நோக்கியாவுக்கு
பிடித்தபாட்டு எது தெரி யுமா? எ சோக கதைய கேளு தாய்குல மே! என்ற
பாட்டுதான் பாடிக் கொண்டிரு க்கிறது. நான் சொல்வது சத்தியமா உண்மை
தாங்க!ஒரு காலத் தில் எப்படி இருந்த நிறுவ னம், இப் போது இப்படி ஆகி
விட்டது என்று சொல்லும் அளவு க்கு நோக்கி யா தள்ளப்பட்டுள்ளது. எங்கு
பார்த்தா லும் செம்சுங், அப்பிள் பற்றியே பேசப் படுகின்றது.
இதுமட்டுமன்றி நோக்கியாவின் கோட்டையான வளரும் சந்தைக ளிலும் அண்ட்ரோய்ட் வரவேற்பைப் பெறத்தொடங்கியுள்ளது.
அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகள் குறைந் த விலைகளிலும் கிடைக்கின்றது அதனுடன் இயக்குவதற்கும் இலகு வாக உள்ளது.
இவை
நோக்கியாவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. விண் டோஸ் மூலம் இயங்கும் கையட
க்கத்தொலைபேசிகளை குறைந் த விலையில் அறிமுகப் படுத்தத் தொடங்கியுள்ள
போதிலும் அது எந்தளவு தூரத்தி ற்கு பாவனை யாளர்களின் உபயோகத்திற்கு இலகுவாக
இருக்கப்போகி ன்றது என்பது சற்று சந்தேகத்துக்குரியது.
இந்நிலையில் இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டுப் பகுதி யின் நிதி யியல் அறிக்கைகளை நோக்கியா வெளியிட்டுள்ளது.
எதிர்ப்பார்க்கப்பட்டதைப் போல இரண்டாம் காலாண்டுப் பகுதியி லும் நோக்கியாவால் பெரியள வில் சோபிக்க முடியாமல் போ யுள்ளது.
இரண்டாம் காலாண்டுப் பகுதியில் சுமார் 7.4 மில்லியன் லுமியா போன் களை நோக்கியாவால் விற்பனை செய்ய முடிந்துள்ளதுடன் இது முத லாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது 32 % அதிகரிப்பாகும்.
லுமியா
வரிசை போன்களின் விற்ப னை அதிகரித்துள்ள போதும் மொ த்த நோக்கியா போன்களின்
விற்பனை குறைவடைந்துள்ளதுடன் இதனால் 115 மில்லியன் யூரோக்கள் நட்டமேற்
பட்டுள்ளது.
எனினும்
லுமியா விண்டோஸ் போன் களின் உதவியுடன் நோக்கியா வின் டிவைஸ் மற்றும்
சர்விஸ் பிரிவான து 2.7 பில்லியன் யூரோக்க ளை பெற்றுக்கொண்டுள்ளது இது
கடந்த வருடத்துடன் இதே காலாண் டு ப்பகுதியுடன் ஒப்பிடும் போது 24 % வீழ்ச்சியாகும்.
குறைந்த விலை ‘ஆஷா 501′ போ னானது மொத்த விற்பனையில் நம் பிக்கையளிப்பதாக நோக்கியா தெரிவிக்கின்றது.
அதேபோல்
நோக்கியாவின் லுமி யா 520 அமெரிக்கா, ஐக்கிய இராச்சி யம், சீனா போன்ற
நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக நோக்கியா தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment