Wednesday, September 4

ரூபாய் 15,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஜூன் 2013]



Cheap-Android-Phone-India-Featured
தினம் தினம் பல புதிய மொபைல் போன்கள் வெளியாகின்றன, பலருக்கு எந்த போனை வாங்குவது என்று குழப்பமாக இருக்கும். அதை போக்க இந்த மாதத்தின் சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள்
அதுவும் ரூபாய் 15,000 க்கும் குறைவாக உள்ளவற்றை இங்கே காண்போம். 
ஏற்கனவே 10,000 ரூபாய்க்கு குறைவாக உள்ள போன்கள் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் எழுதி இருந்தேன். தொடர்ந்து அதே போன்கள் இடம்பெறுவதை தவிர்க்க 10,000 ரூபாய் முதல் 15,000 வரை விலை உள்ள போன்களை பட்டியலில் சேர்க்கிறேன்.
  • பட்டியலில் உள்ள போன்கள் ஐந்தும் குறைந்த பட்சம் 5 MP கேமரா உள்ளவைகளாக தெரிவு செய்துள்ளேன்.
  • விலை Flipkart தளத்தில் இருந்து Update செய்யப்பட்டுள்ளது. தேதி 25-06-2013. மற்ற தளங்களில் விலை மாறுபடலாம்.
1. Micromax Canvas HD A116 - ரூ.12499Full Specifications
Micromax Canvas HD A116
இந்த பட்டியலில் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டிய போன். 5-inch LCD Capacitive Touchscreen, Android 4.1.2 Jelly Bean OS, 8 MP Main Camera, 2 MP Front Camera, 1.2 GHz Quad Core Processor, Dual SIM போன்ற அசத்தலான வசதிகளுடன் வருகிறது. அத்தோடு இனிமேல் சில Android OS Update – களும் இதற்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. மார்கெட்டில் நன்றாக போய்கொண்டிருக்கும் மொபைல்களில் இதுவும் ஒன்று.
2. XOLO Q1000 - ரூ.14999 - Full Specifications
XOLO Q1000
பட்டியலில் சரியாக 15,000 ரூபாய்க்கு கிடைக்கும் போன். 5-inch HD IPS Touchscreen, Android 4.2 Jelly Bean OS, 1.2 MP front camera, 2100 mAh பாட்டரி என்பதை தவிர மேலே சொன்ன Canvas HD A116 – யும் இதுவும் ஒரே வசதிகளுடன் வருகிறது . இதற்கும் மார்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் ஏதாவது பிரச்சினை என்றால் மிகக் குறைவான Service Center கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.
3. LG Optimus L7 II P715 – ரூ. 14990Full Specifications
LG Optimus L7 II
LG நிறுவனத்தின் புதிய வரவு இந்த போன். 4.3 inch Touchscreen, 1 GHz Dual Core Processor, 8 MP Camera, Dual Sim போன்ற வசதிகள் நன்றாக உள்ளன. ஆனால் 768 MB RAM தான் உள்ளது. இந்த விலைக்கு இது ஓகே என்றாலும் Micromax, Xolo நிறுவன போன்களுடன் ஒப்பிட்டால் இது குறைவு. ஆனால் சாம்சங் போன்களுடன் ஒப்பிட்டால் இது வாங்கலாம்.
4. Samsung Galaxy S Duos - ரூ. 10699 - Full Specifications
Samsung Galaxy S Duos
பட்டியலில் கடைசி என்றாலும் மார்க்கெட்டில் மிக மிக அதிகமாக விற்பனையாகும் போன்களில் இதுவும் ஒன்று. 4 inch TFT Capacitive Touchscreen, Dual Sim, 1 GHz A5 Processor, 5 MP Main Camera போன்ற அசத்தலான வசதிகளுடன் வருகிறது. இதிலும் 768 MB RAM தான் உள்ளது. ஆனால் இந்த விலைக்கு இது ஓகே.
5. Samsung Galaxy S Advance - ரூ.13999 - Full Specifications
Samsung Galaxy S Advance
கொஞ்சம் பழைய மாடல் என்றாலும் சமீபத்தில் Android 4.1.2 Jelly Bean Update பெற்றுள்ளது இந்த போனை இந்த பட்டியலில் இடம்பெற செய்துள்ளது. 5 MP Main Camera, 4-inch Super AMOLED Capacitive Touchscreen, 1 GHz Dual Core Processor போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்கள். இதிலும் 768 MB RAM தான் உள்ளது. மற்றபடி வாங்கலாம்.
மற்ற சில போன்கள்.
6. Karbonn S5 Titanium – ரூ. 11249Full Specifications
7. Xolo Q800 – ரூ. 11500 - Full Specifications
8. Sony Xperia J – ரூ. 11249Full Specifications
9. Lava Iris 504Q - ரூ. 13499 - Full Specifications
10. Micromax Canvas 2 Plus A110Q - ரூ. 12100Full Specifications
இது எனது பரிந்துரை மட்டுமே. உங்கள் பார்வையில் இந்த விலைப் பட்டியலில் வேறு போன்கள் இருந்தால் அவற்றை கீழே சொல்லுங்கள்.

No comments:

Post a Comment