Cricket Sports

அண்ட்ராய்டின் அடுத்த பதிப்பு அண்ட்ராய்டு KitKat என்று அழைக்கப்படும்

ஆன்டிராய்ட் நிறுவனம் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்யை வெளியிட்டது. இப்பொழுது தனது அடுத்த பதிப்பான ஓஎஸ்ன் பெயரையும் கூகுள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நெஸ்ட்ளே(nestle) நிறுவனத்துடன் கூகுள் இணைந்து ஆன்டிராய்ட் 4.4 KitKat மொபைல் ஓஎஸ்யை வெளியிட உள்ளது. இதை விட ஒரு நல்ல பெயரை எங்களால் கற்பனை செய்ய முடியவில்லை என ஆன்டிராய்டின் மார்கெட்டிங் டைரெக்டர் மார்க் வால்னெர்பெர்க் தெரிவித்துள்ளார்.

அண்ட்ராய்டு தலைவர் Sundar Pichai ,அண்ட்ராய்டு ஒரு பில்லியன் செயலாக்கங்களை கடந்து உறுதிப்படுத்தப்பட்டது மற்றும் அதன் அடுத்த பதிப்பான 4.4-ஐ அண்ட்ராய்டு KitKat என்று அழைக்கப்படுகிறது. Sundar Pichai, ஒரு பில்லியன் ஆண்ட்ராய்டு சாதனம் செயலாக்கங்களை கடந்து விட்டோம் என்று நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  உலகம் முழுவதும் உள்ள நம் ஆண்ட்ராய்டு பயனர் அனைவருக்கும்,  இது செய்வதற்கு உதவி புரிந்த வன்பொருள் உற்பத்தியாளர்கள், சிப் தயாரிப்பாளர்கள் மற்றும் கேரியர்களான வடிவமைப்பாளர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்கள் ஆகிய முழு அண்ட்ராய்டு சமூகத்திற்கும் பெரிய நன்றி' என்று கூறியுள்ளார்.

நெஸ்ட்ளே நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவரான Patrice Bula,  Google உடன் கூட்டாண்மை வைத்தது மீதான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், நாங்கள் உலகின் மிகவும் பிரபலமான மொபைல் தளத்தின் ஆண்ட்ராய்டு உடன் இந்த கூட்டாண்மை வைத்ததற்காக பெருமிதம் கொள்கிறோம் என்று Patrice Bula கூறியுள்ளார். அண்ட்ராய்டு KitKat பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், 50  மில்லியனுக்கும் மேற்பட்ட சிறப்பான முத்திரை பதித்த KitKat பார்கள் இந்தியா உட்பட 19 சந்தைகளில் கிடைக்கும். நிறுவனத்தில் எல்லோருக்கும் பிடித்த சாக்லேட்டின் பெயர் மட்டும் இடம் பெறாமல் இருந்தது அதனால் தான் இப்பொழுது அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என கூகுள் நிறுவனம் கூறியது.


மொசில்லா ஃபயர் ஃபாக்ஸ் தமிழில் வெளியாகிறது


சென்னை: இணைய தளத்தில் நாம் அதிகம் பயன்படுத்தக் கூடிய ப்ரெளசர் மொசில்லா ஃப்யர் பாக்ஸ்.  மொசில்லா ஃப்யர் பாக்ஸ் ப்ரெளசர் இனி தமிழிலேயே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கணிணி பயன்பாடும் இணைய பயன்பாடும் அதிகரிக்க மென்பொருட்களின் கட்டளை சொற்களை தமிழுக்கு மாற்றும் முயற்சிகள் நடைபெற்றன.

இருப்பினும் அது வெற்றிகரமாக வலம் வந்துவிடவில்லை. தற்போது 10 பொறியாளர்களைக் கொண்ட குழுவினர் மொசில்லா ஃபயர் ஃபாக்ஸ் ப்ரெளசரின் கட்டளை சொற்களை தமிழுக்கு மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதில் file என்பதற்கு கோப்பு, preferences என்பதற்கு விருப்பங்கள் என்றும் copy என்பதற்கு நகல் எடு என்றும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. Firefox உலாவி பெங்காலி, ஹிந்தி, குஜராத்தி, மலையாளம், மராத்தி, பஞ்சாபி மற்றும் இன்னும் சில இந்திய பிராந்திய மொழிகளில் உட்பட உலகம் முழுவதும் மேற்பட்ட 120 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த மொழிகளில் வழக்கமாக ஆங்கிலம் கலந்த மற்றும் வட்டார மொழியில் உள்ளது. இப்போது ப்ரெளசர் தமிழ் மொழி ஆதரவாக தொடங்கியது. இந்த தமிழாக்கம் செய்யப்பட்ட மொசில்லா ஃபயர் ஃபாக்ஸ் அடுத்த 3 அல்லது 4 வாரங்களில் வெளியிடப்பட இருக்கிறது. நேவிகேஷன் பார், அமைப்புகள், வரலாறு, பயன்பாட்டு கருவிகள், மற்ற வழிமுறைகள் மற்றும் பதிவிறக்க பாதைகள் உட்பட முழு இடைமுகமும், உள்ளூர் மொழியில் இருக்கும். அதற்காக தமிழ் கீபோர்டு தேவை இல்லை.

மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் ப்ரெளசர் இப்போது பயன்படுத்த தயாராக இருக்கிறது. பயனர் Mozilla.org வலைத்தளத்தில் இருந்து தமிழில் பிளக் பதிவிறக்கும் மூலம் நிறுவ முடியும். (Home> Firefox> Languages). இந்திய பயனர்களுக்கு, மோசில்லா சிறந்த Firefox ப்ரெளசர் அறியப்படுகிறது, ஆனால் அது மேம்படுத்தப்பட்ட மென்பொருள் திட்டங்கள், மானியங்கள் மற்றும் நிச்சயதார்த்தம் மற்றும் கல்வி போன்ற மோஸிலா Webmaker முயற்சிகளை கொண்டுள்ளது.




Youtube – சில அடிப்படை தகவல்கள்




ஆன்லைனில் நமக்கான டிவி சேனல் என்றால் அது Youtube தான். நிறைய நண்பர்கள் அதைப் பற்றிய பதிவு எழுதிய உடன் நிறைய சந்தேகங்கள் கேட்கிறார்கள். Youtube குறித்த முந்தைய பதிவுகளின் ஆரம்ப பாகமாக இருந்திருக்க வேண்டிய அவற்றை  இப்போது எழுதுகிறேன். 
ஒரு வீடியோவை Upload செய்வது எப்படி ?
உங்களுக்கு ஜிமெயில் கணக்கு இருந்தால் போதும் நீங்கள் நேரடியாக ஒரு வீடியோவை Upload செய்யலாம். www.youtube.com தளத்துக்கு சென்று Upload என்பதை கிளிக் செய்தால் Upload செய்யும் வசதி இருக்கும். 
இதில் நான்கு வகையான முறையில் Upload செய்யலாம். 
Public – இணையத்தில் எவரும் பார்க்கலாம். 
Unlisted – நீங்கள் லிங்க் கொடுத்தால் மட்டுமே பார்க்க முடியும். 
Private – உங்களால் மட்டுமே பார்க்க முடியும். 
Scheduled – நீங்கள் கொடுக்கும் நேரத்தில் Publish ஆகும். 
எப்படி Title, Description, Tags கொடுப்பது ? 
என்ன வீடியோ என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா. அதற்கு சம்பந்தமான ஆங்கில டைட்டில் வைத்தால் நிறைய Views வர வாய்ப்பு உள்ளது. வீடியோவில் என்ன உள்ளது, யார் உள்ளார்கள் என்பதை Description பகுதியில் தர வேண்டும். எப்படி Tags – கொடுப்பது என்பது இந்த பதிவில் உள்ளது Youtube கொஞ்சம் ரகசியங்கள்
Enhancements என்றால் என்ன ? 
உங்கள் வீடியோவை Upload செய்த பின் அதில் சில சிறிய எடிட்டிங் வேலைகளை செய்ய இது உதவுகிறது. உங்கள் வீடியோவை நீங்கள் பார்க்கும் போது டைட்டில்க்கு மேலே Enhancements என்பதை கிளிக் செய்தால் இந்த பக்கத்துக்கு வரலாம். இதில் உங்கள் வீடியோ எப்படி இருக்க வேண்டும் என்பதை அதில் இருக்கும் படங்களை கொண்டு தெரிவு செய்யலாம். 
இதைப் பற்றிய விரிவான பதிவு - Youtube தரும் அசத்தலான புதிய வசதி
Video Manager என்றால் என்ன? 

Uploads பகுதியில் நீங்கள் Upload செய்த அனைத்து வீடியோக்களும் இருக்கும் பகுதி இது. இதில் ஒவ்வொரு வீடியோவுக்கும் கீழே உள்ள Edit என்பதை கிளிக் செய்தால் Info and Settings, Enhancements, Audio, Annotations, Captions, Download as MP4, Promote போன்ற வசதிகள் இருக்கும்.
Playlist – இதில் நீங்கள் உருவாக்கிய Playlist- கள் இருக்கும். இதை உருவாக்க கீழே படிக்கவும். 
History – நீங்கள் பார்த்த வீடியோக்கள் இதில் இருக்கும். 
Search History – நீங்கள் Youtube- தேடிய சொற்கள் இதில் இருக்கும். 
Watch Later – பின்னர் பார்க்கலாம் என்று நீங்கள் கொடுத்த வீடியோக்கள் இதில் இருக்கும். 
Favorite – நீங்கள் Favorite செய்த வீடியோக்கள் இதில் இருக்கும். 
Likes – நீங்கள் லைக் செய்த வீடியோக்கள் இதில் இருக்கும். 
ஒரு Playlist உருவாக்குவது எப்படி?
உங்கள் வீடியோவுக்கு உருவாக்க
Video Manager பகுதியில் எந்த வீடியோக்களை Playlsit – இல் சேர்க்க வேண்டுமோ அவற்றை வீடியோவுக்கு இடது பக்கம் உள்ள Radio Button மீது கிளிக் செய்து மேலே உள்ள Add To என்பதை கிளிக் செய்தால் Add New Playlist என்று வரும் அதில் சேர்த்து விடலாம். 
நீங்கள் பார்க்கும் மற்றவர் வீடியோக்களை Playlist ஆக்க. 
பார்க்கும் குறிப்பிட்ட வீடியோவுக்கு கீழே உள்ள Add To என்பதை கிளிக் செய்து புதிய Playlist உருவாக்கி கொடுக்கலாம். அல்லது Favorite என்பதில் கொடுக்கலாம்.  
குறிப்பிட்ட Playlist – ஐ நண்பர்களுடன் Share செய்ய Video Manager பகுதியில் Playlist என்பதை கிளிக் செய்து Playlist பெயர் மீது கிளிக் செய்து அந்த Link – ஐ நண்பர்களுடன் பகிரலாம். இதன் மூலம் அவர்கள் அனைத்து வீடியோக்களையும் வரிசையாக காண முடியும். 
நீங்கள் Playlist உருவாக்கும் போதே அது Public அல்லது Private என்று தெரிவு செய்து கொடுக்கும் வசதியும் உள்ளது. 
வீடியோவை Delete செய்வது எப்படி ?
Video Manager பகுதியில் குறிப்பிட்ட வீடியோ[க்களை] Radio Button மீது கிளிக் செய்து தெரிவு செய்து Actions என்பதை கிளிக் செய்தால் Delete வசதி வரும். அத்தோடு Video Privacy- ஐ (Public, Private, Unlisted) மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம். 
ஏற்கனவே உள்ள வீடியோ, ஆடியோக்களை பயன்படுத்துவது எப்படி? 
Youtube-இல் உள்ள நிறைய வீடியோக்களில் நீங்கள் பலவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும். அவை பற்றி அறிய பிளாக்கர் நண்பன் தளத்தின் இந்த பதிவை படிக்கவும் – ரீமிக்ஸ் செய்ய 40 லட்சம் வீடியோக்கள்

தமிழில் எழுத சிறந்த ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் எது ?




ஆன்ட்ராய்ட் போன்கள் மற்றும் டேப்லெட்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்ட்ராய்ட் பயனர்கள் நிறைய பேரின் கேள்வி அதில் எப்படி தமிழில் எழுதுவது, எது சிறந்த அப்ளிகேஷன் ?
கூகுளே ப்ளேயில் இதற்கு நிறைய அப்ளிகேஷன்கள் இருக்கின்றன என்றாலும் மிகச்சில மட்டுமே தமிழில் எழுதுவதற்கு எளிதாக உள்ளன. இவற்றில் KM Keyboard என்ற அப்ளிகேஷன் குறித்து ஏற்கனவே ஒரு பதிவை கற்போமில் எழுதி உள்ளேன். ஆனால் தற்போது அதை விட எளிதான அப்ளிகேஷன்கள் வந்துவிட்டன. அவற்றில் இரண்டை இதில் பார்ப்போம்.

1. Sellinam

Sellinam app
தற்போது நான் பயன்படுத்தும் அப்ளிகேஷன் இதுதான். மிக எளிதாக எழுதும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனில் கீபோர்ட் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் உள்ளது. தமிழ் மொழி கீபோர்டை பயன்படுத்தி எழுத விரும்பும் நண்பர்களுக்கு உகந்த அப்ளிகேஷன் இது தான். அதற்கான எழுதுவது கடினமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம், மிக மிக எளிதாகவே உள்ளது. இதன் இன்னொரு சிறப்பு தமிழில் எழுதும் அதே நேரத்தில் உடனே ஆங்கிலத்துக்கு மாற இடது கீழ் மூலையில் உள்ள “மு/த” என்பதை கிளிக் செய்தால் போதும். அதே போல தான் தமிழுக்கும். குறிப்பிட்ட வார்த்தையை முடிக்கும் முன்பே Dictionary மூலம் அந்த வார்த்தை Suggestion ஆக வருவதும் ஒரு சிறப்பம்சம்.
Sellinam
இதை தரவிறக்க – Sellinam

2. UKeyboard

UKeyboard appசெல்லினம் போலவே உள்ள இன்னொரு மாற்று கீபோர்டு இது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் தமிழ் மட்டுமின்றி இன்னும் 21 மொழிகளில் எழுதும் வசதி உள்ளது. தமிழில் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு குறிப்பாக Google Tamil Transliteration பயன்படுத்தி கணினியில் தமிழில் எழுதுபவர்களுக்கு உகந்த Application இது. இதிலும் குறிப்பிட்ட வார்த்தையை முடிக்கும் முன்பே Dictionary மூலம் அந்த வார்த்தை Suggestion ஆக வருகிறது. மீண்டும் ஆங்கிலத்தில் எழுத நீங்கள் Input Method -ஐ தான் மாற்ற வேண்டும். இதன் ஒரு குறை சில சமயம் ஆங்கிலத்தில் எழுதுவது தமிழுக்கு மாறுவது இல்லை.
UKeyboard
இதை தரவிறக்க - Keyboard Beta
இரண்டையும் ஒப்பிடும் போது Sellinam தான் சிறந்த அப்ளிகேஷன் என்று தோன்றுகிறது. நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி இருப்பின் உங்கள் அனுபவத்தை கமெண்ட் மூலம் சொல்லுங்கள்.


Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?





Youtube ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபலமான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது. இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை.  எப்படி என்று பார்ப்போம்.
Charlie bit my finger என்ற வீடியோவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இரண்டு சிறுவர்கள் இருக்கும் இந்த வீடியோ சேனல் பல கோடிகளை சம்பாதித்து உள்ளது. இதே போல நிறைய பேர் உள்ளார்கள். Digital Inspiration தளத்தின் நிர்வாகி அமித் அகர்வால் சேனல் இது Labnol. இவர் இந்தியாவின் மிகப் பெரிய Tech Blogger. தனது தளம் மட்டும் இன்றி Youtube மூலமும் இவர் வருமானம் பெறுகிறார்.
தனி நபர்கள் மட்டும் இன்றி தொலைக்காட்சி நிறுவனங்கள், மற்ற நிறுவனங்கள் பலவும் Youtube மூலம் பணம் சம்பாதிக்கின்றன. விஜய் தொலைக்காட்சியின் சேனல். STARVIJAY
முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன். 
நடிக்க தெரிய வேண்டும். அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும்.
எப்படி சம்பாதிப்பது
Step – 1
ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடிங்கள். நாய்குட்டி, பூனை குட்டி, உங்கள் குழந்தை செய்யும் சேட்டை, உங்கள் மனைவி செய்யும் சமையலை எப்படி என்ற குறிப்போடு, மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எது வேண்டும் என்றாலும்.
Step – 2 
இப்போது எடுத்த வீடியோவை உங்கள் கணினியில் Movie Maker போன்ற வீடியோ எடிட்டிங் மென்பொருளில் போட்டு மெருகேற்ற வேண்டும். ஒன்றும் பெரிய விசயமில்லை, தேவை இல்லாத இடங்களை நீக்க போகிறீர்கள். பின்னணியில் குரல் சேர்க்க வேண்டும் என்றால்  ரெகார்ட் செய்து அதையும் சேருங்கள்.
ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், “வீடியோவை பார்க்கும் படி எடிட் செய்யுங்கள்”
Step – 3 
இப்போது Youtube தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து Upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவை Upload செய்யுங்கள்.
Step – 4
இப்போது உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். எளிதில் கவரும் வண்ணம் ஆங்கிலத்தில் தலைப்பு வையுங்கள், வீடியோவில் என்ன உள்ளது என Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதாக வார்த்தைகளாக கொடுக்க வேண்டும். எப்படி Tags கொடுப்பது என்று Youtube கொஞ்சம் ரகசியங்கள் என்ற பதிவில் சொல்லி உள்ளேன்.
இப்போது “Public” என்று தெரிவு செய்து Save செய்து விடுங்கள்.
Step – 5 
முதல் நான்கு ஸ்டெப்களை தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள்.
Step – 6 
உங்கள் வீடியோக்களுக்கு நிறைய views வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல ”Invitation to earn revenue from your YouTube videos” என்று  ஒரு மின்னஞ்சல் அனுப்பும்.

அதில் உள்ள லிங்க்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தரவேண்டும்.
அந்த லிங்க் - YouTube Partner Program: Interest Form
இப்போது Youtube உங்கள் வீடியோக்களை சோதிக்கும், நிறைய வீடியோக்கள் இருக்க வேண்டும், நிறைய பேர் பார்க்க வேண்டும். இதை தான் Youtube எதிர்பார்க்கும். எல்லாம் சரியாக இருப்பின் உங்களுக்கு Partner என்ற அந்தஸ்து வழங்கப்படும்.
பலருக்கு இது நிராகரிக்கப் படலாம்.மீண்டும் Apply செய்ய இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடியோ upload செய்யாமல் இருக்காதீர்கள். தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள். இரண்டு மாதத்துக்கு பின் இன்னும் அதிக Video, Views உடன் மீண்டும் Apply செய்யுங்கள்.
இடையில் உங்களுக்கு Adsense கணக்கு இருந்தால் அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் Youtube வழங்கும். [என் லெவல் இது தான்]. இதில் வீடியோ Upload செய்த உடன் Monetize My Video என்பதை கொடுக்க வேண்டும். இப்போது உங்கள் வீடியோ குறிப்பிட்ட சில நாட்களுக்கு Review செய்யப்படும். வீடியோ உங்களுடையது என்று Youtube உறுதி செய்த உடன், Monetized என்று ஆகி விடும்.
Parter, Adsense இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். Adsense கணக்கு மூலம் வரும் Earning, Partner ஐ விட குறைவாக இருக்கும். [Partner கணக்குக்கு 1000 Views க்கு 2.50$ என்று சொல்லப்படுகிறது]
இதில் Adsense கணக்கை சேர்க்க, நீங்கள் Youtube கணக்கில் நுழைந்த உடன், Youtube இதை கேட்கும். கேட்கவில்லை என்றால் காத்திருக்கவும்.
இரண்டில் எது உங்களுக்கு கிடைத்தாலும், உங்கள் வீடியோவுக்கு Youtube இரண்டு வகையான விளம்பரங்களை காட்டும்
Overlay in-video ads  - வீடியோவின் கீழே வரும் குட்டி விளம்பரம்
TrueView in-stream ads – வீடியோவுக்கு முன் வரும் சில நொடி விளம்பர வீடியோ 
நீங்கள் எவ்வளவு வீடியோ upload செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ என்றால் அதற்கேற்ப தான் வருமானமும்.
எந்த மாதிரி வீடியோக்களை Upload செய்யலாம்
சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தள வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள். போன்றவை.
கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் இன்னும் அதிகமாக வருமானம் பெற முடியும். தமிழும் கூட பயன்படுத்தலாம்.
ஆனால் சினிமா வீடியோ, பாடல் எதையும் நீங்கள் இதில் பயன்படுத்த முடியாது. வீடியோவானது முழுக்க முழுக்க உங்களுடையதாக உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் Youtube தரும் Audio swap வசதியை பயன்படுத்தாதீர்கள். அந்த ஆடியோக்களை பயன்படுத்தினால் அதில் வரும் விளம்பரம் மூலம் வரும் வருமானம் உங்களுக்கு வராது.



Youtube வீடியோக்களை VLC Player மூலம் டவுன்லோட் செய்வது எப்படி? – VLC#3



கடந்த இரண்டு VLC பற்றிய பதிவுகளில் பல அரிய பயனுள்ள செயல்களை எப்படி VLC மூலம் செய்வது என்று சொல்லி இருந்தேன். இன்றைய பதிவு நிறைய பேருக்கு புதியது. ஆம் இன்றைய பதிவில் Youtube வீடியோ ஒன்றை எப்படி VLC மூலம் டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம்.


1. முதலில் Youtube -இல் எந்த வீடியோவை டவுன்லோட் செய்ய வேண்டுமோ, அந்த வீடியோ முகவரியை காபி செய்து கொள்ளவும். 
2. இப்போது VLC Player – ஐ ஓபன் செய்து Media –> Open Network Stream என்பதை தெரிவு செய்யவும். 
3. கீழே உள்ளது போல, அதில் வீடியோ முகவரியை கொடுத்து Play கொடுக்கவும். 
4. இப்போது வீடியோவின் Thumbnail இமேஜ் வரும். உடனே Play பட்டனை கிளிக் செய்யவும். இப்போது வீடியோ ஸ்ட்ரீம் ஆகி play ஆக ஆரம்பிக்கும். 
இப்போது உங்கள் வீடியோவை இரண்டு வழிகளில் தரவிறக்கம் செய்யலாம். ஒன்று Network Stream பகுதியில் Play கொடுப்பதற்கு பதிலாக convert என்று கொடுப்பதன் மூலம். இது எல்லா வீடியோவுக்கும் வேலை செய்யாது என்பதால் இது உதவவில்லை என்றால் அடுத்த முயற்சி. 
இப்போது உங்கள் வீடியோ play ஆகிக் கொண்டிருக்க வேண்டும். அதில் Tools >> Media Information என்பதை தெரிவு செய்யவும். அதில் கீழே Location என்ற ஒன்று இருக்கும். அதில் உள்ள முகவரி மீது ரைட் கிளிக் செய்து Select All கொடுத்து மீண்டும் ரைட் கிளிக் செய்து Copy கொடுக்கவும். 
இதை Firefox உலவியின் Address Bar-இல் கொடுக்கவும். அது இதனை Play செய்ய ஆரம்பிக்கும். அதில் ரைட் கிளிக் செய்து Save Video As என்பதை கிளிக் செய்து Save செய்து விடலாம். இது “WebM” என்ற Format-இல் Save ஆகும். இது எல்லா பிளேயர்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு Format தான். 
சில வீடியோக்களை இதன் மூலம் டவுன்லோட் செய்ய இயலாது. அவை பெரும்பாலும் RTMP என்ற வகையறாவாக இருக்கும். படத்தை ஒரிஜினல் குவாலிட்டியில் தரவிறக்கம் செய்ய இது தான் சரியான வழி. 
அதே போல மேலும் பல தளங்களில் இருந்தும் வீடியோக்களை VLC Player-இல் பார்க்கலாம், டவுன்லோட் செய்யலாம்.

தமிழ் தமிழ் தமிழ் – எங்கும் தமிழ் எதிலும் தமிழ்




இணையத்தில் உலகின் பெரும்பாலான மொழிகள் புழக்கத்தில் இருந்தாலும். நம் தாய்மொழி தமிழ்மொழிக்கு இடமே தனி. கிட்டதட்ட உங்களுக்கு தேவையான அனைத்தும் தமிழிலேயே இணையத்தில் கிடைக்கிறது. அவைகளைப் பற்றிய ஒரு அலசலே இந்தப் பதிவு.
அலைபேசியில் தமிழ்:
அலைபேசி என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்ட போது. ஆங்கிலம் மட்டுமே கையாளப்பட்ட நிலையில், பல தமிழ் உணர்வாளர்களின் முயற்சியில் இன்று வந்த Android வரை அனைத்திலும் தமிழ் வந்துவிட்டது.
அலைபேசியில் தமிழில் படிக்க (இணைய இணைப்பு உள்ள அலைபேசிக்கு) இன்று பல உலவிகள் உள்ளன. அவற்றில் சிறந்த ஒன்று Opera Mini. அதில் எப்படி தமிழில் படிக்க முடியும் என்று கேட்பவர்கள். – GNU/Linux கதிர்வேல் அவர்களின் இந்தப் பதிவை படிக்கவும்.
Opera Mini Browser (கைப்பேசி பதிப்பு) -ல் தமிழ் எழுத்துருக்களை தெரியவைப்பது எப்படி?
 
ஆன்ட்ராயிடில் ஒபேரா மினி
ஆன்ட்ராயிடில் தமிழ்:
ஆன்ட்ராய்ட் அலைபேசிகள் ஐ-போன் களை விட அதிக பயனர்களை கொண்டு வெற்றி நடை போட்டு வருகிறது. இதிலும் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். அதன் கூகுள் ப்ளே மார்க்கெட்டில் சென்று தேவையான படி தரவிறக்கம் செய்யலாம்.
இதில் நான் பயன்படுத்துவது KM Tamil Unicode Keyboard. மிக எளிதாக தட்டச்சு செய்ய உதவும் . உதாரணம்: ammaa – அம்மா.
a –  
m- ம் 
maa- மா 
இது மட்டும் இன்றி தமிழ் என்று தேடினால் ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு நிறைய பயன்பாடுகள் கிடைக்கின்றன. நாள்காட்டியில் ஆரம்பித்து, திருக்குறள், செய்திகள், சிறுகதைகள், அகராதி, மதம் சார்ந்த பயன்பாடுகள் (பகவத் கீதை, குரான், பைபிள்), தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி என எண்ணற்ற பயன்பாடுகள்.
ஐபோனில் தமிழ்: 

ஐ-போனில் தமிழில் மொழி மாற்றம் செய்யும் வசதி உள்ளது, அதை பிளாக்கர் நண்பன் தளத்தில் ஆப்பிள் ஐபோனில் தமிழாக்கம் செய்யலாம் என்ற பதிவில் காணலாம்.

ஐபோனில் தமிழில் தட்டச்சு செய்ய Sellinam என்ற பயன்பாட்டை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
இணையத்தில் தமிழ்:

இணையத்தில் தமிழ் வந்து பல ஆண்டுகள் ஆகிய போதும், இன்னும் சில நண்பர்களுக்கு எப்படி தமிழில் தட்டச்சு செய்வது, பயன்படுத்துவது என்று தெரியவில்லை.
முதலில் தமிழில் தட்டச்சு செய்ய விரும்பும் நண்பர்கள்,மிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி? – புதியவர்களுக்கு என்ற பதிவை படிக்கவும்.
தற்போது மிகப் பிரபலமாக உள்ள சமூக வலைத்தளமான Facebook-க்கை தமிழில் பயன்படுத்த முடியும் என்று தெரியுமா? எப்படி என்று அறிய இந்தப் பதிவை படிக்கவும். Facebook- இதெல்லாம் கூட இருக்கா?
அடுத்து கூகுள் பிளஸ் தளத்தை தமிழில் பயன்படுத்த வந்தேமாதரம் சசிகுமார் அவர்களின் கூகுள் பிளஸ் தளத்தை தமிழில் மாற்றுவது எப்படி? என்ற பதிவை படிக்கவும்.
வலைத்தளங்களை தமிழில் மொழிமாற்றம் செய்ய:
எந்த மொழியில் இருக்கும் தளத்தையும் தமிழில் மாற்ற Google Translate தளத்தை பயன்படுத்தவும். கிட்டத்தட்ட அறுபது மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்ய இயலும். கிட்டத்தட்ட சரியான மொழி மாற்றத்தை தருகிறது.
தமிழ் தமிழ் தமிழ்:
மற்றபடி கணினியில் தமிழ் வரவில்லை என்றால் தமிழில் தட்டச்சு செய்ய நான் சொல்லி இருக்கும் வழிகளை படித்தாலே, வந்து விடும்.

வித விதமான தமிழ் Font களை கணினியில் பயன்படுத்த வேண்டுமா? ந.ர.செ. ராஜ்குமார் அவர்களின் அழகான தமிழ் ஃபாண்ட்களை இலவசமாய் பெற்றிடுங்கள் என்பதில் சென்று பெற்றிடுங்களேன்.
கணினி பயன்படுத்தும் பெரும்பாலான அன்பர்கள் விண்டோஸ் ஒன்றையே நாடி இருக்க, MAC கணினி பயன்படுத்தும் அன்பர்களுக்கு தமிழ் தட்டச்சு செய்யும் வசதியை மேக் ஓ.எஸ்10.6ல் யுனிகோட் தமிழ் இந்தப் பதிவில் ராஜ்குமார் சொல்லி உள்ளார்.
அடுத்து லினக்ஸ் operating System. இதில் மிக முக்கியமானது உபுண்டு.இந்த உபுண்டுவில் தமிழில் தட்டச்சு செய்ய லினக்ஸில் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது? என்ற பதிவை படிக்கவும். மேலும் உபுண்டு பற்றிய தகவல்களை தமிழில் உபுண்டு தமிழ் என்ற  தளத்தில் பெறலாம்.
இணையத்தில் முதல் தமிழ் தொழில்நுட்ப மாத இதழ் :

ஒரே நபரால் மட்டுமே அனைத்து தொழில்நுட்ப தளங்களையும் படிக்க முடியாது என்ற காரணத்தால், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க உருவானதே கற்போம் என்ற இணைய மாத இதழ். முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை மட்டுமே தாங்கி வரும் இந்த இதழ், இந்த தளத்தில் இருந்தே வெளியிடப்படுகிறது. இதுவரை வந்த இதழ்களை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
நீங்களும் ஒரு தொழில்நுட்ப பதிவர் என்றால், உங்களையும் இதில் இணைத்துக் கொள்ள விருப்பம் இருப்பின், இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்” என்ற பதிவின் மூலம் எப்படி என்பதை அறியலாம். அதே பதிவில் கற்போம் இதழில் தங்கள் பதிவுகளை பயன்படுத்த அனுமதி தந்து இருக்கும் வலைப்பூக்களை காணலாம்.
எதற்கு இந்தப் பதிவு

மிக முக்கியமான தேடுதல் தளமான கூகுளில் தமிழ் என்று தேடினால் சில ஆபாச தளங்கள் வருகின்றன. அதை தவிர்க்கும் பொருட்டே இந்தப் பதிவு. இதனை பிளாக்கர் நண்பன் “அப்துல் பாஸித்” அவர்கள் தமிழ் என்ற பதிவின் மூலம் ஆரம்பித்தார்.  நீங்களும் ஒரு வலைப்பதிவர் என்றால், இந்த முயற்சியில் பங்கெடுக்க வேண்டும். தமிழ் இலக்கியம், நாடகம், சிறுகதை என என எதை பற்றி வேண்டும் என்றாலும் எழுதுங்கள்.


ஆன்ட்ராய்ட் போன்களில் புதிதாக வந்துள்ள Google Settings icon எதற்காக ?



ஆன்ட்ராய்ட் பயனர்கள் சமீபத்தில் இணையத்தை பயன்படுத்தி இருந்தால் அவர்கள் போனில் Applications பகுதியில் புதிதாக Google Settings என்றொரு icon வந்திருக்கும். இதை நாம் தரவிறக்கம் செய்யவில்லையே எப்படி வந்தது என்று நிறைய பேர் யோசித்து இருப்போம்.
இது கூகுள் புதியதாக வெளியிட்டுள்ள ஒரு Extension. இதை நாம் Uninstall செய்ய இயலாது. இதை ஓபன் செய்தால் பெரும்பாலானவர்களுக்கு கீழே உள்ளது போல வரும். 
இவற்றில் பல மற்ற ஏதேனும் ஒரு Application மூலம் நாம் பயன்படுத்துவதாக உள்ளது. உதாரணம் Maps & Latitude, Google+, Location, Search மற்றும் Ads போன்றவை (பலருக்கு ஒன்றிரண்டு மட்டும் இருக்கக் கூடும்). புதிதாக வந்துள்ள ஒரே வசதி Apps With Google+ Sign-in. சமீபத்தில் பேஸ்புக் போல மற்ற தளங்களில் Google Plus கணக்கை பயன்படுத்தி Sign in செய்யும் வசதி அறிமுகமானது. அப்படி நீங்கள் Sign-in செய்த தளங்கள் இதில் இருக்கும். 
சரி இது என்ன செய்யும் என்று நீங்கள் கேட்டால், எதுவுமே செய்யாது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே உள்ளதாக நான் குறிப்பிட்டுள்ளவற்றை நீங்கள் Click செய்தால் அந்த குறிப்பிட்ட வசதிக்கு தான் நீங்கள் செல்வீர்கள். உதாரணமாக Maps & Latitude என்பதை கிளிக் செய்தால் கூகுள் மேப்ஸ் App Open ஆகும். 
இதை பார்த்து பயப்பட வேண்டாம் என்று சொல்லவே இந்த பதிவு. 
எனக்கு இந்த வசதி வரவில்லையே என்பவர்கள் கொஞ்சம் நாட்கள்  காத்திருங்கள் வந்து விடும். உடனடியாக வேண்டும் என்பவர்கள் Settings >> Apps பகுதியில் Google Play Services என்பதை கிளிக் செய்து Clear Data கொடுத்து விட்டு ஒரு முறை உங்கள் போனை Off செய்து On செய்யுங்கள். இப்போது உங்கள் போனில் Internet வசதி இருந்தால் Google Settings Icon வந்து விடும்.

1 comment: