Saturday, September 7

கிண்டியில் நவ.10இல் தொடக்கம் தொழில் தொடங்க பயிற்சி-வங்கிக் கடனுக்கு ஆலோசனை

சென்னை, அக்.28-கிண்டியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையத்தில், வரும் நவம்பர் 10ம் தேதி முதல் குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடங்குகின்றன.

செய்முறை பயிற்சி முகாமில் பயிற்சிகள் விவரம் வருமாறு:

காகிதப் பொருட் களான பேப்பர் கப், பேப்பர் பிளேட், பேப் பர் பேக்ஸ் தயாரிப்பு, உணவுப் பொருட் களான ஜூஸ், ஜாம், ஊறுகாய், பழச்சாறு கள், மசாலா, உடனடி உணவுப் பொருட்கள் தயாரிப்பு, சிறு ரசாய னப் பொருட்களான கிளீனிங் பவுடர், வாஷிங் பவுடர், சோப்பு ஆயில், பினாயில், அகர் பத்திகள், மெழுகு வர்த்தி, கற்பூரம், கம்ப் யூட்டர் சாம்பிராணி மற்றும் வீட்டு உப யோகப் பொருட்கள் தயாரிப்பு, பேக்கரி பொருட்களான கேக், பப்ஸ், குக்கிஸ், பிரட், பன், ரஸ்க் போன்ற பொருட்கள் தயாரிப்பு, மசாலா பவுடர்கள் தயா ரிப்பு, பரிசுப் பொருட் களான பொம்மை, நகை வேலைப்பாடுகள் செய்தல், அழகுக்கலை பயிற்சி, பேஷன் ஜீவன் மேக்கிங் ஆகியவை குறித்து பயிற்சி அளிக் கப்படும்.

தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், திட்ட அறிக்கை தயார் செய் தல், வங்கிக் கடன் பற்றிய தகவல்களும், ஆலோசனைகளும் பயிற்சியின் போது தரப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபால ரும் இந்த பயிற்சி வகுப்புகளில் சேரலாம்.

பயிற்சி முடிவில் இந்திய அரசின் சான்றிதழ் வழங் கப்படும். இந்த அறி விப்பை சிறு, குறு மற் றும நடுத்தர தொழில் கள் வளர்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment