Saturday, September 14

மாத விலக்கு நின்ற பெண்கள், செக்ஸ் உறவில் ஈடுபட முடியும்!


தாம்பத்ய ஈடுபாடு என்பது உடலோடு தொடர்பு டையது மட்டுமல்ல அது மனதோடும் தொடர் புடையது. ஆர்வம் இருந்தால் மட்டுமே அக் கறை காட்ட முடியும். அதுவும் பெண்களுக்கு 45 வயதாகிவிட்டாலே மாத விலக்கு நிற் கும் கால கட்டம் தொடங்கிவிடும். இது உடல் ரீதியாக சில பாதிப்புகளை ஏற்படு த்தினாலும் மனரீதியாகவும் தாம்பத்ய த்தில் இருந்து தள்ளி இருக்கச் சொல்லு ம்.
மாத விலக்கு நின்று விடும் காலகட்டத்தை எட்டியதும் செக்ஸ் இனி அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனா ல் உண்மை அப்படி இல்லை. மாத வில க்கு நின்று விடும் கால கட்டத்தில் உள்ள பெண்க ளும் தயங்கா மல், தடையின்றி உறவு கொள்ளலாம் என்கின்றனர் உள வியல் வல்லுநர்கள்.
சுதந்திர உணர்வு
மாத விலக்கு நின்றுவிடும் காலத்தில் பெண்மைக்குறிய மாத சுழற்சி நின்றுவிடும். எனவே அந்த இடைஞ்சல் கிடையது. எனவேதான் மாத விலக்கு நின்றாலும் கூட செக்ஸை முன்பு போலவே மகிழ்ச்சிகரமாக, ரம்யமாக அனுபவிக்க முடியும் என்கிறா ர்கள் மருத் துவர்கள். இன்னும் சொல்லப் போனால், முன்பைவிட சுதந்திரமாக, எந்தவித தடையும், சங்கடமும் இல்லா மல் அனுபவிக்க முடியும் என்பது அவர்க ளின் கருத்து.
சோர்வை விரட்டும்
மாத விலக்கு நின்றுவிடும் கட்டத்தை எட்டும் பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வு ஏற்படுவது இய ற்கை. அந்த சோர்வை விரட்ட செக்ஸ் அருமருந்தாக பயன்படுகிறது என்பதே உண்மை. புத்துணர்ச்சி யுடன் தொடர்ந்து நல்லபடியாக நாம் செயல் பட, நல்ல எழுச்சியுடன் மனம் திகழ செக்ஸ் அவசியம் தேவை என்ப து மரு த்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர் களின் கருத்து. மேலும் நம்மை என்று ம் போல இள மையுடன் திகழவு ம் மாத விலக்கு நின்ற பிந்தைய செக் ஸ் உத வுகிறதாம்.
உறவுக்கு வேட்டு
மாதவிலக்கு நின்றுவிட்டால் செக் ஸ் உணர்வுகள் வற்றிப்போய் விடும் , முன்புபோல ஒத்துழைக்க முடியாது என்று பல பெண்கள் தவறாக கரு துகின்றனர். ஆனால் இது மூட நம்பி க்கையே என்று உளவியல் வல்லுந ர்கள் தெரிவிக்கின்றனர். உணர்ச்சி கள் எங்கும் ஓடிப்போகாது, உங்களுக் குள்ளேயேதான் அது இருக்கும். அதை முன்புபோலவே நீங்கள் வெளி ப்படுத்தி அதற்கு சிறந்த வடிகால் தருவது அவசியம் என்கிறார்க ள்.
அதிகமாகும் உற்சாகம்
மாதவிலக்கு நின்றுவிடும் பெண்க ளுக்கு இனி எதற்கு செக்ஸ் என்ற மன ரீதியான முடிவுக்கு வந்து விடு வதால், தங்களது கணவர்கள் அருகி ல் வந்தாலே இறுக்கமான நிலையுட ன் ஒத்துழைக்கிறார்கள். அப்போது தான் பிரச்சினை வரும். வலியுடன் கூடிய செக்ஸ் அனுபவமாக அது மாறி இருவருக்குமே மன வருத்தத்தையும், அதிருப்தியையும், எரிச்ச லையும் கொடுக்கும் கசப்பான அனுபவமாக மாறிப் போய் விடுகிறது.
மாத விலக்கு நின்றுவிடும் சமயத்தில் டெஸ்டோஸ் டிரான் சுரப்பு அதிகமாகவே இருக்குமாம். இது செக்ஸ் உணர்வுகளை அதிகப்படுத்த உதவுவது என்பது குறிப்பிட த்தக்கது. ஆனால் பெரும் பாலான பெண்கள் மன ரீதி யாக துவண்டு போவதால் இதை சரிவர கவனிப்பதில் லை என்கின்றனர் மருத்துவர்கள். எனவே மனதை உற்சாகமாக்கினால் உறவில் உற்சாகமாக ஈடுபடலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ள னர்.
நிபுணர்களின் ஆலோசனை
மாத விலக்கு நின்ற பெண்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதாவது இந்த சமயத் தில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு இல்லாம ல் போய் விடும். இதனால் பெண்ணு றுப்பில் வறட்சித் தன்மை காணப்ப டும். இதனால் ஆர்கஸம் ஏற்படுவ தில் தாமதமோ அல்லது சிரமமோ இருக்கலாம். இதனால் உறவின்போ து வலி ஏற்படுவது இயற்கை. ஆனால் இதற்கும் கூட நிவாரணங்கள் உள்ளன. மருத்துவர்கள் பரிந்து ரைக்கும் ஜெல் அல்லது லூப்திகன்ட்களைப் பயன்படு த்தினால் உறவு எளிதாகும். மேலும் நீண்ட இடைவெளி விட்டு விடாமல் தொடர்ந்து செக்ஸ் உறவை மேற்கொ ண்டு வந்தால் வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
இரண்டாவது இன்னிங்க்ஸ்
ஊட்டச்சத்து நிறைந்த உணவு, போதிய உடற்பயிற்சி, தியானம், தே வையான மருந்துகள் என திட்டமி ட்டுக் கொண்டால் 40 வயதைத் தாண் டிய பிறகும் கூட நார்மலான செக்ஸ் வாழ்க்கையைத் தொடர முடியும். தேவைப்பட்டால் மனநல நிபுணர்க ளின் ஆலோசனைகளையும் கூட பெறலாம். மாத விலக்கு நின்றுபோ கும் மங்கையர் மனரீதியாக துவண் டு விடாமல் மகிழ்வுடன் இரண்டாவது இன்னிங்ஸையும் சிறப்பாக தொடருங்கள் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

No comments:

Post a Comment