத்தை உருவாக்குவதற்கு திட்டமிட்ட மற்றும் தொடர்ச்சியான
சேமிப்பை கடைபிடிக்க வேண்டியது அவசியமான விஷயமாகும். இவ்வகையான சேமிப்புகளில் பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (பிபிஎப்) என்ற திட்டம் நீண்ட கால முதலீடுகளுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. மிகவும் பாதுகாப்பானதாகவும், அரசு சார்ந்ததாக இருப்பதாலும், அற்புதமான வரி சேமிப்பு வசதிகள், கடன் வசதிகள் மற்றும் குறைவான பராமரிப்பு செலவு ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் அனைத்து வகையான முதலீட்டாளர்களுக்கும் மிகவும் ஏற்ற திட்டமாக பிபிஎப் உள்ளது. இந்த பிபிஎப் திட்டத்தை உங்களுக்கு லாபகரமான விஷயமாக பயன்படுத்திக் கொள்ள கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்களை முதலீட்டு யோகி உங்களுக்கு இங்கே தெளிவு படுத்துகிறார். 1. பிபிஎப் கணக்கை தொடங்க 100 ரூபாய் போதும்! தனிநபர்கள், தொடர்ச்சியான வருமானமுள்ள மாத சம்பளக்காரர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்கள் என அனைத்து தரப்பினருமே 100 ரூபாயை ஆரம்ப வைப்புத் தொகையாக வைத்து பிபிஎப் கணக்கை தொடங்க முடியும். ஸ்டேட் பாங்க் ஆஃப் (SBI) இந்தியா அல்லது அதன் தொடர்புடைய எந்தவொரு கிளைகளிலும் பிபிஎப் கணக்கை தொடங்கலாம். பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை பிபிஎப் கணக்கை வழங்கும் பிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளாகும். மேலும், பொது அஞ்சலகங்களும் பிபிஎப் கணக்கை வழங்கும் இடங்களாக உள்ளன. மேலும், தனிநபர்கள் வயது வராத குழந்தைகள் மற்றும் காப்பாளர்களால் பராமரிக்கப்படும் குழந்தைகள் ஆகியோரின் பெயரிலும் பிபிஎப் கணக்கை தொடங்க முடியும் 2. பிபிஎப்-க்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வைப்பு அளவுகள் உண்டு பிபிஎப் கணக்கில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500/- ஐ முதலீடு செய்ய வேண்டியது அவசியம். அதேபோல, ஒரு நிதியாண்டில் செய்யப்படக் கூடிய அதிகபட்ச முதலீடாக ரூ.100,000 உள்ளது. இந்த முதலீடுகளை ஒரே சமயத்திலோ அல்லது பல்வேறு தவணைகளிலோ (ரூ.10-ன் மடங்குகளில்) செலுத்த முடியும். நீங்கள் ஒரு நிதியாண்டில், பல்வேறு தவணைகளில் பல்வேறு அளவுகளினாலான பணத்தை முதலீடு செய்தாலும், அது 12 தவணைகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு நிதியாண்டில் செய்ய வேண்டிய குறைந்தபட்ச நிதியை முதலீடு செய்யாமலிருப்பது உங்கள் கணக்கிணை முடிக்க வழி வகுக்கும். அப்போது அந்த குறிப்பிட்ட கணக்கில் வட்டி தொடர்ச்சியாக அதிகரிக்கப்படும். எனினும், வரையறுக்கப்பட்ட இயல்புநிலை கட்டணத்தை, சந்தா நிலுவைகளுடன் செலுத்துவதன் மூலம் அந்த கணக்கை மீண்டும் சந்தாதாரர் தொடர முடியும். 3. பிபிஎப் வட்டி விகிதம் கணக்கிடப்படும் முறை பிபிஎப் கணக்கின் வட்டி விகிதம் அந்தந்த மாதத்தின் 5-ம் தேதி முதல் கடைசி தேதிக்குள் இருந்த குறைந்தபட்ச தொகையைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. எனவே, உங்களுடைய முதலீடுகளை 1 முதல் 5-ம் தேதிகளுக்குள் பிபிஎப் கணக்கில் போடுவது உங்களுடைய வருமானத்தை அதிகரிக்கும். வருடத்திற்கு ஒருமுறை கூட்டப்படும் வட்டியானது, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ம் தேதி கணக்கில் வரவு வைக்கப்படும். 4. பிபிஎப் பணத்தை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே எடுத்தல் பிபிஎப் கணக்கில் உள்ள மொத்த தொகையுமே அதன் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு பின்பு தான் எடுக்க முடியும். எனினும், நிதிச் சிக்கல் ஏற்படும் காலங்களில் அந்த தொகையில் ஒரு பகுதியை சில வரையறைகளுக்குள் எடுக்க முடியும். அதாவது, 7வது ஆண்டிலிருந்து, பிபிஎப் கணக்கில் உள்ளதொகையின் ஒரு பகுதியை வருடத்திற்கு ஒரு முறை எடுக்க முடியும். மேலும், அந்த தொகையானது நான்காவது ஆண்டின் முடிவில் உள்ள தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது அல்லது அதற்கு முந்தைய ஆண்டில் கணக்கில் இருக்கும் தொகையில் 50 சதவீதத்திற்கு குறைவாகவோ இருக்கக் கூடாது. இந்த இரண்டில் எந்த அளவு குறைவாக உள்ளதோ அந்த அளவு தொகையை மட்டுமே எடுக்க முடியும். கணக்கின் உரிமையாளர் இறந்து விடும் நேரங்களில் பிபிஎப் கணக்கில் உள்ள தொகையை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாக எடுக்க முடியும். 5. பிபிஎப் பல்வேறு வரி சேமிப்பு வசதிகளையும் தருகிறது பிபிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80சி-ன் கீழ் வரி விலக்கு உண்டு. மேலும், பிபிஎப் கணக்கில் கிடைக்கும் மொத்த முதிர்வு தொகை மற்றும் அதற்கு வழங்கப்படும் வட்டி ஆகியவற்றிற்கு வரி கிடையாது. வட்டிகளின் மீதான வரி விலக்கு மட்டுமல்லாது, முதலீடுகளுக்கு சொத்து வரியிலிருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளது. 6. கடன் வேண்டுமா? பிபிஎப் இருக்கு சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீங்கள் உங்களுடைய பிபிஎப் கணக்கு முதலீட்டிலிருந்து கடன்களையும் பெற முடியும். இந்த கடன்களை மூன்றாம் ஆண்டின் முடிவிலிருந்து ஆறாவது ஆண்டு வரையிலும் பெற முடியும். அதிகபட்சம் 25 சதவீதம் வரையிலான வைப்புத் தொகையில் 2-வது ஆண்டின் இறுதிக்கு முன்னதாக உடனடியாக வரும் ஆண்டில் கடன் பெற முடியும். இந்த கடன்கள் 24 மாதங்களில் கட்டி முடிக்கப்பட வேண்டும். இந்த கடனுக்கான வட்டி விகிதமாக பிபிஎப் நிதிக்கு அப்போது இருக்கும் வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். நீங்கள் 3 முதல் 6-வது ஆண்டுகளுக்குள் இருக்கும் வேளைகளில் ஏற்கனவே வாங்கியிருந்த கடனை முழுவதுமாக செலுத்தி இருந்தால் இரண்டாவது முறை கடன் பெற தகுதியுடையவர்களாக ஆகி விடுவீர்கள். மேலும், செயல்பாட்டில் இல்லாத மற்றும் இடையில் நிறுத்தப்பட்ட கணக்குகளுக்கு கடன் பெறும் தகுதி இல்லை. 7. பிபிஎப் கணக்கை 15-வது ஆண்டிற்கு பிறகும் தொடர்தல் பிபிஎப் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களுடைய கணக்கினை 15 ஆண்டுகளுக்கும் மேலாகவும் கூட தொடரலாம். அதனை 5 ஆண்டுகள் பிரிவுகளாகவோ அல்லது 15 ஆண்டுகளாகவோ மீண்டும் தொடர முடியும். இந்த கணக்கு முடியும் வரையிலும், நிலுவையிலுள்ள கணக்கிற்கு பிபிஎப் நிதியின் படி வட்டி விகிதம் அந்த கணக்கு முழுமையாக முடிக்கப்படும் வரை வரவு வைக்கப்படும். பிபிஎப் கணக்கு காலம் முடிந்த பின்னர், புதியதாக முதலீடுகள் இல்லாமல் தொடர்ந்து வரும் போது, அந்த தொகையிலிருந்து எந்தவொரு தொகையையும், எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் எடுக்க முடியும். எனினும், ஒரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அவ்வகையில் பணத்தை பிபிஎப் கணக்கில் இருந்து எடுக்க முடியும். நீங்கள், 15 ஆண்டுகள் முடிந்த பின்னரும், உங்கள் முதலீடுகளை தொடரும் பட்சத்தில் அதிகரிக்கப்பட்ட ஒவ்வொரு 5 ஆண்டுகளின் துவக்கத்திலும் 60 சதவீத தொகையை எடுக்கும் வசதிகளும் உண்டு.

No comments:

Post a Comment