Monday, September 9

சமையல் குறிப்பு – பிடி கொழுக்கட்டை (விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்)

தே.பொருட்கள்:

அரிசிமாவு – 2 கப்
வெல்லம் – 1 1/2 கப்
வறுத்த எள் – 1 டேபிள்ஸ்பூன்
வறுத்த பாசிப்பருப்பு – 1/4 கப்
தேங்காய்த் துறுவல் – 1/2 கப்
உப்பு- 1 சிட்டிகை
செய்முறை :
*வெல்லத்தை சிறிது நீர் விட்டுக் காய்ச்சி, வெல்ல‍பாகாக பக்குவ மாக எடுத்து அதை மண்ணி  ல்லாமல் வடிகட்ட வேண்டும்
*அரிசிமாவுடன்  தேங்காய்த் துறுவல், எள், பாசிப்பருப்பு, வடிகட்டிய வெல்லம் மற்றும் தேவையான‌ அளவு உப்பு போட்டு நன்றாக கலந் து, அதை உங்கள் கைகளைக்கொண்டு  கெட்டியாக பிசைய வேண் டும்.
*அதை உருண்டைகளாகவோ அல்ல‍து நமது உள்ளங்கையில் வை த்து விரல்களால் அழுத்தி பிடி கொழுக்கட்டை பிடித்து, இட்லி குண் டானில் நடு தட்டில் ஒரு துணி விரித்து, அதில் நீங்கள் செய்து வத்த‍ பிடி கொழுக்கட்டையை போட்டு மூடி வைத்துவிட வேண்டும் போ துமான அளவு கால அவகாசம் கொடுத்து, இட்லி எப்ப‍டி  ஆவியில் வேகிறதோ அதைப்போன்றே இதுவும் ஆவியில் வேகும். அதன் பின் இட்லி குண்டானின் மூடியை திறந்து சுவையான சூடான பிடிக் கொழுக்கட்டை தயார்.  கூடுதல் சுவைக்கு தேங்காய்த்துறுவலை சேர்க்கலாம்.

No comments:

Post a Comment