Saturday, September 14

அழகான கூந்தல் என்பது பெண்மையின் அம்சம்

உங்களுக்கும் அழகான பட்டுப்போன்ற ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா ? அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்:
சிக்கில்லாத கூந்தல்
கூந்தலை எப்படித்தான் பராமரித் தாலும் சிக்கு ஏற்படுவது இயல்பு. எனவே தலைக்கு குளிக்கும் முன் பாக கூந்தலை நன்றாக சிக்கல் இல்லாமல் சீவவேண்டும். முடியை சீவுவத ற்கு அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். நீங்கள் உபயோகிக்கும் சீப்புகளை அடிக்கடி சோப்புப்போ ட்டு நன்றாகக் கழுவவும். அதில் அழுக்கிருந்தால் உங்கள் முடியின் பளப்பளப்பை மங் கச் செய்யும்.
பளபளப்பான கூந்தல்
நன்றாக மசித்த வாழைப்பழத்தை 15 நிமிடங் கள் முடியில் பூசி வைத் து பின்பு ஷாம்பூவால் அதை கழுவி விடவும். இது உலர்ந்த கூந்தல் இருப்பவருக்கு மிகவும் நல்லது.
ஒரு முட்டை, ஒரு வெள்ளரிக்காய், மற்றும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் இவற் றை நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொண் டு, 10 நிமிடங்கள் கூந்தலில் தடவி ஊற வைக் கவும். பிறகு தலைமுடி யைக் கழுவவும். இது உங்கள் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்கும்.
தலைக்கு ஷாம்பு போடும்போது லைட்டாக உபயோகிக்கவும். நன் றாக நுரைபோக தண்ணீர்விட்டு அலசவேண்டும். இதில் முக்கி யமானது ஷாம்பு போட்டு தலையை அலசும்போதெல்லாம் கண்டி ஷனர் உபயோகிக்க வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தி யுள்ளனர்.
மென்மையாக கையாளுங்கள்
தலைக்கு குளித்தபின் ஈரமான கூந்தலை அடித்து உலர்த்தக் கூ டாது. டவலால் கூந்தலை இறுக் கக்கட்டி தண்ணீரை உறிஞ்ச விடு ங்கள். 5 நிமிடம் கழித்து மென் மையாக உலர்த்தவும். முக்கியமான அம்சம் முடிகாயும் முன்பே விரல்களால் சிக்கு களை நீக்கவும்.
ஹேர் டிரையர் வேண்டாம்
கூந்தலை காயவைக்க அடிக்கடி ஹேர் டிரையர் உபயோகிக்க வே ண்டாம். ஒருவேளை உபயோகிக்க நேரும்பட்சத்தில் ஒரே இடத்தில் அதி க  நேரம் காட்டுவதைத் தவிர்க்கவும். ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்க வும். முடியின் நுனிப்பாகத்தை விட, வேர்களில் ஹேர் ட்ரையரை நன்றா கக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவ தால் முடி உலர்ந்து உடையக் கூடும்.
தலைக்கு மசாஜ் செய்யுங்கள்
உங்கள் தலையை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால், முடி யைதலையில் தேய்ப்பதற்கு பெயர் மஸாஜ் அல்ல! உங்கள் விரல் நுனிகளால் தலையை மெதுவாக தேய்த்துவிடவும். இது உங்கள் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் உங்கள் முடி நீண்டதாக வும், ஆரோக்கியமாகவும் வளரும்.

கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படும் மூலிகைகள்

இன்றைக்கு கூந்தல் வளர்ச்சிக்கும், கூந் தலுக்கு நறுமணம் ஊட்டவும் எண்ணற் ற ஷாம்பு, கிரீம் என விற்பனைக்கு வந் துள்ளன. அவற்றின் வருகைக்கு முன்ன ரே பண்டைய காலத்தில் கத்தாளைச்சா று, பூந்திக்கொட்டை, கரிசலாங்கண்ணி, மருதாணி என எண்ணற்ற மூலி கைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஷாம்பு, சோப்பு போன்றவைகளில் பயன்படுத்த ப்படும் ரசாயனங்கள் ஒத்துக் கொ ள்ளா தவர்களுக்கு முடிகொட்டுவதை தவிர்க் கவும், கூந்தலின் வளர்ச்சிக்கும் இன் றைக்கும் அந்த மூலிகைகளை பயன் படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
வெந்தயம்
கூந்தலினை பட்டுப்போன்ற மென்மையாக்குவதில் வெந்தயம் சிற ந்த மூலிகையாகும். வெந்தயத் தை இரவு நேரத்தில் ஊறவைத்து காலையில் அதனை மைய அரை த்து தலையில் ஊறவைத்து குளிக் கலாம். இதனால் தலைக்கு குளிர் ச்சி ஏற்படும். கூந்தல் பட்டுப்போல மா று ம்.
மருதாணி
கூந்தலை கருமையாக்குவதில் மரு தாணி சிறந்த மூலிகை. இது இளந ரையை தடுக்கும். கூந்தலில் பொடு கு ஏற்படாமல் தடுக்கும். கூந்தலின் வேர் கால்களை வலுவாக்கி உதிர்வதை தடுக்கும்.
கற்றாழை
கற்றாழை சிறந்த மூலிகையாகும். கூந் தல், சருமம் போன்றவற்றினை பாதுகா க்க சிறந்த மூலிகையாக பயன்படுகிற து. கற்றாழையின் உள்ளிருக்கும் சாற் றை எடுத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்ந்து வழுக்கையானவர்களுக் கு புதிய முடி முளைக்க வாய்ப்புள்ளதா க மருத்துவர்கள் கூறுகின்றனர். கூந்த லின் வறட்சியை போக்கி மென்மையா க்குவதில் கற்றாலை முக்கிய பங்காற் றுகிறது.
கடுக்காய், நெல்லிப் பொடி
முடி உதிராமல் இருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். இதேபோல் கறுப்பு எள், நன்னா ரி, நீல வண்ண அல்லி. செம்பருத்தி, அதிமது ரம், இவைகளின் சாற்றை தலையில் தடவி வந்தால் முடி செழித்து, கருமையாக வளரு ம். கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி, இவற்றை பாலில் ஊற வைத்துக் குளி த்தால், முடி உதிர்வது நிச்சயமாக நிற்கும்.

No comments:

Post a Comment