தொலைக்கட்சிகளில்
வரும் விளம்பரங்கள் எல்லாம் தன்னுடைய வியாபரத்தினை பெருக்கும் யுத்தியில்
அதீத கதியில் ஏதேதோ விசயங்களை முன்னிறுத்தினாலும், பெரும்பாலும் காமத்தினை
முன்னிறுத்தி ஆபாசமாய் ஏதேதொ தத்து பித்துவென்று காட்டுவது வன்மையாக
கண்டிக்கத்தக்கது.
எங்கே
இருக்கிறது இதற்கான வரைமுறைகளும் நியதிகளும் என்று ஆராய்வதற்கு முன்னால்
நாம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியிருக்கிறது இந்த விளம்பரங்கள்
விசயத்தி. இது பற்றிய ஒரு பார்வையாய் விரிகிறது இந்த கட்டுரை....
விஞ்ஞான வளர்ச்சியினால் விளம்பரங்களின் தாக்கம் அதிகமாகியுள்ளது. விளம்பரங்களால் சூழப்பட்டிருக்கிறோம்.சுவரொட் டியி்ல்
ஆரம்பித்து தொலைக்காட்சி,ப்ளக்ஸ்,இணைய விளம்பரங்கள்,அலைபேசி விளம்பரங்கள்
என ஏதாவது ஒரு வகையில் நம்மை வந்தடைகிறது.இப்பொழுதெல்லாம் விளம்பர
படங்களையும் சினிமா தரத்திற்கு எடுக்கின்றனர்.ஒரு முழு சினிமாவில்
சொல்லப்படும் கருத்தை சற்று சுருக்கி குறும்படங்களாக எடுத்தனர்.அதையும்
சுருக்கி அதே கருத்தை சில நொடிகளில் விளம்பர படமாக மாற்றி நம்மை ரசிக்க
வைக்கின்றனர்.மரபுக்கவிதை புதுக்கவிதையாக மாறி அது இப்பொழுது ஹைக்கூ
கவிதையாக மாறி உள்ளது போல...
திரைத்துறையினரின்
விசிட்டிங்கார்டாக இன்று விளம்பரப்படங்கள் இருக்கிறது.இப்போது பிரபலமாக
இருக்கும் அனைவரும் ஆரம்பகாலங்களில் விளம்பரபடங்களில்
பணிபுரிந்துள்ளனர்.ஆ.ற்.ரஹ்மான் குறிப்பிடத்தக்கவர்.
நாம்
இன்று கழுகி்ன் கருத்துகளை கூட ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் அப்டேட்
செய்வதும் ஒருவகை விளம்பரமே.இதனால்,மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில்
விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது நோக்கம்.ஒட்டுமொத்த
பதிவுலகம்,ஊடகங்கள்,தொலைக்காட் சிகள் ஏன் மனித குலமே ஏதாவது ஒரு
வகையில் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள விரும்புவர்.ஆனால்,அதன்
நோக்கம்என்னவாக உள்ளது என்பது முக்கியமானது.சிரிக்கவும்,சிந் திக்கவைக்கவும்,பொழுதுபோக்கவு ம்,புதிய விஷயங்களை அறிந்து கொள்ளவும் பயன்பட்டால் நன்று.மாறாக,அது மனதை சஞ்சலப்படுத்தும்விதமாகவும்,அரு வருப்பையும் உண்டாக்கினால் அது தவறு.
நல்ல
விஷயங்களை பிரபலப்படுத்தும் விளம்பரங்களை ஊக்குவிப்பதில்
தவறில்லை.இன்றுள்ள தொலைக்காட்சிகளின் முக்கிய நிதி ஆதாரமே இந்த
விளம்பரங்கள்தான்.சினிமாவை விரும்பாத மக்கள் கூட தொலைக்காட்சிகள்
நிகழ்ச்சிகளையோ,செய்திகளையோ பார்ப்பார்கள்.நல்ல திரைப்படங்களை தேர்ந்து
எடுத்து பார்க்கும் வாய்ப்பு நமக்குண்டு.ஆனால்,நம் வீட்டுக்கூடத்தில்
தொலைக்காட்சியில் செய்திகளையே பார்த்துக் கொண்டிருந்தாலும் இடைவேளைகளில்
வரும் ஆபாச விளம்பரங்களை எப்படி எதிர் கொள்வது..?
சிரிக்க
வைக்கும் ரசிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும் விளம்பரங்களும் இருக்கத்தான்
செய்கின்றன.ஆனால்,அவை 50 சதவீதமே...மற்றபடி பெண்களை ஆபாசமாக
காட்டும்(அ)சித்தரிக்கும் விளம்பரங்களும்,இளைஞர்களை சஞ்சலப்படுத்தும்
விளம்பரங்கள் அதிகமாக உள்ளது.பிரபலமான சில சோப்பு நிறுவனங்களின்
விளம்பரங்களும்,வாசனைதிரவியங் களின் விளம்பரங்களை பார்க்கும்போது சினிமாவைப்போன்று இதற்கு ஏதும் சென்சார் இல்லையோ என்ற அளவிற்கு ஆபாசம் நிறைந்து காணப்படுகிறது.
நகைச்சுவைக்காக
சொன்னாலும் ஆண்கள் குளிக்கவே மாட்டார்களோ என்ற தாழ்வு மனப்பான்மை
உருவாக்கும் விதத்தில் பெண்களை அரைகுறை ஆடையுடன் இந்த விளம்பரங்களில்
தோன்ற வைக்கின்றனர்.திராவிடநிறமான கருப்பை பெண்கள் வெறுக்கும் அளவிற்கு
முகச்சாய விளம்பரங்கள் இன்று அதிகளவில் காட்டப்படுகிறது.மதுவின் தீமையை
வெளியே உரத்துப்பேசும் அரசியல்வியாதிகள் தங்களுக்கு சொந்தமான
தொலைக்காட்சிகளில் அந்த விளம்பரங்களை ஒளிபரப்பாமல்
இருப்பதில்லை.இலட்சக்கணக்கான் இளைஞர்களின் ஆதர்சமாக விளங்கும்
நடிகர்களோ,விளையாட்டுவீரர்களோ அந்த இளைஞர்களின் உடல்நலத்தை கெடுக்கும்
பொருட்களின் விளம்பரங்களில் நடிப்பதற்கு தயங்குவதில்லை.
விளமபரங்கள்
எல்லாம் வியாபார உத்தி என்பதை நாம் அறியாமலில்லை என்றாலும் அவற்றிலொரு
வரைமுறை இருத்தல் நலம். பெரும்பாலும் விளம்பரங்கள் குழந்தைகளுக்கு
பிடித்தமானவையாக இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்போதெல்லாம்
வரும் நிறைய ஆபாச விளம்பரங்களை பார்ப்பதன் மூல என்ன ஏதென்று அறியாத வயதில்
திருட்டுத்தனமாக ஏதேதோ எண்ணங்கள் நுழைந்து ஆழ்மனதில் தங்கிப் போய்
பின்னாளில் எதிர்மறையான விளைவுகளைகொடுக்கிறது.
விளம்பரங்களை
தணிக்கை செய்வதில் சரியான வரைமுறைகள் வருவதோடு வீட்டில் இருக்கும்
பெரியவர்களும் குழந்தைகளை கண்காணித்தலும் அவசியமாகத்தானிருக்கிறது....!
No comments:
Post a Comment